நித்திய சுமங்கலி மாரியம்மன்-ராசிபுரம்
வரலாறு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எனும் ஊரில் நித்திய சுமங்கலி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது வழக்கமாக அனைத்து மாரியம்மன் ஆலயங்களிலும் சில பண்டிகைகளின் போது அம்மனின் முன் கம்பம் நடப்படும் ஆனால் இக்கோவிலில் இது நிரந்தரமாக நித்திய சுமங்கலி அம்மனுக்கு நேராக நடப்பட்டுள்ளது எனவே இந்த அம்மனுக்கு நித்திய சுமங்கலி எனும் பட்டம் சூட்டப்பட்டுள்ளது
சிறப்பு:
இன்பமான திருமண வாழ்விற்கும் , கணவன் நீடித்து இருக்கவும் ,பல பெண் இத்தளத்திற்கு வந்து நித்திய சுமங்கலி வழிபாட்டு வருகின்றனர் ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு பூக்களால் மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்.
பரிகாரம்:
குழந்தை வரம் வேண்டும் மகளிர் ஐப்பசி மாதத்தில் இக்கோவிலில் இருக்கும் கம்பத்திற்கு பதிலாக புதிய கம்பத்தை நடுவர். பழைய கம்பத்தை ஒரு கிணற்றருகே எடுத்துச்சென்று தயிர் சாதத்தை நைவேத்யமாக படைத்து அதனை உண்பார்கள் இவ்வாறு செய்தால் குழந்தை பாக்கியத்தை பெற்றுத்தரும் என்பது அதிகம்.
சுமங்கலிப் பெண்களின் அடையாளமான மலர்கள் நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும் இச்சடங்கின் பெயர் பூச்சாட்டு இத்தருணத்தில் அம்மனை வழிபடும் பாக்கியம் கிடைப்பது அதிர்ஷ்டமும் ,மிகவும் நல்லதாகவும் கருதப்படுகிறது.
வழித்தடம் :
சேலத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் உள்ளது. சேலத்தில் இருந்து ராசிபுரத்தில் பேருந்து வழித்தடங்கள் உள்ளன. அங்கிருந்து கோவிலுக்கு பேருந்துகள் செல்கின்றன
Google Map :