கும்ப ராசி -கும்ப லக்னம்
🎯இவர்களின் 7-ம் வீடு சிம்மம். அதிபதி சூரியன். இதில் கேது, சுக்கிரன், சூரியன் சார நட்சத்திரங்களான மகம், பூரம், உத்திரம் இடம் பெறுகின்றன.
🎯இவர்களின் வாழ்க்கைத் துணைவர் மிக கம்பீரமானவராக கோபமுடையவராக- யாருக்கும் அஞ்சாதவராக தான் எனும் எண்ணம் கொண்டவராக இருப்பார்.
🎯ஆயினும் அழகோடு , அறிவும் உடையவராக இருப்பார். ஒரு கூட்டத்தில் இவர் மட்டும் தனித்து தெரிவார்.
🎯இவரின் தனித்தன்மை கும்ப லக்னத்தாருக்கு சிலசமயம் பிளஸ்ஸாகவும் , சிலசமயம் மைனஸாகவும் தெரியும்.
🎯கும்ப லக்ன ஜாதகரை அவரின் வாழ்க்கைத் துணைவர் அடக்கி ஆள்வார் . கும்ப லக்ன 7 – ஆம் அதிபதி உச்சமானால் சொல்ல முடியாத வீரத்தோடும் புகழோடும் செல்வாக்கோடும் இருப்பார்.
🎯அவரே நீசமாகிவிட்டால் அதிர்ஷ்டம் இல்லாதவராகவும் , திறமை இல்லாதவராகவும் அமைந்துவிடுவார் .
🎯கும்ப லக்ன மாமியார் தேள் கொட்டுவதுபோல் வெடுக்கென்று பேசுவார். மாமனார் கோபக்காரராக இருப்பார்.
🎯மாமனார் வீடு முட்டுச்சந்து அல்லது சற்று இருட்டான இடம் போன்றவற்றில் இருக்கும். சிலரின் மாமனார் வீடு மலை , காடு சார்ந்த இடங்களில் இருக்கும்.
🎯கிழக்கு திசையில் இருக்கும் .
🎯ம , மி , மு , மெ , மோ , ட , டி , டு , டே , ஓ , ஒள ல (M,D,O,L)ஆகிய எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.