Homeஆன்மிக தகவல்நவராத்திரி பூஜைநவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு

அம்மன் வடிவம் : பிராம்மி.

பூஜையின் நோக்கம் : சண்ட முண்டனை வதம் புரிய செல்லுதல்.

பிராம்மி வடிவம் : பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள்.நான்கு கரங்களை கொண்டு அன்னப்பறவையில் வீற்றிருப்பவள்.வெண்ணிற ஆடை தரித்தவள்.தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்.

பிராம்மியை வழிபடுவதால் கல்வி வேள்விகளில் மேன்மை உண்டாகும்.

தென்னாட்டில் ஏழாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் லவண துர்க்கை.

திருமால் இராமபிரானாக அவதாரம் எடுத்து அரசாண்ட போது லவண சுரன் என்ற அரக்கன் பலவிதமான இன்னல்களை தோற்றுவித்தான்.லவண சுரனை அழிப்பதற்காக இராமபிரானின் சகோதரனான சத்ருகன் போரிட சென்றார். இருப்பினும் சத்ருகனால் லவண சுரனை அழிக்க இயலவில்லை.தங்களது குவகுருவான வசிஷ்டரின் ஆலோசனைப்படி இராமர் துர்க்கை தேவியை வழிபட்டார். அதன் பின் சத்ருகன் லவண சுரனை அழித்து வெற்றி பெற்றார்.சத்ருகன் லவண சுரனை அழிப்பதற்காக இராமபிரான் வழிபட்ட துர்க்கை தேவியே லவண துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : தாழம்பூ

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : தும்பை

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : மஞ்சள் நிறம்

அன்னையின் அலங்காரம் : சாம்பவி துர்க்கை அலங்காரம்

அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : மஞ்சள் நிற மலர்கள்

கோலம் : மலர் கொண்டு திட்டாணி கோலம் போட வேண்டும்

நைவேத்தியம் :எலுமிச்சை சாதம்

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 8 வயது

குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : கபிட்சம் உண்டாகும்.

பாட வேண்டிய ராகம் : பிலஹரி

பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : படகம்,

குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சூரணம்,

பலன்கள்: வாழ்க்கையில் தெளிவு பெற்று முக்தி கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!