Homeஆன்மிக தகவல்நவராத்திரி பூஜைநவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு

அம்மன் வடிவம் : நரசிம்மி.

பூஜையின் நோக்கம் : ரத்த பீஜன் தேவியால் வதம் புரிய செல்லுதல்.

நரசிம்மி வடிவம் : நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள். நரசிம்மி மனித உடலும், சிங்க முகமும் கொண்டவள். தாமரை ஆசனத்தில் சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பவள்.எதிரிகளை அழித்து நம்மை காத்து அருளக்கூடியவள்.

தென்னாட்டில் எட்டாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஆசுரி துர்க்கை.

திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுத்ததும் அந்த அமிர்தத்தை அசுரர்களுக்குஅளிக்காமல் தேவர்கள் மட்டும் பருகிடச் செய்ய வேண்டும் என எண்ணினார் திருமால்.மோகினி வடிவம் தரித்து அசுரர்களை மயக்கி அந்த அமிர்த கலசத்தை தேவர்களுக்கு அளிக்கும் ஆற்றலை திருமாலுக்கு வழங்கியவள் துர்க்கை ஆவாள். இதனால் அவள் ஆசுரி துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : ரோஜா

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : பன்னீர் இலை

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : இளம் பச்சை

அன்னையின் அலங்காரம் : கருணை துரக்கை அலங்காரம்

அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : வாசனை மலர்கள்.

கோலம் : காசு கொண்டு பத்ம கோலம் போட வேண்டும்.

நைவேத்தியம் : பாயாசம்

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது 9 வயது

குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள்: பயத்தை போக்கும்.

பாட வேண்டிய ராகம் : புன்னாகவராளி

நடனம் : கும்மி

குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் முறுக்கு

பலன்கள்: மனதில் வேண்டியவற்றை அருளக்கூடியவன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!