கடக ராசி – லக்னம்
🔷இவர்களின் 7- ஆம் வீடு மகரம் எனும் சனி வீடு.சூரியன்,சந்திரன்,செவ்வாய் சாரம் வாங்கிய உத்திராடம், திருவோணம்,அவிட்ட நட்சத்திரங்கள் உள்ளன.
🔷இவர்களின் வாழ்க்கைத் துணை சிறிது பொறுமை உடையவராகவும் , கோபம் , பிடிவாதம் , கர்வம் நிறைய உடையவராகவும் இருப்பர்.
🔷மகரம் என்பது கால புருஷ தத்துவப்படி 10-ஆம் வீடு எனவே , இந்த ராசி – லக்னத்தாரின் வாழ்க்கைத் துணைவர் மிகவும் கௌரவம் பார்ப்பவராக இருப்பார்.
🔷கடக லக்ன , ராசிக்கு 7 – ஆம் அதிபதியான சனி உச்சமானால் , நல்ல சுகபோகத்துடன்- நிறைந்த கௌரவத்துடன் எல்லாரும் வந்து பணிவுடன் பேசும் அளவுக்கு பெரிய மனிதத்தன்மையோடு இருப்பர்.
🔷திருமணம் ஆனவுடன் சிலருக்கு மாமனாரே நல்ல வேலை வாங்கிக் கொடுத்தோ அல்லது வியாபாரம் ஆரம்பித்துக் கொடுத்தோ பெருமைப்படுத்துவர்.
🔷இதே கடக லக்ன – ராசிக்கு 7 – ஆம் அதிபதி நீசமானால் அந்தோ பரிதாபம்தான் . திருமணம் ஆனவுடன் வேலை போய் , கெளரவம் இழந்து மிகவும் கஷ்டப்படுவார்கள்.
🔷ஆண் கடக ராசிக்காரர்கள் என்றால் பராவாயில்லை ;கல்யாணம் ஆனவுடன் மனைவியை வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்பதோடு சரி . ஆனால் கடக ராசி – லக்ன பெண்களுக்கு 7 – ஆம் அதிபதி நீசமாகியிருந்தால் திருமணம் ஆனவுடன் கணவருக்கு வேலை போய்விட்டால் நிறைய கஷ்டம் நீசபங்கம் ஆகியிருந்தால் முதலில் வேலை போய் , பிறகு கிடைத்துவிடும்.
🔷இதைப் பிடித்து கடக லக்ன பெண்கள் பயப்பட வேண்டாம். உங்கள் ஜாதகத்தில் புதன் நன்றாக இருப்பின் கணவரின் மாத சம்பள வேலை நிலைக்கும்.
🔷இவர்களின் மாமியார் பொல்லாதவராகவும் மாமனார் சாதுவாகவும் சிலசமயம் வேடிக்கைப் பேச்சு உடையவராகவும் இருப்பார்.
🔷இவர்களின் மாமனார் வீடு தோட்டம் , வயல்வெளி , பூங்கா போன்றவற்றுக்கு அருகில் இருக்கும் . தெற்கு அல்லது மேற்கு திசையில் துணை அமையும்.
🔷போ , ஜ , ஜி , ஸ்ரீ , ஜே , ஜோ , க , த , தீ(P,J,S,K,T,D) மற்றும் டா ஆகிய எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்கும்.