பிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள் -சிம்ம ராசி
பொதுவுடைமை சிந்தனை , மற்றவர் மனம் கோணாதபடி பழகும் குணம் , சுய கட்டுப்பாடு, தலைமை பதவிக்கு தகுதியான சிம்ம ராசி அன்பர்களே!!!
இந்த பிலவ வருடம் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்.
- உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் புத்தாண்டு பிறப்பதால் சகலத்திலும் உயர்வு உண்டு
- அரைகுறையாக நின்ற வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து முடியும்
- குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் தங்கும்
- கையில் தங்காமல் பணம் செலவாகி கொண்டிருந்தது அந்த நிலை மாறும் சேமிக்கவும் தொடங்குவீர்கள்
- பழைய கடனை பைசல் செய்வீர்கள்
- தன்னம்பிக்கை மேலோங்கும்
- உங்கள் பிள்ளைகளிடம் அன்பு செலுத்துவீ ர்கள்
- பையனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்
- வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் தேடி வரும்
- உங்கள் மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல மாப்பிள்ளை வந்து சேருவார
- சித்திரை வைகாசி ஆவணி மாதங்களில் நினைத்தபடி திருமணத்தை நடத்தி முடிப்பீர்கள்
- வீடு மனை வாங்கும் யோகம் உண்டு
- வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் மன நிம்மதி உண்டு
- சொந்தபந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள
- அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள்
- அரசியல் மற்றும் ஆன்மீகவாதிகளின் நட்பு கிடைக்கும்
- வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்
- குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்

செல்ல வேண்டிய ஆலயம்
சோமவாரம் ,பிரதோஷ காலங்கள் ,மாத சிவராத்திரி தினங்களில் கோளாறு பதிகம் படித்து வீட்டிலேயே சிவ வழிபாடு செய்யலாம் ,
அருகிலுள்ள ஆலயங்களில் உழவாரப்பணி நடந்தால் ,நீங்களும் பங்கேற்கலாம் ,சிவபுராணம் படிப்பதும் நன்மையை சேர்க்கும்
குறிப்பாக ஒரு பிரதோஷ நாளில் தர்மபுரி மாவட்டம் கடத்தூருக்குச் சென்று அங்கு கோயில் கொண்டு இருக்கும் அர்ச்சுனேஸ்வரரை வழிபாட்டு வாருங்கள் நீங்கள் நினைத்தவை தடையின்றி நிறைவேறும்
இயலாதவர்கள் அருகிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு,சிவதரிசனம் செய்து வரலாம் .அதனால் புது முயற்சிகள் வெற்றி பெரும் .
Also Read

