பரணி நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்
பரணி நட்சத்திரம்(barani natchathiram ) நான்காம் பாதம் மேதினி எனப்படும் செவ்வாயான(மேதினி-பூமி-பூமிகராகன்(செவ்வாய்)இதனால் செவ்வாய் மேதினி எனப்பட்டான்) விருச்சிக அங்கிஷத்தில் பிறந்தவன்
- வீரப்பட்டயம் அணிந்த தோளினை உடையவன்.(இக்காலத்தில் படையினர் சொக்கயில் கையில் மெல் பக்கம் இருக்கும் குறியீடுகள்(Cross)என்பவை போடப்படுவதும் இது போலத்தான்.
- இவன் படை காவல் துறையில் பணியில் சேர்ந்து அதற்கு தலைவனாகவும் இருப்பான்.
- நறுக்குத் தெறித்தால் போல் பேச வல்லவன்.
- இவனுக்கு கோபம் முன்னாள் துரத்திக்கொண்டு வரும்.
- நல்ல சிறந்த சிறிய குடும்பத்தை சார்ந்தவன்.
- இவன் உருவத்தால் அழகன்
- மெட்டு வைத்துப் பாடும் இசைத்துறையில் தேர்ந்தவன் என்று பொருளாகும்.
பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்
பரணி 4ம் பாதத்தில் கோள்கள் நின்ற பலன்
பரணி 4ம் பாதத்தில் சூரியன்நின்றால்:
- இளமை பருவத்தில் மிகவும் கஷ்டப்படுவான்.
- தந்தை இளமையில் தவறலாம்.
- மற்ற கிரகங்கள் நன்கு அமைய வில்லை என்றால் இவன் பிச்சை எடுக்கவும் நேரிடலாம்.
- ஒரு கிரகம் மட்டுமாவது நன்கு அமைந்தால் இவனுக்கு நல்ல வாழ்வும் உதவியும் அமையும்.
பரணி 4ம் பாதத்தில் செவ்வாய் நின்றால்:
- இவன் தன் நாட்டில் மிக உயர்ந்த பதவி வகிப்பன்.
- இவனுக்கு பல வெளிநாட்டுப் பயணங்கள் அமையும். அவற்றில் எச்சரிக்கை தேவை.
- ஏதாவது வெளிநாட்டு பயண விபத்தில் உயிரிழக்க நேரலாம்.
- இவன் சிறந்த மருத்துவராகவும் இருப்பான்.
- அதே சமயத்தில் பெண்கள் தொடர்பால் கொடிய பால்வினை நோய்களும் ஏற்படலாம்.
பரணி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்
பரணி 4ம் பாதத்தில் புதன் நின்றால்:
- இவன் ஒரு அரசு உத்தியோகஸ்தர்
- இவனுக்கு அறுவை சிகிச்சையால் வடு ஏற்படும்.
- 45 வயதுவரை வாழ்க்கை சுகமாக ஓடும்.அதன்பின் சாதாரண காலம்
- பொறியாளனாகவும் வேலை இருக்கலாம்.
- காக்காய் வலிப்பு, முதலிய நோய்கள் காணலாம்.
பரணி 4ம் பாதத்தில் குரு நின்றால்:
- பெரும்பாலும் பயிர்த்தொழில் மூலம் சம்பாத்தியம்
- பயண தொழிலில் வல்லவன்(Travel Agent)
- இவனுக்கு மந்திரசித்தி உண்டு
பரணி 4ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால்:
- பெரும்பாலும் இவன் வெளிநாடுகளில் வசிப்பவன்.
- சமய சாஸ்திரங்கள் படிப்பவன்.
- புத்தகப்பிரியன்.
- இவன் கோயில் அர்ச்சகராக பணி செய்து அதனால் வரும் நிவேதன அன்னத்தால் வாழ்பவன்.
- பெரும்பாலும் இவன் வயிற்றுப் பிழைப்பே கோயிலில்தான் நடக்கலாம்
பரணி நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்
பரணி 4ம் பாதத்தில் சனி நின்றால்:
- இவன் 35 வயது வரை பிறரிடம் கையேந்தி பிழைப்பான்.
- இளமையில் பெற்றோரை இருப்பதாலும், பிறரால் தத்து எடுத்துக்கொள்ளப்படுவதாலும் இப்படி நேரலாம்.
- அதன்பின் காவல் அல்லது படைத்துறையில் சேர்ந்து முன்னேறுவான்
- இவனை செவ்வாய் பார்த்தால் பயங்கரவாதியாக நேரலாம்.
பரணி 4ம் பாதத்தில் ராகு நின்றால்:
- பால்காரணாகவும்,பால்பண்ணை தொழிலாலும் ஜீவனம்.
- பிறருக்கு மிகவும் உதவுபவன்.
- இவன் மனைவியுடன் ஒற்றுமை குறைவு.
பரணி 4ம் பாதத்தில் கேது நின்றால்:
- நல்ல நீண்ட ஆயுள் உண்டு
- கட்டடத் தொழில் குத்தகை, கலைத்திறன் இவற்றால் சம்பாத்தியம் உண்டு.
- பெரிய மாளிகை எஸ்டேட் சொந்தக்காரன்.
- இசையிலும் நுண் கலையிலும் தேர்ச்சி உண்டு.
- வெண்புள்ளிகள், பால்வினை நோய், கண் நோய் முதலியவை ஏற்படலாம்.
காலசக்கர தசை | |
கடக சந்திரதசை | 21 வருடம் |
சிம்ம சூரியதிசை | 5 வருடம் |
மிதுன புதன் தசை | 9 வருடம் |
ரிஷப சுக்கிரன் திசை | 16 வருடம் |
மேஷ செவ்வாய் திசை | 7 வருடம் |
மீன குரு திசை | 10 வருடம் |
கும்ப சனி திசை- | 4வருடம் |
மகர சனி திசை | 4 வருடம் |
தனுசு குரு திசை | 10 வருடம் |
ஆகப் பரம ஆயுள | 86 வருடம் |
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்லவேண்டிய ஆலயம் :