படவேடு ரேணுகாம்பாள் அம்மன்
வரலாறு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் அமைந்துள்ளது. ரேணுகாம்பாள் அம்மனின் திருநாயகரான முனிவர் ஜமத்கனி தவம் செய்த இடத்திலிருந்து வருடம்தோறும் எடுக்கப்படும் விபூதி இக்கோவிலில் வழங்கப்படும். இந்த விபூதி சின்னம்மை, பெரியம்மை ஆகிய நோயை குணப்படுத்தும் அருமருந்தாக விளங்குகிறது.
சிறப்பு:
திருமண வரம் வேண்டும் பக்தர்கள் இந்த அம்மனை வழிபடுவர். கண் பார்வை குறைபாடு உள்ளோருக்கு அம்மனை வழிபட்டால் விரைவில் குணமாகும். தனது மகன் பரசுராமனால் தலை வெட்டப்பட்ட தால் இக் கோவிலில் அம்மன் தலை தனியாக காணப்படும்.
கோடி தீபம் (பக்தர்கள் ஒரு கோடி விளக்கு ஏற்றுவது) இக்கோவிலின் சிறப்பாகும்.
பரிகாரம்:
இக்கோவிலில் 3-4 நாட்கள் தங்கினால் பெரியம்மை முழுமையாக குணமடையும். பக்தர்கள் துலாபாரம் செய்வது இக்கோவிலில் வழக்கமாக உள்ளது. நம் வேண்டுதல் நிறைவேற நெய் விளக்கு ஏற்றுவது, குணமடைய வேண்டி உடல் உருவங்களின் உருவங்களை வைப்பது, வேப்பஞ்சேலை கட்டி பிரகாரம் வருவது , மொட்டை அடிப்பது ஆகிவை பரிகரங்களாகும்.
பருக்களை அகற்ற வெல்லம் மற்றும் மிளகை காணிக்கையாக செலுத்தலாம்.
வழித்தடம்;
திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பேருந்துகளிலும் இருசக்கர வாகனங்களும் திருவண்ணாமலையிலிருந்து கோவிலுக்கு செல்லலாம்.
Google Map: