ருசக் யோகம்
யோக நிலை
லக்கினத்திற்காவது சந்திரனுக்காவது வீரத்திற்கும், ஆற்றலுக்கும் அதிபதியான செவ்வாய் ஆட்சியிலாவது, உச்சத்திலாவது, கேந்திரத்தில் இருந்து சுபர் பார்வை பெற்றால் அது ருசக் யோகம் ஆகும்.
பலன்
ருசக் யோகத்தில் பிறந்தவன் நீண்ட முகமுடையவன். திடீரென ஒரு காரியத்தை ஆரம்பித்து நடத்துவதால் கிடைக்கக்கூடும் தன லாபத்தை பெறுபவன். சூரத்துவம் மிகுந்தவன். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உடையவன்m பலம் பலத்தினால் உண்டாகும் கர்வம், பிரசித்தமான நற்குணம் ,சேனைகளுக்கு தலைவனாய் இருத்தல், ஜயசீலம், ஆயுள் விருத்தி,கூர்மையான புத்தி, இவைகளை உடையோனாவான்.
யோக பங்கம்
செவ்வாய் லக்னத்திற்கு சுபனாக இருந்து சனியால் பார்க்கப்பட்டால் மேற்படி யோகம் இல்லை. செவ்வாய் யோகம்தாரன் ஆனால் சனியை செவ்வாய் பார்த்தால் செவ்வாய் தரும் யோகத்தை சனி தருவான்.
முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் சகோதரனை நன்கு கவனித்து, நட்பு பாராட்டியதால் ருசக் யோகம் ஏற்பட்டது.
பலமுறை நட்பு பாராட்டினாலும் சரியான சமயத்தில் சகோதரனை கைவிடுவதால் ருசக்யோக பங்கம் ஏற்படும்.
சகோதரனை நேரில் உதவாமல் ஏவலர் மூலம் உதவினால் ருசக் யோக பங்கம் ஏற்படினும் செவ்வாய் தரும் யோகத்தை சனி தருவான்.