புத்திர சோகத்தையும், மரண பயத்தையும் விலக்கும் அற்புத திவ்ய தேசம் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் -காஞ்சிபுரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஸ்ரீ வரதராஜ பெருமாள்

கோயில்களே வீதிகளாக மாறியிருக்கும் ஸ்தலம் என்று பல ஆண்டுகளாக பெருமையுடன் சொல்லப்படுகின்ற ‘காஞ்சீபுரம்’ பற்றி அறியாதார் யாருமே இருக்க மாட்டார்கள். முற்காலத்திற்கு இந்த திருத்தலமே மன்னர்கள் ஆட்சியில் தலைமையிடமாகக் கொண்டுசெயல்பட்டது. எங்கு திரும்பினாலும் பெருமாள் கோவில்கள் பகவான் இந்த பூமியில் மனிதர்களுக்குள் மனிதனாக வாழ்ந்து அடியார்களுக்கும் பக்திமான்களுக்கும் அருட்கடாட்சம் செய்து வந்திருக்கிறார் என்பதற்கு எத்தனையோ அடிப்படை வரலாறுகள், கல்வெட்டுக்கள் உண்டு.

அத்திகிரி,அத்தியூர் – வாரணகிரி பெருமாள் கோவில் என்று பகவானும் அழைக்கப்படும் ஸத்தியவரத கேஷத்திரமான் இந்த திருக்கச்சிக் கோயில் இருபது ஏக்கர் நிலப்பரளவில் கிழக்கு மேற்காக 1050 அடி நீளமும் வடக்கு தெற்காக 675 அடி அகலமும் மிக உயரமான சுற்று சுவரும் 180 அடி உயரமுள்ள ஒன்பது நிலை ராஜ கோபுரமும், மேற்கே 160 அடி உயரம் கொண்ட எழு நிலை கோபுரமும் ஐந்து பிராகாரங்களையும் கொண்டது.

ஸ்ரீ வரதராஜ பெருமாள்

கருவறை 40 அடி உயரத்தில் இரண்டு அடுக்காக 43 படிகள் கொண்டுள்ளது.

  • மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் நின்ற கோலம், (தேவப்பெருமாள்,பேரருளாளன். தேவாதிராஜன், அத்திவரதன் என்ற வேறு பெயர்களும் உண்டு.
  • தாயார் ஸ்ரீ பெருந்தேவித் தாயார்.

விமானம் புண்யகோடி விமானம், விமானத்தின் கீழ் ஸ்ரீ அழகிய சங்கப் பெருமாள் தாயார் அரித்தரா தேவித் தாயார்.

தீர்த்தம் வேகவதி நதி. வடமேற்கேயுள்ள அனந்தசரஸ் திருக்குளம். வடமேற்கே பொற்றாமரைத் தீர்த்தம். சேஷ வராகத் தீர்த்தம். பிரம்ம தீர்த்தம். மிகப் பழமையான கோயில் திருக்கச்சி நம்பிகள்; மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.

ஐராவதமே மலையுருவில் எம்பெருமானைத் தாங்கியது. எனயே இத்தலத்திற்கு அத்திகிரி என்று பெயர். பிரம்மதேவன் இங்கிருந்து யாகம் செய்தான். எம்பெருமானும் பிரம்மதேவனுக்கு புண்ணியகோடி விமானத்தில் வந்து காட்சி தந்தார். பிருகுமுனிவர், நாரதர், ஆதிசேஷன், இந்திரன், சரஸ்வதி தேவி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு காட்சி கண்டனர் என்பது முக்கியத்துவம் கொண்டது.

ஸ்ரீ வரதராஜ பெருமாள்

கிருதயுகத்தில் பிரம்மனும், திரேதாயகத்தில் கஜேந்திரனும், துவாபரயுகத்தில் பிரகஸ்பதியும், கலியுகத்தில் ஆதிசேஷனும் பூஜித்த ஸ்தலம், இந்தக் கோயிவிலுள்ள தங்க பல்லியை வணங்கினால் வியாதி விலகும் என்பது ஐதீகம்.

இங்குள்ள அனந்தசரஸ் தீர்த்தக் குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் சிலையை 40 வருஷத்திற்கு ஒருமுறை வெளியே எடுத்து பூஜை செய்கிறார்கள். சித்திர மாதத்தில் 15 நாட்களுக்கு சூரியக் கதிர்கள் மூலவரின் திருமுகத்தில் படும். இங்குள்ள சக்கரத்தாழ்வார் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீ உடையவருக்காக கண்களை இழந்த கூரத்தழ்வார்க்கு எம்பெருமான் கண்களை மீண்டும் கொடுத்த ஸ்தலம்.

ஆதிசேஷன் இங்கு வந்து ஆண்டிற்கு இருமுறை (வைகாசி விசாகம் ஆடிமாத வளர்பிறை தசமி) இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். இங்கு நடக்கும் கருடசேவை உலகப் புகழ்பெற்றது. ஒன்பது ஆழ்வார்கள் இந்தக் கோயிலை பாசுரம் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீ வரதராஜ பெருமாள்

பரிகாரம்:

மனிதனுக்கு வரக்கூடிய எத்தகையக் கஷ்டம் வந்தாலும், சோகங்கள் தொடர் கதையாகி உருவெடுத்து துரத்தினாலும், புத்திர சோகத்தால் பாதிக்கப்பட்டாலும், மரண பயம் ஏற்பட்டு – மரணம் நெருங்குவதாக இருந்தாலும், நண்பர்களால், எதிரிகளால், கூடப் பிறந்தவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நிமிடமே இந்த எம்பெருமானைச் சரண் அடைந்து விட்டால் போதும். பகவான் எந்த ரூபத்திலாவது வந்து உங்களது அத்தனை இன்னல்களையும் பொடிப் பொடியாக்கிக் காட்டி சந்தோஷத்தில் வாழ்நாள் முழுவதும் ஆழ்த்துவார்.

கோவில் இருப்பிடம்

Leave a Comment

error: Content is protected !!