சந்திரன் உபாசன மந்திரம்
மூலமந்திரம்:
ஆப்யாயஸ் வஸமேது தேவிச்வதஸ்ஸோ மவ்ருஷ்ணி யம் பவாவா ஜஸ்யஸங்கதே ஸ்வாஹா(உரு 180).
பூஜை விதி:
சோமவாரம் காலையில் ஸ்நானம் செய்து மடிகட்டி விபூதி தரித்து அனுட்டான ஜெபதப முடித்து வீட்டின் ஓர் இடத்தில் மெழுகிக் கோலமிட்டு ஆசனப் பலகையிட்டு அதிலிருந்து செப்புத் தகட்டில் மேற்படி சக்கரத்தை வரைந்து அதற்கு அபிஷேகஞ் செய்து கிழக்கு முகமாக வெண்டாமரையிலையில் வைத்து வெற்றிலை , பாக்கு , தேங்காய் , பழம் , தித்யோன்னம் , அதிரசம் முதலானவை படைத்து , சாம்பிராணி , கற்பூர தூபதீபங் கொடுத்து நமஸ்கரித்து மேற்படி மூலமந்திரத்தை உரு 108 தரம் ஜெபித்து பூஜை முடித்து மேற்படி யந்திரத் தகட்டைச் சுருட்டித் தாயத்திலடைத்து சந்திர பகவானைத் தியானித்து சாம்பிராணி தூபங்கொடுத்து கையில் அல்லது இடுப்பில் கட்டவும் .
இதன் பலன் :
சந்திரபகவான் பார்வையினாலாவது , சேர்க்கையினாலாவது கஷ்டமடையும் ஜாதகமுடையவர்களுக்கு மேற்கண்டவிதஞ் செய்ய , சந்திரபகவான் கிருபையைத் தாம் அடைந்து , சகல கஷ்டமும் நீங்கிச் சுகமடைவார்கள் . சுபம்.
யந்திரம் தேவைப்படும் அன்பர்கள் Telegramல் தொடர்பு கொள்ளவும்