கேது பகவானும்-திருமணமும்
லக்கினத்திற்கு 7-ல் கேது
- லக்கினத்திற்கு 7 – ல் கேது இருந்தால் , மனைவிக்கு நல்லதல்ல.
- சிலருக்கு இல்லற வாழ்க்கை பாழாக்கிவிடுகிறது.
- அனு தினமும் ஸ்திரீபோகன் , சில்லறை நோய்கள் அடிக்கடி ஏற்படும்.
- தொழிலில் நல்ல பெயரோ பிரகாசமோ கிடைப்பது இல்லை.
- பாபக்கிரக பார்வை சேர்க்கைப் பெற்று காணப்பட்டால் , பெற்றோரை மதிக்க மாட்டார்.
- உடலில் மறைமுகமாக ஓர் நிரந்தர வியாதி ஏற்படும்.
- கோபம் தலைக்கு மீறும்போது மற்றவர்களைக் கடுமையாகப் பேசி விடுவர்.
- சந்தோஷமற்ற வாழ்க்கை குழந்தைகளால் கஷ்டம் , சிலருக்கு குழந்தைகளே பிறக்காது.
- ரிஷப லக்கினத்தில் ராகுவும் , விருச்சிகத்தில் கேதுவும் அமைந்தவர்கள் நல்லதொரு மேடைப் பேச்சாளர் , அரசியலில் திறமைசாலி ஆகலாம்.
- இவர் மனைவி இவரை நம்ப மாட்டார்.
- காம இச்சை அதிகம் உள்ளவர்.
- பொருள் நஷ்டம் , தாது நஷ்டம் , மனைவி விஷம் அருந்துதல் , கெட்ட பெண்களை விரும்புதல் , அவமானமடைதல் இவைகள் நடக்கும்.
- மனைவிக்குப் பேய் , பிசாசுகளால் பீடை உண்டு , பலகீன முள்ள தாய்ப்பால் அற்ற மனைவி அமைவாள்.
- 7 – ல் கேது – சூரியன் சேர்க்கை திருமணம் நடக்கும் . மனைவியிடம் மன வேற்றுமை உண்டு.
- 7 – ல் கேது – சந்திரன் சேர்க்கை காதல் தோல்வி அல்லது மனைவி வேறு விதமாக அமையும்.தம்பதிகளின் ஆயுள் குறையலாம்.
- 7 – ல் கேது – செவ்வாய் – சேர்க்கை காலங் கடந்து மணந்தாலும் சிறு பெண்ணையே மணப்பார்.
- மனைவியைத் தவிர ஒரு விதவையின் நட்பும் ஏற்படும்.
- 7 ல் கேது புதன் சேர்க்கை இளம் பெண்ணை மணப்பார்.இல்லறத்தில் செழுமை உண்டு.
மனைவியின் திக்கு -தெற்கு அல்லது வடக்கு திசையில் தாய் – தந்தை இருவர் வழியிலும் வரலாம்.
மனைவியின் நிறம் – மாநிறம் .
மனைவியின் குணம் -கெட்ட செயல்
மனைவி வரும் தூரம் சுமார் 15 மைல் களுக்குள்
கணவன் அல்லது மனைவி தொழில் -நீச்சத் தொழில்
7 – ல் கேது – குரு சேர்க்கை சம்பிரதாயப்படி திருமணம் ஏற்படுவது அரிது . உயர்குல மனைவி அமைவாள் .
7 – ல் கேது – சுக்கிரன் சேர்க்கை நல்லபடி திருமணம் நடக்கும் . வாழ்க்கை வசதி பெருகும் .
7 – ல் சனி – கேது சேர்க்கை திருமணம் நடப்பதே அரிது . கீழ்படிந்தவர்களின் தொடர்புகள் ஏற்படும் . மனைவிக்கு உடல் உபாதை , ரண சிகிச்சைகள் – மேலும் கர்ப்ப தோஷம் ஏற்படும்.