Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்(2020-2021)-மேஷம்!!

குரு பெயர்ச்சி பலன்கள்(2020-2021)-மேஷம்!!

குரு பெயர்ச்சி  பலன்கள் 2020-2021 – மேஷம்

மேஷ(Mesham) ராசிக்கு குரு(Guru) 10ல் இருப்பதால் வேலையில் கவனம், தாயின் உடல்நலம் மேம்படும், கடன் தொல்லை நீங்கும் ,குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்
10ல் குரு வேலை பதவியில் கவனம்:
  • தனுசு(Dhanusu) ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான்(Guru)  வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி(ஐப்பசி 30)  நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் மூலம் மகர ராசிக்கு இடம்பெயர உள்ளார் அவர் அருளும் சுப அசுப பலன்கள்…

தொழில், பதவி மற்றும் வேலை: 

  • நீங்கள்(மேஷம்)(Mesham) பார்க்கும் வேலையில் மிக கவனமாக இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் பார்க்கும் வேலையை விடுவதோ அல்லது மாற்றுவதோ கூடாது உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.சிந்தித்து செயல்படுவது நன்று..
 

குரு பார்வை(5,7,9):

குடும்பம் (5ம் பார்வை): 

  • மேஷ(Mesham)ராசிக்காரர்களின் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை ஏற்படும்,மகிழ்ச்சி பொங்கும்,தேவையான நேரத்தில் பண உதவி கிடைக்கும் ..சிறப்பான காலகட்டம், கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்..
வீடு வாகனம் மற்றும் தாய் (7ம் பார்வை):
  • மேஷ(Mesham) ராசிக்காரர்கள் புதிய வாகனங்களை வாங்க முயற்சிப்பீர்கள். தடை பட்ட வீட்டு வேலைகள் விரைவாக நடக்கும், தாயாரின் உடல்நலம் மேம்படும், புதிதாக வீடு வாங்க முயற்ச்சிப்பவர்களுக்கு கைகூடும்..
நோய் எதிரி கடன் (9ம் பார்வை):
  • மேஷ(Mesham) ராசிகாரர்களை நெடுநாள்களாக வாட்டி வதைத்த நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்,எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள்.. கடன் சுமை குறையும் ..

கும்பத்தில் குரு பகவான் :

குரு பகவான் 06.04.2021  முதல்14.09.2021 வரை  உங்கள் ராசிக்கு11- இல் அதிசாரமாகியும் ,வக்கிரமாகியும் பயணிப்பதால்

  • பழைய கடன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் ,
  • குடும்பத்தில் சந்தோசம் பெருகும் ,
  • கடன் வாங்கி வியாபாரத்தை விரிவு படுத்த வேண்டாம் ,
  • 10-ம் வீட்டில் குரு அமர்வதால் வேலை சுமை இருக்கும்
  • விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும்
 
இவையாவும் பொது பலன்கள் மட்டுமே அவரவர் தசா,புத்தி ,கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்..
பரிகாரம்:
திண்டிவனத்துக்கு அருகிலுள்ள மயிலம் தலத்தில் அருளும் ஸ்ரீ முருகப்பெருமானை ,சஷடிதிதி நாளில் சென்று தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள் .வாழ்வில் உயர்வு பெறுவீர்கள்
 
 
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!