ரிஷபம் ( கிருத்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோகிணி , மிருகசீர்ஷம் 1 , 2 ம் பாதங்கள் )
களத்திரகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!!!
- இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
- ராகு கேதுக்கள் முறையே 12 , 6 மிடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
- சனி பகவான் சித்திரை 16 ந் தேதிமுதல் ஆனி 28 ந் தேதிவரை அதிசாரத்திலும் தை மாதம் 3 ந் தேதிமுதல் வருட முடிவுவரை நேர்கதியிலும் உங்கள் ராசிக்குப் 10 மிடத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஆனி மாதம் 28 ந் தேதிமுதல் தை 3 ந் தேதிவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 9 மிடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
- வருட ஆரம்பமுதல் ஆனி மாதம் வரை தொழில் துறையில் மிகுந்த முயற்சி செய்து தொழில் விருத்தி செய்வீர்கள். போட்டியாளர்களால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தந்தை வழியில் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள்.
- திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்.
- படித்த பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- புதிதாக வீடு , மனை வாங்கும் யோகம் உண்டு. தந்தையின் ஆரோக்யத்தில் மட்டும் அக்கறை தேவை.
- மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
- கணவன் – மனைவிக்குள் நல்ல அன்னியோன்யம் ஏற்படும்.
- தை முதல் வருட முடிவுவரை குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.தொழில் விருத்தி உண்டு. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
- தாயின் ஆரோக்யத்தில் மட்டும் சிறு குறைபாடு ஏற்படும்.
- வெளிநாடு செல்ல விரும்புபர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு எளிதில் கிடைக்கும்.
பரிகாரம் :
பிரதி சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும் ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்ற சகல நன்மைகளும் பெறுவீர்கள்.