Homeபிலவ வருட புத்தாண்டு பலன்கள்பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்- துலாம் ராசி

பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்- துலாம் ராசி

பிலவ வருட  தமிழ் புத்தாண்டு பலன்கள் – துலாம் ராசி 

 
(சித்திரை 3-4ம்பாதம்  சுவாதி விசாகம் 1, 2, 3-ம் பாதம்) 
 
எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமை உடைய துலாம் ராசி அன்பர்களே!! உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்! 
 
உங்கள் ராசிக்கு சமசப்தமான 7-ம் வீட்டில் புதுவருடம் பிறப்பதால் 
உங்களின் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும் 
கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
 பணத்தட்டுப்பாடு தீரும். 
வீண் செலவுகள் கட்டுப்படும்.
வரவேண்டிய பணம் வந்துசேரும். 
வீண் கவலைகள் நீங்கும் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். 
பிள்ளைகளின் விருப்பப்படி அவர்களை அயல்நாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். 
பையனுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். 
கார்த்திகை மாதத்திலிருந்து மகிழ்ச்சி உண்டு. 
பணவரவு சரளமாக இருக்கும் உடன்பிறந்தவர்கள் இடையே விட்டுக்கொடுத்துப் போவீர்கள். 
பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள் குழந்தை இல்லாத தம்பதிக்கு ஆவணி, புரட்டாசி மாதங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும். 
உறவினர்கள் உதவி நாடி வருவார்கள் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
 உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 
வெளியே சாப்பிடுவதை தவிர்க்கவும் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். 
புது முயற்சிகளில் தீவிரமாவீர்கள் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 
மார்கழி தை மாதங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். 
வீடு வாகன வசதிகள் பெருகும்.
 
செல்ல வேண்டிய ஆலயம்
 துலாம் ராசி அன்பர்களுக்கு பெருமாள் வழிபாடு நன்மைகளை உண்டாக்கும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வழிபடலாம். பெரியோர்கள் உடன் அமர்ந்து பாகவதம் பாராணம் செய்யலாம்.
 
ஏகாதசி தினங்களில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி சமர்ப்பித்து பெருமாளை வழிபடுவது விசேஷம்.
 
 ஒரு முறை சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வீரராகவ பெருமாளை சனிக்கிழமை குடும்பத்துடன் சென்று தரிசித்து வாருங்கள் நடப்பவை யாவும் நன்மைகளாக நடக்கும்…
 
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!