பொதுவாக ஒரு சிலர் அடிக்கடி வழக்குகள் கோர்ட் என்று போய்க்கொண்டே இருப்பார்கள். வாழ்நாள் முழுக்க கோர்ட்டிலேயே கழிப்பவர்களும் உண்டு. ஏதாவது ஒரு வழக்கு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஜாதகத்தில் உள்ள சில கிரக நிலைகள் தான் காரணம்.
ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது பகையை குறிப்பது.பகை இருந்தாலே வழக்குகள் வந்துவி6,7,8,12-ம் இடங்கள் வழக்குகள், வம்புகள், பிரச்சனைகள் ஆகியவற்றைக் குறிக்கும். அதில் 6-ம் வீடு மிக முக்கியமானது. 8-ம் இடம் என்பது சட்ட சிக்கலையும், மன உளைச்சல்களையும், வருத்தங்களையும், அவமானங்களையும் குறிப்பது. 12-ம் இடம் என்பது கோர்ட்டு வழக்குகளில் நம்முடைய பணம் தண்ணீர் போல் செலவாகும் நஷ்டத்தையும் குறிக்கிறது.
பொதுவாகவே 6-ம் வீடு பழைய பலமடையாமல் 5-ம் வீடு பலம் அடைந்தால் 6-ம் வீட்டினுடைய எதிர்மறை பலன்கள் வீழ்ச்சி அடையும். அதுபோலவே 12-ம் இடம் பலமடையாமல் 11-ம் இடம் பலம் அடைவதன் மூலமாக எந்த சிக்கல் அல்லது வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அப்படி வழக்குகள் வந்தாலும் வெற்றி தான் வரும்.
இதே 6,8,12ம் இடங்கள் சுபத்துவம் பெற்றிருந்தாலும் வழக்குகள் வராது. வந்தாலும் நிற்காது. சரி அப்படி வந்து விட்டால் என்ன பிரயோசித்தம் செய்வது? வழக்குகளில் வெற்றி பெற விரும்புபவர்கள் சகல காரிய சித்திக்கு தரும் சுதர்சன ஹோமத்தை ஒரு முறை நடத்தலாம். அல்லது ஸ்ரீ சுதர்சன மாலா மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை பக்தி சிறத்தையுடன் பாராயணம் பண்ணலாம். இதன் மூலம் அனைத்து கஷ்டங்களும் நீங்கும். வழக்குகள் வெற்றி அடையும்.
ஸ்ரீ சுதர்சன மாலா மந்திரம் |
---|
” ஓம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீஜன வல்லபாய பராய பரம்புருஷாய பரமாத்மனே பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர ,ஓளஷத அஸ்த்ர சாஸ்த்ராணி ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய தீப்த்ரே ஜ்வாலா பரீதாய ஸர்வதிக் ஷோபன கராய ஹூம் பட் ப்ரம்மனே பரம் ஜோதிஷ ஸ்வாஹா!!” |