கருடபுராணம்-மரித்தவனின் உயிர் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கருடபுராணம்-எமதர்மனைப் பற்றியும் , மரித்தவனின் உயிர் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதைப் பற்றியும் உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

உலக உயிர்களின் உயிரைப் பறித்துச் செல்லும் அதிகாரம் பெற்ற எமதர்மன் நெடிய உருவம் கொண்டவன்,அஞ்சனம் போன்ற கரிய நிறத்தைக் கொண்டவன்.நான்கு கரங்களில் அம்பு , சங்கு , கதை , பாசம் முதலிய ஆயுதங்களைத் தரித்தபடி மிகவும் ஒளிபொருந்திய தேகத்துடன் காட்சியளிக்கும் எமதர்மன் , எருமை வாகனத்தில் ஏறி பவனி வருவான்.எமதர்மன் நற்குணம் கொண்ட உயிரைக்கண்டு எளிதில் சாந்தப்படுகிறான்.அதேவேளையில் தீய கர்மங்கள் செய்த உயிரைக் கண்டு , கனலைப் போலக் கடுமையான கோபமும் கொள்கிறான்.

அத்தகைய எமதர்மனின் மாளிகை , பூவுலகிலிருந்து எண்பதாயிரம் காத தூரம் கொண்டது.ஒரு மனிதனின் மரண வேளை வந்தவுடன் , எமதர்மன் தன் தூதுவர்களிடம் அந்த மனிதனின் உயிரைப் பிடித்து வரும்படி கட்டளையிடுகிறான்.

மிகவும் கொடூரமான உருவத்துடனும் , சிவந்த கண்களுடனும் , கார்மேகம் போன்ற கரிய நிற ஆடையை உடுத்திய எமனின் தூதுவர்கள் , தங்கள் கைகளில் பாசம் , முசலம் போன்ற ஆயுதங்களைத் தாங்கியிருப்பார்கள்.அவ்வகையான மூவகைத் தூதுவர்கள் எமதர்மனின் உத்தரவின்படி மரிப்பவனின் உயிரைப் பறித்துச் செல்ல வருவார்கள்.

அம்மூவரும் வாழ்நாள் முடிவுற்ற மனிதனின் உயிரை பாசத்தால் கட்டி , வாயு ரூபமான ஒரு தேகத்தினுள் அடைத்து எமலோகத்திற்குக் கூட்டிச் செல்வார்கள். எமனின் மாளிகையை அடைந்ததும் , ” தர்மராஜனே ! தாங்கள் உத்தரவிட்டவாறே வாழ்நாள் முடிவுற்ற இந்த மனிதனின் உயிரைக் கொண்டு வந்துவிட்டோம் . அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தங்கள் உத்தரவிற்காகக் காத்திருக்கிறோம் ! ‘ என்று பணிவோடு கூறுவார்கள்.

மகிஷ வாகனனாகிய எமதர்மராஜன் தனது தூதுவர்களை நோக்கி , ” கிங்கரர்களே ! நல்லது ! நல்லது ! இந்த ஜீவனை மீண்டும் அவன் பூலோகத்தில் வாழ்ந்த இடத்திலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு , இன்றிலிருந்து பன்னிரெண்டு நாட்கள் கழிந்த பிறகு மீண்டும் நம் ராஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து நிறுத்துங்கள் ! ” என்று உத்தரவிடுவான்.

எம தூதர்களும் எமதர்மராஜனின் ஆணைப்படி மறுகணமே அந்த ஜீவனைப் பிடித்து , சில நொடிகளிலேயே எண்பத்தாறாயிரம் காத தூரத்தையும் கடந்து , அந்த ஜீவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள் . ஒருவன் மரித்தவுடன் , அவனது ஜீவன் எமதூதர்களால் எமலோகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு , சில நிமிடங்களிலேயே மீண்டும் பூலோகத்திற்குத் திரும்பி வருவதால் , ஒருவன் மரித்து சில நாழிகைப் பொழுது கழிந்த பிறகே அவனைப் புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ வேண்டும்.

கருடபுராணம்

இவ்வேளையில் ஜீவனுக்கு வாயுரூபம் மட்டுமே உண்டு . எம தூதர்களால் பூலோகத்தில் கொண்டுவிடப்பட்ட அந்த ஜீவன் , தன் சிதை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று , தன் உடலுக்குள் மீண்டும் புகமுடியாது வருந்துவான் . தான் இதுநாள்வரை தங்கியிருந்த உடலானது தன் கண்முன்னாலேயே எரிந்து சாம்பலாவதைப் பார்த்து , ” ஐயோ ! ஐயோ ! என் உடல் நெருப்பில் அழிகிறதே ! என்று வாய்விட்டு கதறி அழுவான் . அதேவேளையில் அந்த ஜீவன் , தான் பூலோகத்தில் வாழும் காலத்தில் புண்ணியச் செயல்களைச் செய்து . நற்கதி பெற்ற ஜீவனாக இருந்தால் , ” பாவத்தின் ஆதாரமாக இருக்கும் இந்த உடல் நெருப்பில் எரிந்து அழிந்தது நல்லதே ! ” என்று மகிழ்ச்சி கொள்வான்.

கருடா !உடலானது சிதையில் வைக்கப்படும் நெருப்பில் , உச்சி முதல் பாதம் வரையிலான அனைத்து அங்கங் களும் எரிந்து சாம்பலான பிறகும் , அந்த ஜீவனுக்கு தன் உடலின் மீதுள்ள ஆசையும் , தான் சேர்த்து வைத்த உடைமைகளின் மீதான விருப்பமும் , தன் மனைவி , மக்கள் , உற்றார் , உறவினர் மீதான எண்ணமும் ஒழியாது.

சிதை நெருப்பில் உடலானது எரிந்து சாம்பலான பிறகு , ஒரு ஜீவனுக்கு வாயு சரீரம் மட்டுமே இருக்கும். அதன் பிறகு , அவனுடைய புத்திரன் பத்துநாட்கள் தொடர்ந்து இடுகின்ற பிண்டங்களாலேயே , அந்த ஜீவனுக்கு பிண்ட சரீரம் ஏற்படும்.

கருடபுராணம்
  • புத்திரன் இடும் முதல்நாள் பிண்டத்தால் , அந்த ஜீவனுக்கு சிரசு உண்டாகும் ;
  • இரண்டாம் நாள் இடும் பிண்டத்தால் கழுத்தும் , தோள்களும் உண்டாகின்றன ;
  • மூன்றாம் நாள் இடும் பிண்டத்தால் மார்பு உண்டாகும் ;
  • நான்காம் நாள் இடு பிண்டத்தால் வயிறு உண்டாகும் ;
  • ஐந்தாம் நாள் இடும் பிண்டத்தால் உந்தி உண்டாகும் ;
  • ஆறாம் நாள் இடும் பிண்டத்தால் பிருஷ்டம் உண்டாகும் ;
  • ஏழாம் நாள் இடும் பிண்டத்தால் இடுப்பு உண்டாகும் ;
  • எட்டாம் நாள் இடும் பிண்டத்தால் மர்மஉறுப்பு மற்றும் ஆசனவாய் உண்டா கின்றன ;
  • ஒன்பதாம் நாள் இடும் பிண்டத்தால் கால்கள்உண்டாகின்றன ;
  • பத்தாம் நாள் இடும் பிண்டத்தால் பிண்ட சரீரமானது பூரணம் பெறுகிறது .

பூரணமாய் பிண்ட சரீரம் பெற்ற ஜீவனுக்குக் கடுமையால பசியும் தாகமும் தோன்றும்.எனவே அந்த ஜீவன் , தான் தன் வாழ்நாளில் மனைவி , மக்களோடு வாழ்ந்த வீட்டைத் தே வரும். வீட்டினுள் செல்லாமல் , வாசலிலேயே நின்று , அந் வீட்டினுள் செல்வோரையும் வருவோரையும் பார்த்து , “ ஐயோ!எனக்குக் கடுமையாகப் பசிக்கிறதே ! தாகம் என்னை வாட்டுகிறதே ! ” என்று அலறி அழுது கொண்டிருப்பான்.

பதினொன்றாம் நாளிலும் பன்னிரெண்டாம் நாளிலும் பிராமணர் மூலம் புத்திரன் அந்த ஜீவனின் பொருட்டு கொடுக்கும் உணவை உண்டு , அந்த ஜீவன் ஓரளவு தன் பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்வான்.பதிமூன்றாம் நாள் எமதர்மராஜனின் உத்தரவுப்படி , எமதூதர்கள் , பிண்ட சரீரம் பெற்ற அந்த ஜீவனைக் கட்டி இழுத்துச் செல்ல வருவார்கள். எமதூதர்களின் கையில் அகப்பட்ட அந்த ஜீவன் , தன் வீட்டை ஏக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி செல்வான்.

Leave a Comment

error: Content is protected !!