சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் தரும் பலன்கள்
சிம்ம லக்னத்தில் சூரியன் தன் சுயவீட்டில் இருந்தால் ஜாதகர் பலசாலியாகவும் தைரியமுள்ளவராகவும் இருப்பார். சுய கௌரவத்தைப் பார்க்கக் கூடியவர். நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். உயரமாகவும் கம்பீரமாகவும் இருப்பார் . பணக்காரராக இருப்பார்.
2 – ஆம் பாவத்தில் நண்பரான புதனின் கன்னி ராசியில் சூரியன் இருந்தால் ஜாதகர் பணக்காரராக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் . ஜாதகர் அதிகமாகப் பயணம் செய்வார் . சிலநேரங்களில் பிறருக்கு நாம் அடிமையாக இருக்கிறோமோ என்ற எண்ணம் தோன்றும்.23 வயதிற்குப்பிறகு ஜாதகர் பெயர் , புகழுடன் இருப்பார்.
3 – ஆம் பாவத்தில் தன் எதிரியான சுக்கிரனின் துலாராசியில் சூரியன் நீசமாகிறார் அதனால் ஜாதகருக்கு உடன்பிறந்தோரிடம் சந்தோஷம் குறைவாகவே இருக்கும்.அவர்களிடம் ஜாதகருக்கு கருத்து வேறுபாடு உண்டாகும். மன தைரியம் குறையும்.
4 – ஆம் பாவத்தில் சூரிய பகவான் செவ்வாயின் விருச்சிக ராசியில் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். வீடு வாங்குவார் எப்போதும் உற்சாகத்துடன் இருப்பார்.
5 – ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில் சூரிய பகவான் தன் நண்பரான குரு பகவானின் தனுசு ராசியில் இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். பெயர் , புகழுடன் பெரிய பதவியில் இருப்பார். தந்திர குணத்துடன் செயல்பட்டு பணம் சம்பாதிப்பார் முரட்டுத்தனமான தோற்றத்துடன் இருப்பார்.
6 – ஆம் பாவத்தில் சூரிய பகவான் தன் எதிரியான சனியின் மகர ராசியில் இருந்தால் ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். வாழ்க்கையில் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும் ஆனால் ஜாதகர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். நோய் வரும் பலர் அவரை அடிமையாக்க முயற்சிப்பார்கள் . ஆனால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.
7 – ஆம் பாவத்தில் சூரிய பகவான் சனியின் கும்ப ராசியில் இருந்தால் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். ஜாதகர் பெண்மோகம் உள்ளவராக இருப்பார்.
8- ஆம் பாவத்தில் சூரிய பகவான் குருவின் மீன ராசியில் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். நல்ல உடல்நலத்துடன் இருப்பார் . அவ்வப்போது சிறிய கஷ்டங்கள் வரும். வெளித் தொடர்பால் பணம் சம்பாதிப்பார்.அதிகமாகப் பயணம் செய்வார்.
9 – ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில் சூரிய பகவான் உச்ச மடைவதால் , ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபாடுள்ளவராக இருப்பார். கடவுள் நம்பிக்கை கொண்டவர் . பலமான சரீரத்தைக் கொண்டிருப்பார்.
10 – ஆம் பாவத்தில் சூரிய பகவான் தன் பகைவரான சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்தால் ஜாதகருக்கு தந்தை யுடன் கருத்து வேறு பாடிருக்கும்.அரசாங்க விஷயத்தில் பெயர் , புகழ் கிடைக்கும் அதிகமான முயற்சிகள் செய்து அவற்றில் வெற்றி பெறுவார்.அன்னைக்கு உடல்நல பாதிப்பிருக்கும்.
11 – ஆம் பாவத்தில் சூரிய பகவான் தன் நண்பரான புதனின் ராசியில் இருந்தால் வருமானம் நன்றாக இருக்கும் . பலவழிகளில் வருமானம் வரும்
உடல்நலம் நன்றாக இருக்கும்.
12 – ஆம் பாவத்தில் தன் நண்பரான சந்திரனின் கடக ராசியில் சூரியன் இருந்தால் , ஜாதகர் மெலிந்த தோற்றத்துடன் இருப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் சூதாட்டத்தில் பணத்தை இழப்பார். வெளி தொடர்புகளை வைத்து பணம் சம்பாதிப்பார். காலில் சக்கரத்தை மாற்றியதை போல் அதிகமாக சுற்றுவார். வயிற்றில் உஷ்ணம் இருக்கும்.