சுபகிருது வருட பலன்கள்-2022-மீனம்
இவ்வருடம் முழுவதும் குரு பகவான் ஜென்ம குருவாக உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.
ராகு கேதுக்கள் முறையே 2,8மிடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி 28-ம் தேதி வரை அதிசாரமாகவும் தை 3ம் தேதி முதல் வருடம் முடியும் வரை நேர்கதியிலும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.ஆனி28ம் தேதி முதல் தை 3ம் தேதி வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 11மிடம் சஞ்சாரம் செய்கிறார்.
- சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அதற்குரிய வருமானம் இல்லாமல் தவிப்பீர்கள்.
- உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள்.
- தெய்வஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள்.
- புண்ணிய காரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள்.
- தூக்கமின்றி தவிப்பீர்கள். மனைவி குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
- மாணவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு.
- புதிதாக வீடு, மனை வாங்கி கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
- படித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- இது வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை வீட்டில் செலவினங்கள் மிக அதிகமாக இருக்கும்.
- தொழில் துறையில் இருந்த பணிச் சுமைகள் ஓரளவு குறையும்.
- பழைய பாக்கிகள் வசூலாகும்.
- மாணவர்கள் நன்கு படித்து நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க பெறுவார்கள்.
- தர்ம காரியங்கள் செய்து நல்ல புகழை பெறுவீர்கள்.
பலன் தரும் பரிகாரம்
தமிழ் மாதம் முதல் வியாழக்கிழமை அன்று குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து பூஜை செய்யுங்கள் பலவிதத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள்