சிம்மம் – அமைதி
(மகம் ,பூரம்,உத்திரம் 1ம் பாதம் )
சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே !!இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்வதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனிபகவான் ஆறில் இருந்த போது பல நன்மைகளை ஏதோ ஒரு வகையில் அனுபவித்து வந்திருப்பீர்கள், ஆனால் இப்பொழுது சனிபகவான் ஏழில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யவும்.
கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகம் வியாபாரம் சம்பந்தமாக குடும்பத்தை பிரிய வேண்டி வரலாம். விலை உயர்ந்த பொருட்கள், தங்க நகை கடைகளில் வேலை பார்ப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. திருமணம் சம்பந்தமாக எதிர்பார்த்த பெரிய தொகை கைக்கு வரும். அரசாங்க அதிகாரிகள் மூலமாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டமாக பெரிய பதவிகள் தேடி வரும். சிலருக்கு வீடு ,வண்டி சம்பந்தமாக சுப விரயங்கள் உண்டாகலாம்.
இந்த காலகட்டத்தில் கூட்டுத்தொழில் தொடங்க வேண்டாம். தொழில் செய்ய வட்டிக்கு புதுக்கடனும் வாங்க வேண்டாம். மனதில் திடீரென தேவையில்லாத பயம் கவலை வரலாம், அதனால் எப்போதும் இஷ்ட தெய்வம் மந்திரத்தை மனதில் ஜெபம் செய்வது நல்லது. இல்லத்தரசிகளை பொறுத்த வரை ஒரே சமயத்தில் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீடு என இரண்டையும் சமாளித்து புத்தி சாதுரியத்தால் வெற்றி பெறுவீர்கள். அதே சமயம் உடல் நலத்தில் கவனம் தேவை.
அலுவலகம் செல்லும் பெண்களை பொறுத்தவரை வேலை செய்யும் இடத்தில் யாரையும் நம்பி எதுவும் பேச வேண்டாம். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் பணத்தை சரியாக கையாள்வது அவசியமாகும். சூப்பர் மார்க்கெட், செல்போன், டிவி ரிப்பேர் கடைகள், மெக்கானிக், மருந்து கடைகள், புத்தகம் அச்சிடுவோர், மீடியா சம்பந்தமான தொழில் செய்வோர் அனைவரும் இந்த சனி பெயர்ச்சி நல்லவிதமாக இருக்கும்.
இதையும் கொஞ்சம் படிங்க : உங்கள் ஜாதகம் முற்பிறவி சாபம் பெற்ற ஜாதகமா ? பரிகாரம் என்ன ?
அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களை பொறுத்தவரை முன்பு போல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத இடத்திற்கு திடீரென மாற்றப்படலாம். ஒப்பந்த பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம். கோபத்தை தவிர்க்கவும். இது கண்ட சனிக்காலம் என்பதால் பொறுமையுடன் சிந்தித்து செயலாற்றினால் எதையும் சாதிக்கலாம்.
சனிபகவான் பார்வை பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசி மற்றும் 4,9 இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் எதையும் யோசிக்காமல் செய்ய வேண்டாம். மிக முக்கியமாக இருக்கும் வேலையை விட்டுவிட்டு புது தொழில் தொடங்க வேண்டாம்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டை பார்ப்பதால் பகட்டுக்காக வீண் செலவு செய்யாதீர்கள். குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குங்கள். சிலர் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமை சனி ஓரையில் புதுக்கோட்டை எட்டியதளி சிவன் கோவிலில் தனி சன்னதியில் இருக்கும் சனிபகவானை வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள் வாழ்வில் நன்மை பிறக்கும்.