நவகிரகங்களுக்குரிய காயத்ரி மந்திரம் மற்றும் ஸ்துதி!!!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

நவக்கிரகங்களுக்குரிய காயத்ரி மந்திரம் மற்றும் ஸ்துதி     

சூரியன்(Sooriyan): 

காயத்ரி: 
அஸ்வத்வஜாய வித்மஹே  பாகஹஸ்தாய தீமஹி தந்நோ: சூரிய ப்ரசோதயாத்.
 
ஸ்துதி: 
சீலமாய் வாழ சீரருள் புரியும் 
ஞாலம் புகழும் ஞாயிரே போற்றி!!
சூரியா போற்றி சுந்தரா போற்றி!!
வீரியா போற்றி வினைகள் களைவாய்..

சந்திரன்(Chandiran): 

காயத்ரி:
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தந்நோ: சோம ப்ர சோதயாத்
 
ஸ்துதி: 
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி!! 
திருவருள் தருவாய் சந்திரா போற்றி!! 
சத்குரு போற்றி!! 
சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி!!

செவ்வாய்(Sevvai): 

காயத்ரி:
வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ: சோம ப்ர சோதயாத்.
ஸ்துதி:
சிறப்புறுமணியேசெவ்வாய்த
தேவே
குறையிலாவருள்வாய்
குணமுடன் வாழ 
மங்கள செவ்வாய் மலரடிபோற்றி 
அங்காரகனே அவதிகள் நீக்கு

புதன்(Pudhan): 

காயத்ரி: 
கஜத்வஜாத் வித்மஹேசுகஹஸ்தாய தீமஹி தந்நோ: புத ப்ரசோதயாத்.
 
ஸ்துதி:
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி பதந்தந்தருள்வாய் பண்ணொளியானே 
உதவியே அருளும் உத்தமா போற்றி

குரு(Guru):

காயத்ரி:
வ்ருஷப த்வஜாயவித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ:
குரு ப்ரசோதயாத்.
 
ஸ்துதி: 
குணமிகு வியாழக் குரு  பகவானே
 மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய் 
 ப்ரகஸ்தி வியாழப் பரகுரு நேசா

சுக்கிரன்(Sukkiran): 

காயத்ரி:
அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ:
சுக்ர ப்ரசோதயாத்
 
ஸ்துதி:
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி!!
 திருவருள் தருவாய் சந்திரா போற்றி!! 
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி!!

சனி(Sani): 

காயத்ரி: 
காஸ்த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ:
மந்தப் ப்ர சோதயாத்
 
ஸ்துதி:
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க
மனம்வைத்தருள்வாய் 
சச்சரவின்றி சாகா நெறியில் 
இச்சகம் வாழ இன்னருள் தாதா

ராகு(Raahu): 

காயத்ரி: 
நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி தந்நோ:
ராகு ப்ர சோதயாத்
 
ஸ்துதி:
அரவெனும் ராகு அய்யனே போற்றி!! 
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி 
ஆகவருள்புரிஅனைத்திலும்
வெற்றி !!
ராகு கனியே ரம்மியா போற்றி!!

கேது(Kethu): 

காயத்ரி:
அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ:
கேது ப்ர சோதயாத்
ஸ்துதி:
கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி!! 
பாபம் தீர்ப்பாய் 
வாதம் வம்பு வழக்குகள் இன்ற 
கேதுத் தேவே கேண்மையாய் ரஷி!!

Leave a Comment

error: Content is protected !!