சிம்ம லக்னம் அல்லது சிம்ம ராசி
✴️இவர்களின் 7 – ஆம் வீடு கும்பம். இதில் செவ்வாய் , ராகு , குரு சாரம் வாங்கிய அவிட்டம் , சதயம் , பூரட்டாதி நட்சத்திரங்கள் உள்ளன.
✴️பொதுவாகவே கும்ப ராசி தனக்குள்ளேயே எல்லாவற்றையும் புதைத்து வைத்துக்கொள்ளும் ; வெளிப்படையாக இராது. எனவே , சிம்ம- ராசி லக்க வாழ்க்கைத் துணைவர் வாய் மூடி மௌனியாக வெளிப்படையாகப் பேசாத அழுத்தம் கொண்டவராக இருப்பார்.
✴️சிம்ம லக்ன- ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணை யார் என்று கண்டுபிடிப்பதற்குள் பாதி திருமண வாழ்க்கை ஓடியே போய்விடும். அவ்வளவு ரகசியமானவர்கள்.
✴️இவர்கள் கொஞ்சம் நல்ல குணமும் , நிறைய கோபம் , பிடிவாத குணங்களோடும் இருப்பர்.
✴️இவர்களை ஏன் இவ்வளவு சொல்கிறேன் என்றால் சனி வீட்டில் செவ்வாய் , ராகு சார நட்சத்திரங்கள்தான். அதனால்தான் இவர்களை அனுமானிப்பது கடினம் என்று தோன்றுகிறது.
✴️சிம்ம லக்னத்தாருக்கு 7 – ஆம் அதிபதி உச்சமாகியிருந்தால் வரும் வாழ்க்கைத் துணைவரால் பேரும் புகழும் கிடைக்கும்.
✴️தொழில் சிரத்தையுடைய- வியாபார நுணுக்கமுடைய துணை அமைவார். இதே 7 – ஆம் அதிபதி நீசமானால் , அதிர்ஷ்டக் குறைவு , இவர்களின் தந்தை நிலை கெடுதல் , பாக்கியம் கெடுதல் போன்றவை திருமணத்திற்குப்பின் நடக்கும்.
✴️நீச பங்கமானால் முதலில் நிலை தடுமாறி அப்புறம் நேராகி விடுவார்கள்.
✴️இவர்களின் மாமியார் அழகானவராகவும் , பொறுமையானவராகவும் ; மாமனார் எதையும் கணக்காக எண்ணிப்பார்த்து செயல்படுபவராகவும் இருப்பார்.
✴️இவர்களுக்கு மேற்கு திசையில் வரன் அமையக்கூடும்.
✴️இவர்களின் மாமனார் வீடு பெண்கள் பள்ளி அருகிலோ அல்லது விவசாய பண்ணைகள் அருகிலோ இருக்கலாம் . சிலரின் மாமனார் வீட்டின் அருகில் மாட்டுத் தொழுவம் இருக்க வாய்ப்புண்டு.
✴️வாழ்க்கைத் துணையின் முதல் எழுத்து கு , கூ , கோ , ஸ , ஸீ , ஸே , ஸோ , த (K,S,T,P)மற்றும் பா என்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும்.