உங்கள் ராசி மற்றும் லக்னப்படி அருள் வழங்கும் கடவுள் யார் ?இஷ்ட தெய்வம் எது ? எந்த கடவுளை வழிபட வேண்டும் ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அருள் வழங்கும் கடவுள்-இஷ்ட தெய்வம்

மேஷ லக்னமும் மேஷ இராசியும்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் முருகன், இராயப்பர். 13 ஆவது நபி, சித்தார்த்தர், மகாவீரர் ஆகிய இறைநிலையை அவரவர் மதத்துக்குத் தகுந்தாற் போல் வணங்க வேண்டும். இவை மேஷ லக்னங்களுக்கு அருள் தெய்வங்கள்.

மேஷ இராசிக்காரர்கள் (அசுபதி, பரணி, கார்த்திகை) பழநி முருகன், மலைப்பொழிவு இயேசு, 16 ஆம் நபி, தியானபுத்தர், நின்றவடிவு மகாவீரர்ஆகியவர்களை வணங்கவேண்டும். இவை இஷ்ட தெய்வங்கள்.

                             லக்னதிற்குரிய கடவுள் -அருள் தெய்வம் 
                                 ராசிக்குரிய கடவுள் - இஷ்ட தெய்வம் 

ரிஷப லக்னமும் ரிஷப இராசியும்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் துர்கை, வ்யாகூல மாதா, முகம்மது நபிகள், அமர்ந்த புத்தர், கரம் தூக்கிய மகாவீரரை வணங்க வேண்டும். இது ரிஷப லக்னக்காரர்களுக்குரிய தெய்வங்கள்.

ரிஷப இராசிக்காரர்கள் (கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம்) விநாயகர், பள்ளி கொண்ட பெருமாள் சத்யசாய் பாபா, இடைவிடா சகாய மாதா, சல் உபதெசம், பூர்ணிமா புத்தர், ஜைனரை வணங்க வேண்டும்.

மிதுன லக்னமும் மிதுன இராசியும்

மிதுன லக்னக்காரர்கள் மகாவிஷ்ணு, சகாயமாதா, நூர்ஜகான், 3,வயது புத்தர், 40 வயது ஜைனரை வழிபட வேண்டும்.

மிதுன இராசிக்காரர்கள் (புனர்பூசம், மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்கள்) கால பைரவர், உரகசயனார், ஸ்ரீராமர்,மலைப்பொழிவு இயேசு, ஹிஜிரா நபி, சின்முத்திரை புத்தர், மகாவீரா முகவொளியை வணங்க வேண்டும்.

மேஷ லக்ன வைஷ்ணவர்கள் கேசவப் பெருமாளையும், ரிஷப லக்ன வைஷ்ணவர்கள் நாராயணரையும். மிதுன லக்ன வைஷ்ணவர்கள் மாதவப் பெருமாளையும் வணங்க வேண்டும். (நாயுடு ரெட்டியார். ஐயங்கார் தெலுங்கர்களுக்கு)

கடவுள்

கடக லக்னமும் கடக இராசியும்

கடக லக்னக்காரர்கள் திருச்செந்தூர் முருகன், அன்னை வேளாங்கன்னி மாதா, நாகூர் ஆண்டவரையும், புத்த கயா, கண்மூடிய மகாவீரரையும் வழிபட வேண்டும்.

கடக இராசிக்காரர்கள் (பூசம், புனர்பூசம், ஆயில்யம்) குலதெய்வத்தையும், அதே போல் பௌத்த மதத்தவர். ஜைன மதத்தவர் குலதெய்வத்தையும், வைஷ்ணவர்கள் கோவிந்தராஜப் பெருமாளையும் வழிபட வேண்டும்.

சிம்ம லக்கினமும் சிம்ம இராசியும்

சிம்ம லக்னக்காரர்கள் சிவபெருமானையும், இதய ஆண்டவரையும், பாத்திமா பீவியுைம், தியான புத்தரையும், நைனரையும் வழிபட வேண்டும்.

சிம்ம இராசிக்காரர்கள் (மகம், பூரம், உத்திரம்) இராகவேந்திரரையும், மத்தேயுவையும், ஹாஜிக்களையும், கயா யாத்திரை போனவரையும், அங்கோர்வாட் (கிழக்கு நாட்டில் பெரிய கோவில்) போனவரையும் வணங்க வேண்டும். வைஷ்ணவர்கள் (ஐயங்கார்கள்) விஷ்ணுவையும் வழிபட வேண்டும்.

