Homeஜோதிட குறிப்புகள்உங்கள் ஜாதகத்தில் உச்ச கிரகங்கள் உள்ளதா? அதிஷ்டசாலி என்பது எப்படி உணரலாம்?

உங்கள் ஜாதகத்தில் உச்ச கிரகங்கள் உள்ளதா? அதிஷ்டசாலி என்பது எப்படி உணரலாம்?

கிரகங்கள் உச்சம்

சூரியன் ஜெனன ஜாதகத்தில் மேஷத்தில் உச்சமாக பெற்றவர்கள் அரசாங்க வழியில் சிறப்பான வாழ்வினை அடைவார்கள். மிகவும் வலிமையான உடலைப் பெற்றவர்கள் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாதவர்கள். துன்பம் தரும் எந்த நோயும் இல்லாதவர்கள்.

ரிஷபத்தில் சந்திரனை உச்சமாக பெற்றவர்கள் அனைவராலும் விரும்பப்படுவார். விரும்பிய உணவைப் பெற்று அழகான வேலைப்பாடு உடைய ஆடை ஆபரணச் சேர்க்கை பெறுவார்கள்.

செவ்வாயை மகரத்தில் உச்சமாக பெற்றவர்கள் மிகவும் பெயர், புகழை அடைவார்.

கன்னியில் புதனை உச்சமாக பெற்றவர்கள் எல்லாவிதமான சகல கலைகளிலும் தேர்ச்சியாகி எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும், ஆராய்ந்து அறிவினை பெற்று கல்வி சங்கீதம் இசை போன்றவற்றிலும் பிரமாதமாக தேர்ச்சி பெறுவார். ஒவ்வொரு நாளும் அறிவை வளர்த்துக் கொண்டு ஜோதிடம், கணக்கு, கணிதம் கம்ப்யூட்டர் துறைகளில் நீண்ட காலம் பதவி வகித்து வாழும் பேறு பெற்றவர்.

குரு பகவானை கடகத்தில் உச்சமாக பெற்ற ஜாதகர் பிறக்கும்போதே செல்வ வளத்திலும், அரசாங்கத்தில் அமையும் யோகமுடையவர்கள். அனுபவிக்க ஏராளமான சொத்து சுகமும், வண்டி, வாகனமும் உடையவர்கள்.எல்லா வகை கல்வி வித்தை அறிவு ஞானம் மிக்கவர்கள். தனக்கு அனுகூலம் தரும் புத்திரர்களை பெறுவார்கள். தான தருமம் செய்வார்கள்.

மீன ராசியில் சுக்கிரனை உச்சமாகப் பெற்ற ஜாதகர்கள் மிகச் சிறந்த செல்வத்தைப் பெற்றவர்கள். சிறப்பான கல்வி கற்பார்.

சனியை துலா ராசியில் உச்சமாகப் பெற்ற ஜாதகர்கள் மிகவும் உடல் வலிமை பெற்று நீண்ட ஆயுளை உடையவர்கள் உடல் நலம் மிக பிரமாதமாகவே அமையும்.கிரகத்தின் அதிகாரியாக, தொழிலாளர்களுக்கு தலைவர்களாகவும் உழைத்து ஏற்றம் பெறுபவர்களாகவும் சேமிப்பு அதிகம் உடையவர்களாகவும் வாழ்வார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!