ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-சிம்மம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

எதையும் வெளிப்படையாகவும், முகத்துக்கு நேராக பேசும் ‘சிம்ம ராசி’ அன்பர்களே!!! உங்கள் ராசிக்கு புதனும், சுக்கிரனும் சாதகமான வீட்டில் நின்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறக்கிறது.

வீட்டில் நிம்மதி நிலவும். படிப்படியாக விசேஷங்கள் வரத் தொடங்கும். விலகி இருந்த உறவும், நட்பும் வந்து சேரும். தம்பதியரிடையே பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் அவசியம். மூன்றாம் நபர் முன்னாள் எந்த உறவையும் மன நோக பேச வேண்டாம். தற்பெருமைக்காக செய்யும் வீணான ஆடம்பரம் தவிர்த்தால் சேமிப்பு உயரும். குடும்பத்து ரகசியங்களை பொது இடங்களில் பேசுவதை தவிர்த்திடுங்கள். சகோதர உறவுகளால் நன்மை ஏற்படும். சின்ன சின்ன விஷயத்திற்கும் உணர்ச்சி வசப்படுவதை தவிருங்கள். தினமும் சிறிது நேரமாவது இஷ்ட தெய்வத்தை கும்பிடுங்கள்.

அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். மனதில் இருந்த இனம் புரியாத பயம் நீங்கும். இடம் மாற்றமும், பதவி உயர்வும் கொஞ்சம் தாமதமானாலும் நிச்சயம் கிடைக்கும். யாரோட தனிப்பட்ட செயல்களையும் விளையாட்டாக கூட விமர்சிக்க வேண்டாம். முகஸ்துதி பாடும் நபர்களை முதல் வேலையாக விலக்குங்கள். திறமையை வளர்த்து கொண்டு , திட்டமிட்டு செயல்படுங்கள். அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு இல்லத்தில் இருந்த இருண்ட சூழல் மறைந்து, விடியல் வெளிச்சம் பரவ ஆரம்பிக்கும். அசையும், அசையா சொத்தும், ஆடை ஆபரணமும், சேரும். சகோதர உறவுகளால் ஆதரவு அதிகரிக்கும். கல்யாண மாலை மனம்போல தோல் சேரும். அம்மா ஆகும் பாக்கியம் நிச்சயம் கூடிவரும். கொடுக்கல் வாங்கல் எதையும் உடனுக்குடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

30.04.2024 வரை உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் குரு நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். புதிய சொத்து வாங்குவதற்காக பாக்கி பணத்தை கொடுத்து பத்திர பதிவு செய்வீர்கள். வீடு, மனை சேரும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். வங்கியில் வாங்கி இருந்த கடனை அடைப்பீர்கள். ஆளுங்க கட்சியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.

1.05.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் குருபகவான் தொடர்வதால் எதிலும் அலட்சியம் இல்லாமல் முன் யோசனையுடன் செயல்படுங்கள். அடுத்தவர்களை தாக்கிப் பேசுவது வேண்டாமே! முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கி வைக்காதீர்கள். யாருக்கும் கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள்.

ஆண்டு முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-து வீட்டில் வந்தமறுகிறார். கேது பகவான் 2வது வீட்டிற்கு வருகிறார். தந்தையார் ஸ்தானத்தை விட்டு ராகு விலகுவதால் இதுவரை தந்தையாருக்கு இருந்த நோய் தீரும். ஆனால் சேமிப்புகள் கரையும். கேதுவின் நிலை வாக்குவாதங்களை உண்டாக்கும்.

இந்த ஆண்டு முழுவதும் ஏழாம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் கணவன் மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். நீங்களும் வீண் சந்தேகத்தில் உழல வேண்டாம்.

பலன் தரும் பரிகாரம்

ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வ்ருவது நல்லது.

Leave a Comment

error: Content is protected !!