கன்னி லக்னமும் கன்னி இராசியும்

புதுக்கோட்டை புவனேஸ்வரியுைம் நாகர்கோவில் ஆண்டவரையும், புனித சூசையப்பரையும், போதி மரப் புத்தரையும், ஆசி கூறும் மகாவீரரையம் வணங்க வேண்டும்.

கன்னி இராசிக்காரர்கள் (உத்திரம், ஹஸ்தம் சித்திரை ) பூமாதேவியையும், இஸ்ரவேலரையும், மெக்கா விஜய நபியையும், அரண்மனை புத்தரையும், காடு வாழ் மகாவீரரையும் வணங்க வேண்டும். வைஷ்ணவர்கள் மதுசூதனனை வழிபட வேண்டும்.

துலா லக்னமும் துலா இராசியும்:

மகாலெஷ்மி, படகுறு இயேசு, மெதினா நபி, துயிலெழு புத்தர், மகாவீரரை வழிபட வேண்டும்.

துலா இராசிக்காரர்கள் (சித்திரை, ஸ்வாதி, விசாகம்) சரஸ்வதி, சிலுவை சுமந்த ஏசுபிரான், திராட்சை உண்ட நபி,மெளனபுத்தர், மகாவீரரை வழிபட வேண்டும். வைஷ்ணவர்கள் த்ரிவிக்ரமரை வழிபட வேண்டும்.

கடவுள்

விருச்சிக லக்னமும் விருச்சிக இராசியும்

விருச்சிக லக்னக்காரர்கள், வைதீஸ்வரனையும், முக்தி யேசுவையும், முக்தி நபிநாதரையும், சமாதி புத்தரையும், நிர்வாண மகாவீரரையும் வழிபட வேண்டும்.

விருச்சிக இராசிக்காரர்கள் (விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரக்காரர்கள்) பிரம்மா, தியானயேசு, அருள்நபி, நின்றபுத்தர். நின்ற மகாவீரரை வழிபட வேண்டும். வைஷ்ணவர்கள் வாமன தேவரை வழிபட வேண்டும்.

தனுசு லக்னமும் தனுர் இராசியும்

தனுசு லக்கினக்காரர்கள் அனுமாரையும், அப்பம் தந்த இயேசுவையும், கைசேர்ந்த நபியையும் ,தருமம் ஏற்கும் புத்தரையும், மகாவீரரையும் வணங்க வேண்டும்.

தனுசு இராசிக்காரர்கள் (மூலம், பூராடம், உத்திராடக்காரர்கள்) குருவாயூரப்பனையும், வீரமா முனிவரையும், 124 ஆம் நபிகளையும், 12 வயது புத்தரையும், 17வயது மகாவீரரையும் வழிபட வேண்டும். வைஷ்ணவர்களோ ஸ்ரீதரப் பெருமாளை வழிபட வேண்டும்.

மகர லக்னமும் மகர இராசியும்

மகர லக்கினக்காரர்கள் ஐயப்பனையும் மலைப்போழிவு இயேசுவையும், சீராப்பிரானையும், மௌன புத்தரையும், மகாவீரரையும் வழிபட வேண்டும்.

மகர இராசிக்காரர்கள் (உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்கள்) ஜெயராமரையும், மாற்குவையும், 12 ஆவது நபிகளையும், உணவருந்து புத்தர், மகாவீரரையும் வழிப்பு வேண்டும்

வைஷ்ணவர்கள் ரிசிகேசரை வழிபட வேண்டும்.

கும்ப லக்னமும் கும்ப இராசியும்

கும்ப லக்னம், இராசிக்காரர்கள் நாத்திக எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் மெய்ஞ்ஞானத்தை விட விஞ்ஞானத்தை நம்புவதால், கடவுளைப் புதிதாய் உருவானவர் என்று கூறுவதால், கோவில் வாயில், பள்ளிவாசல், சர்ர் வாசலைப் பார்த்தாலே போதுமானது வைணவர்கள் பத்மநாபரை வழிபட வேண்டும்.

மீன லக்னமும் மீன இராசியும்

மீன லக்னக்காரர்கள் மீனாட்சியம்மன், படகோட்டி இயேசு, 128 ஆம் நபி, தம்மபத வாக்கியம், ஜைனவழி ஜல வழிபாடு போதுமானது.

மீன இராசிக்காரர்கள் எளிதில் ஏமாறுபவர், சந்தர்ப்பவாதிகள். இவர்கள் யாரை வேண்டுமானாலும் கும்பிடலாம். வைஷ்ணவர்கள் தாமோதரப் பெருமாளை வழிபடவும். ஜனார்த்தரை வழிபடக் கூடாது.

Leave a Comment

error: Content is protected !!