குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்-கிருத்திகை-ரோகினி-மிருகசீரிஷம்
கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
- இந்த குரு பெயர்ச்சி உங்களை மிகவும் நிம்மதியாக இருக்கச் செய்யும். மேலும் நான்கு பேர் முன்னால் சற்று பெருமைப்பட இருக்க வைக்கும்.
- அது வீடு வாகனம் வயல் வாங்கியதாலோ, உங்கள் பெற்றோரின் மகிழ்ச்சியான ஆசீர்வாதத்தாலோ என ஏதோ ஒரு நிறைவான மகிழ்வில் திளைப்பபீர்கள்.
- உங்களில் ஒரு சிலர் நண்பர்களின் அவசர தேவைக்கு அனைத்துமாக உதவ இயலும். அதன் பொருட்டு மனம் பூரிப்பு உண்டாகும்.
- உங்களின் உழைப்பு மதிப்பு மிக்கதாக இருக்கும்.
- இந்த திறமை நீங்களே எதிர்பாராத அரசு கவுரவத்தை கொண்டு வந்து சேர்க்கும்
பரிகாரம் :
வயல்கள் சூழ்ந்த பசுமையான இடத்தில் உள்ள சிவன் மற்றும் கந்தனை வணங்கவும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
- கும்ப குரு உங்களுக்கு நல்ல விவேகத்தை கொடுப்பார். இதன் மூலம் ‘இதனை இவன் கண் விடல் ‘என்பதுபோல் மனிதர்களை பிரித்தறியும் சக்தி கிடைக்கும்.
- இதனால் தவறான நபர்களிடம் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்வீர்கள். தொலைக்காட்சி, தகவல் தொடர்பு, மனிதவள மேம்பாடு எனும் துறைகளில் பணிபுரிவோர் இந்த உள்ளுணர்வு தரும் சமிக்ஞைகளால் எச்சரிக்கை அடைந்து விடுவீர்கள்.
- குறிப்பாக ரோகிணி நட்சத்திர பெண்களுக்கு இது சற்று அதிகமாக வருவதால் இவர்கள் தொழில் சார்ந்த எண்ணம் நிறைவேறும் போது வரக்கூடிய இடர்பாடுகளையும், அவமானங்களையும் முதலிலேயே உணர்ந்து அதிலிருந்து விலகி விடுவர்.
- குரு இந்த ஆற்றலை கும்பத்தில் இருந்து கொடுத்து உதவுவார்.
பரிகாரம் :
குளிர்ச்சியான இடத்தில் இருக்கும் அம்பாளை வணங்கவும்
மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
- இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு வியாபார நுணுக்கத்தை கற்றுத் தரும். அப்படி என்றால் என்ன? வியாபாரத்தில் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தால் காரியம் நடக்கும்-யாரைப் பிடித்தால் வியாபாரம் மேன்மையடையும்-யாரை பகைத்துக் கொள்ளக்கூடாது எதை செய்தால் லாபம் வரும் என்பது போன்ற விஷயங்களை கற்றுத் தருவார்.
- குரு பெயர்ச்சி இதெல்லாம் கற்றுத் தரும் என்று கேட்கலாம். குரு ரிஷப ராசியின் எட்டாம் அதிபதி அல்லவா? அவர் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற அளவுக்கு சொல்லித் தர மாட்டார்.
- ஆனால் நாசூக்காக லாபம் சம்பாதிப்பது எப்படி என சொல்லித் தருவார்.
- அதனை சட்டென்று பிடித்துக் கொள்வது உங்கள் திறமை பிறகு வெளியூர் வெளிநாட்டு வரனுடன் திருமணம் செய்து வைப்பார்.
பரிகாரம் :
வயல்கள் நிறைந்த இடத்தில் உள்ள வள்ளி, தெய்வானை, முருகனை வணங்கவும்.