குரு சந்திரன் இணைவு
கடகம்
கடகத்திற்கு லக்னாதிபதி சந்திரன், குரு ருண , ரோக , சத்ரு ஸ்தானாதிபதி பாக்கியாதிபதி.
குரு , சந்திரன் சம்பந்தம் , இணைவு எந்தவிதத்தில் இருந்தாலும் தேவைக்கு மிகுதியாகவே பொருள் கடனாகவோ , உழைப்பாலோ கிடைக்கும். லக்னத்தில் குரு உச்சம்பெற்றாலும் , தனுசில் ஆட்சிபெற்றாலும் , குருவின் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தாலும் , சந்திரனின் நட்சத்திரத்தில் குரு இருந்தாலும் கடன் கதவைத் தட்டும்.
குரு , சந்திரனுக்கு சனி , கேது சம்பந்த மில்லாதவரை கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை . ஏதாவதொரு வழியில் ‘ ரொட்டேஷன் ‘ செய்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
குருவுக்கு சனி , கேது சம்பந்தம் இருப்பவர்களின் கடன் ஜாதகரை உருத்தெரியாமலாக்கிவிடும்.
குரு மற்றும் கேது தசைக் காலங்களில் மிகுந்த கவனம் தேவை குருவே பாக்யாதிபதி, என்பதால் லக்னாதிபதியுடன் சேரும்பொழுது முன்னோர்களின் நல்லாசியும் இவர்களுக்கு உண்டு, இவர்களுக்கு பிறவி கடனும், பொருள் கடனும் தொடர்கதையாக இருக்கும். ஆனால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து விடுவார்கள்.
பரிகாரம்
திங்கள்கிழமை காலை 6:00 -7:00 மணி வரையிலான சந்திர ஹோரையில் சிவபெருமானை வழிபட கடன் தொல்லை கட்டுப்படும்.