பரணி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
- பரணி 2 ஆம் பாதத்தில் பிறந்தவன் நவாம்சம் புதன் உடையது.
- இதில் பிறந்தவன் மந்திர சாஸ்திரம் வேதம் இவைகளை கற்பான்.
- இவனுக்கு பெண்களால் அதிக சுகமுண்டு.
- இவனுக்கு பிறரை பற்றி அழகான பலன் சொல்ல தோன்றும் (சோதிடம் கற்பான்)
- எல்லா திக்கும் புகழ் பெற்று வாழ்வான் ,
- பொய் சொல்லாதவன்,
- நிறைய செல்வம் கொழிக்க வாழ்வாரன் ,
- நிறைந்த புத்திசாலியகி அறிவாளிகளில் பெரியவனாக இருப்பான்.
பரணி 2ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்
பரணி 2ம் பாதத்தில் சூரியன் நின்றால் :
- இவன் மிகவும் மகிழ்ச்சியாகவும் ,திருப்தியாகவும் இருக்கும் .
- தன் பெண்கள் ,பிள்ளைகள் மூலம் நல்ல சுகம் அனுபவிப்பான்
பரணி 2ம் பாதத்தில் சந்திரன் நின்றால் :
- பெரும்பாலான வயது காலம் மகிழ்ச்சியாக இருப்பான்.
- இவன் தாய் வழி பாட்டன் மூலம் பணம் பெறுவான்.
- நல்ல கல்வி உண்டு.
- நிறைய படித்தவர்களுடன் பழகும் வாய்ப்பும் ஏற்படும்
பரணி 2ம் பாதத்தில் செவ்வாய் நின்றால் :
- பலகீனமான உடல் உள்ளவன்.
- வெண்புள்ளி நோய் காணலாம்,தோல் நோய்கள் வரலாம்.
- இருப்பினும் இவன் வெகு அறிவாளி.
- கடின உழைப்பாளி
- கல்வியில் கௌரவப் பட்டம் முதலியவை கிடைக்கும்
- பல பெண்களிடம் தொடர்பு உள்ளவன், இதனால் பலவித பால்வினை நோய்கள் காணும்
- விளையாட்டு வீரனாகவும் எவர்சில்வர் வியாபாரம் முதலியவற்றாலும் சம்பாத்தியம் உண்டு.
பரணி 2ம் பாதத்தில் புதன் நின்றால் :
- மத்திம ஆயுள் 50முதல் 60 வரை உள்ளவன் .
- பல காரியங்களில் ஒரே சமயத்தில் ஈடுபட்டு எதிலும் பயன் ,வெற்றி அடைய மாட்டான்.
- தகப்பனுடன் ஐக்கியம் கிடையாது.
- பிறரிடம் பாசமுடன் நடப்பவன்.
- தன்னை அண்டியவர்களுக்கு முடிந்த உதவியை செய்பவன்
பரணி 2ம் பாதத்தில் குரு நின்றால் :
- நிறைய குழந்தை செல்வம் மற்றும் பேரப் பிள்ளைகளும் உண்டு.
- 50வயது வரை மத்திம ஆயுள்
- கொலை, கொள்ளை போன்றவற்றில் வழக்கறிஞானம் , திறமை உண்டு.
- சமயபற்றுள்ளவன்,
- பண்ணை ,பயிர், நிலம், வீடு விற்பனை போன்றவற்றால் சம்பாதிப்பான்.
பரணி 2ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால் :
- பிற பெண்கள் பின்னால் அலைந்து திரிபவன்,
- இவன் ஜனன உறுப்பு நோயால் பாதிக்க படுவான்
- கண்பார்வை குறைவு,
- பிள்ளைப்பேறு, மருத்துவம் செய்வதால் ஆதாயம் உண்டு.
- கண்களுக்கு மேல் புருவம் அல்லது நெற்றியில் காயம் ஏற்படும்
பரணி 2ம் பாதத்தில் சனி நின்றால் :
- மிகவும் உயர்ந்த அறிவாளி
- எந்த காரியத்திலும் நிலைத்த ஈடுபாடு கிடையாது
- அரசு, மந்திரி முதலியவர்களுடன் தொடர்பு உண்டு
- பொதுவாக வாழ்க்கை மகிழ்ச்சியாக சுகமாக இருக்கும்
- இந்த பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் முதலியவை ஏற்படலாம்
- கட்டிகள், மயக்கம், கடும் காய்ச்சல் போன்ற நோய்கள் காணலாம்.
பரணி 2ம் பாதத்தில் கேது நின்றால் :
- 63 வயது வரை வாழ்வான்
- நீர் சம்பந்தமான நோய்கள் காணும்,
- தலையில் அடிபடலாம்
- காக்கை வலிப்பு போன்ற நோய்கள் ஏற்படலாம்
- மூளை ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
- போலீஸ் துறையில் உத்தியோகம் ஏற்படலாம்.
- கண்ணில் புரை மற்றும் மங்கல் போன்ற நோய்கள் காணலாம்.
பரணி 2ம் பாதத்தில் ராகு நின்றால் :
- அந்தஸ்து மதிப்பு முதலியவை ஏற்படும்.
- இவன் சேர்த்த பணத்தை அவ்வளவாக செலவழிக்க மாட்டான்.
- மோட்டார், ஸ்கூட்டர், கார் முதலிய வாகனம் பழுது பார்த்தல் போன்ற வற்றாலும் சம்பாத்யம் உண்டு
- வெண்புள்ளிகள், தொழுநோய் முதலியவை ஏற்படலாம்.
- கசாப்புத் தொழிலாலும் லாபம் சம்பாதிக்க நேரலாம் .
காலச்சக்கர தசை
கும்ப சனி தசை | 4 வருடம் |
மகர சனி தசை | 4 வருடம் |
தனுசு குரு தசை | 10வருடம் |
மேஷ செவ்வாய் தசை | 7 வருடம் |
ரிஷப சுக்கிர தசை | 16வருடம் |
மிதுன புதன் தசை | 9 வருடம் |
கடக சந்திர தசை | 21 வருடம் |
சிம்ம சூரிய தசை | 5 வருடம் |
கன்னி புதன் தசை | 9 வருடம் |
ஆக பரம ஆயுள் | 85வருடம் |