குருபகவான்
குருபகவான் ஓர் இராசியில் ஓராண்டுகாலம் சஞ்சாரம் செய்கிறார். சில இராசிகளில் அவர் சஞ்சாரம் செய்யும் பொழுது நமது பாரத பூமியில் சில இடங்களில் தீர்த்தப் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன.
இவை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அவற்றுள் தமிழ்நாடு மிகவும் புகழ் பெற்றதாகும். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் குரு, சிம்ம இராசியிலும், சந்திரன், மகநட்சத்திரத்திலும், சூரியன் கும்ப ராசியிலும் இருக்கும். மாசி மாதப் பௌர்ணமி அன்று “மகாமகம்” நடைபெறும்,
- அதேபோல் குருபகவான் கன்னிஇராசியில் வரும்போது திருக்கழுக்குன்றத்தில் சங்கு தீர்த்தமும்
- குருபகவான் கும்ப இராசியில் வரும்போது ஹரித்துவாரில் கும்பமேளாதீர்த்தமும்
- குரு பகவான் மேஷத்தில் வரும் போது அலகாபத்தில் பிரயாகை தீர்த்தமும்,
- குருபகவான் கடகத்தில் வரும் போது நாசிக்கில் பஞ்சவடி தீர்த்தமும்
- குருபகவான் துலாத்தில் வரும்போது உஜ்ஜயினியில் மேளதீர்த்தமும் நடைபெறும்!