சனி பெயர்ச்சி திருத்தலங்கள்
தொழிலில் மேன்மை பெற செல்ல வேண்டிய திருத்தலம் -சனீஸ்வர வாசல்-காரையூர்
தல வரலாறு
ஒருமுறை நள மகாராஜனை பிடிப்பதற்காக திருநள்ளாறு நோக்கி புறப்பட்டார் சனிபகவான்(Sani bhagavan ) இலக்கை அடைய வெகு தூரம் இருக்கும் நிலையில் இருள்கவியத் தொடங்கிவிட்டது . பகவானின் காக வாகனத்திற்கு பார்வை மங்க ஆரம்பித்தது. வழியில் எங்கேயேனும் தங்கவேண்டிய நிலை அப்போது பூமியில் சிவாலயம் ஒன்று தென்படவே அந்த இடத்திலேயே தரை இறங்கினார் சனிபகவான்.(Sani bhagavan )
இரவில் அங்கு தங்கி இருந்தவர் காலையில் எழுந்தபோது கோயிலின் எதிரில் விருத்தகங்கா நதி பாய்வதை கண்டார் .அத்துடன் அதில் நீராடி அந்த தளத்தில் கோயில் கொண்டிருந்த சங்கரநாராயணரையும் , நாராயணி அம்பாளையும் வழிபட்டு மகிழ்ந்தார். இங்கனம்,சனிபகவான்.(Sani bhagavan ) தங்கி வழிபட்டதால் சனீஸ்வர வாசல் என்ற திருப்பெயர் கிடைத்தது.
இந்த தலத்தின் பெருமையை சொல்லும் இன்னொரு கதையும் உண்டு காசியின் ராணியான சம்யுக்தை என்பவளின் பணிப் பெண்ணாக இருந்தவள் மந்திரை . இவள் மகத நாட்டு இளவரசனான சுதாங்ககனைக் காதலித்து வந்தாள் . ஒருநாள் ராணியும் அரசனும் அந்தபுரத்தில் தனித்திருந்த வேளையில் அவர்களின் அனுமதி இல்லாமல் நுழைந்துவிட்டால் மந்திரை.
இதனால் கோபம் கொண்ட ராணி ஆயுள் முழுக்க நீ கன்னியாகவே திகழ்வாய் என்று மந்திரையை சபித்து விட்டாள். இதனால் பெரிதும் வருந்திய மந்திரை ,சுதாங்கனை அழைத்துக்கொண்டு சாப விமோசனம் தேடி அலைந்தாள். அப்போது அவர்களுக்கு தீர்வு சொல்வதாக சொல்லி அழைத்துச் சென்று தருணம் வாய்த்த போது இருவரையும் விழுங்கி விட்டான் அசுரன் ஒருவன். அவன் வயிற்றுக்குள் சென்ற இருவரும் பைரவ மூர்த்தியால் அசுரனின் பெரு வயிறு கிழிக்கப்பட்டு வெளியேறினர் என்கிறது புராணம்…..
அவர்களிடம் சனீஸ்வர வாசலாகிய காரையூர்(karaiyur) தளத்தில் விருத்தகங்காவில் நீராடி சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதுடன் அந்தத் தலத்தில் அருளும் அம்மையப்பனை வணங்கினால் விமோசனம் கிடைக்கும் என்று அருளினார் பைரவர்.
அதன்படி அவர்கள் இருவரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபாடு செய்து நலம் பெற்றனர்.
தேய்பிறை அஷ்டமியில்
அவர்களுக்கு திருவருள் புரிந்ததோடுதானும் இத்தலத்தில் எழுந்தருளிய பைரவ மூர்த்தி, சனீஸ்வரரின் சந்நிதிக்கு அருகில் மேற்கு முகமாக தனி சந்நிதி கொண்டிருக்கிறார். இவர் உலக வாழ்க்கையில் மனிதர்களின் நிலை பற்றி உபதேசிப்பதாக ஐதிகம்.
வாரணாசியில் கங்கையில் பைரவரும், சிவனும், அம்பிகையும் அருள்வது போல் இங்கேயும் சுவாமி -அம்பாள் ஆகியோருடன் பைரவரும் அருள்பாலிப்பதால் காசி புண்ணியம் இங்கு கிடைக்கும்.
தேய்பிறை அஷ்டமி தினத்தில் செவ்வரளி மலரால் இந்த பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் வறுமை நீங்கும், பொருளாதார நிலை உயரும் என்பது நம்பிக்கை.
மாங்கல்ய தோஷம்
சனிக்கிழமையை அல்லது ஜென்ம நட்சத்திர நாளில் காலையில் இந்த தளத்துக்கு வந்து தீர்த்த நீராடி ,நீலவண்ண கரையிடப்பட்ட வஸ்திரத்தை வேதம் அறிந்தவர்களுக்கு தானம் செய்வதுடன் , நீலமலர்கள் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து எள் அன்னம் படைத்து வழிபட்டால் மாங்கல்ய தோஷங்கள் விலகும்.
ஆயுள் பலம் பெற
சனி கிரக பாதிப்பு ஆயுள் பங்கம் இருந்தால் இங்கு வந்து சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து எள் முடிப்பு தீபம் ஏற்றி. சனி கவசம் படித்து வணங்கினால் ஆயுள் பலம் நீடிக்கும். மேலும் எள் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வழிபடுவதுடன் சுவாமி அம்பாளுடன் பைரவரை வழிபட்டால் தொழில் யோகம் சித்திக்கும் வியாபாரத்தில் லாபம் பெருகும்.