சுக்கிர பகவான் பரிகாரம்
‘ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்,
சுக்கிரம் என்ற சொல்லுக்கு ஒளி மிக்கது என்று பொருள். சுக்கிரபகவான் ஒளிமிகுந்த வாழ்வை அருள்பவர்.ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியான இவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்ந்து இருந்தால் யோக வாழ்வை வரமாக பெறலாம்.
சுக்கிரன் மீனத்தில் உச்சமும், கன்னியில் நீசமும் பெறுவார். சூரியனுக்கு அருகில் செல்லும் போது அஸ்தங்கம், மெளட்யம்,மூடம் எனப்படும் தன்மைகளை அடைகிறார். இது போன்ற அமைப்பில் சுக்கிரன் சஞ்சரிக்கும் நிலையில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்த கூடாது என்கின்றன ஜோதிட நூல்கள்.
வெள்ளிக்கிழமைகளில் ‘பனி போன்ற வெண்ணிறம் உடையவரும்’ பார்க்கவன் என்ற பெயரை பெற்றவரும், அசுர குருவும், சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவருமான சுக்கிர பகவானை வணங்குகிறேன் என்று மனதால் தியானித்து வழிபட்டால் சுக்கிர பகவானின் பூரண அருளை பெறலாம்.
ஜாதகத்தில் இவர் இருக்கும் நிலையைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும். சுக்கிர பகவானின் அருளால் சுகபோக வாழ்வை பெற எளிய பரிகாரங்களை ஜோதிட நூல்கள் விளக்குகின்றன..
அவை..
1.துர்க்கை வழிபாடு
2.ஸ்ரீ சூக்தம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்ற தேவிதுதிபாடல்களை படிப்பது.
3.வெள்ளிக்கிழமை அதிகாலையில் சுக்கிர பகவானை தியானித்து வழிபடுவது.
4.பட்டாடை,தயிர்,பாலாடை கட்டி, வாசனைப் பொருட்கள், சர்க்கரை, அரிசி, ஆடைகள் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை மாலை வேளையில் ஏழைகளுக்கு தானம் தருவது.
5.வெண்ணிற ஆடைகளை உடுத்துவது.
6.வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்துவது.
7.அம்பாளுக்கு வெள்ளை மலர்களை சமர்ப்பித்து வணங்குவது
போன்ற எளிய பரிகாரங்களை செய்து சுக்கிர பகவானின் அருளை பெற்று ஆனந்தமுடன் வாழுங்கள்..
மேலும் சுக்கிர தசா -புத்தி நடப்பவர்கள், சுக்கிரன் அஸ்தங்கம், நீசம் ,6,8,12இல் இருப்பவர்கள் இந்த பரிகாரங்களை செய்யும் போது மேலும் வெற்றி கிட்டும்…