Homeஜோதிட குறிப்புகள்கிரகங்களின் ஆட்சி,வர்கோத்தமம் மற்றும் பரிவர்த்தனை பலன்கள்

கிரகங்களின் ஆட்சி,வர்கோத்தமம் மற்றும் பரிவர்த்தனை பலன்கள்

கிரகங்களின் பரிவர்த்தனை பலன்கள்

  • லக்னாதிபதியும் 2 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.
  • 2 ஆம் அதிபதியும் 3 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், திக்கு வாய் உண்டாகும்.
  • 3 ஆம் அதிபதியும் (லக்னத்துக்கு 4 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், தாயார் ஜாதகரது சகோதரருடன் தங்குவார்.
  • 4 ஆம் அதிபதியும் 5 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், தாயார் பெயரில் வீடு கட்டுவார்,
  • 5-6 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனையானால், வட்டிகட்டியே மாள்வார்.
  • 6-7 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனையானால், மனைவி / கணவர் நோய்வாய்ப்படுவார்.
  • லக்னத்துக்கு 7-8 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனையானால், மனைவி / கணவர் வங்கித் தொழில் செய்வார்.
  • 8-9 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனையானால், தந்தை உணவகம் வைப்பார்.
  • 9-10 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனையானால், கோயில் கட்டுவார்.
  • 10-11 அதிபதிகள் பரிவர்த்தனையானால், விமானப் போக்குவரத்து ஒப்பந்தக்காரர்.
  • 11-12 அதிபதிகள் பரிவர்த்தனைகள், வங்கி இலாபம் உண்டு.
  • லக்கினாதிபதியும் 3 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், சகோதர பாசம் உண்டு.
  • லக்கினாதிபதியும் 4 ஆம் அதிபதியும் பரிவர்த்தனை அல்லது ஆட்சியானால், தாயார் நீண்ட ஆயுள் உள்ளவராவார்.
  • லக்கினாதிபதியும் 5 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையனால், தாமத புத்திர பாக்கியம் உண்டு.
  • லக்கினாதிபதியும் 6 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், புரோ நோட்டில் சாட்சி கையொப்பமிட்டு இடருறுவார்.
  • லக்கினாதிபதியும் 7ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், மனைவி / கணவர் வயது / தகுதி/படிப்புக்கு ஒவ்வாதவராவார்.
  • லக்கினாதிபதியும் 8 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், தந்தை தலைவராவார் நீண்ட ஆயுள் ஜாதகருக்கும் தந்தைக்கும் உண்டு.
  • லக்கினாதிபதியும் 9 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், பேராற்றல் மிக்க வன்செயல்கள் புரிபவர்.
  • லக்கினாதிபதியும் தொழிலதிபதி (10 ஆம் அதிபதி) பரிவர்த்தனையானால், வங்கி மேலாளர் ஆவார்.
  • லக்னாதிபதியும் 11 மற்றும் 12 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனையனால், விற்பனைப் பிரதிநிதி ஆவார்.

சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் என்ற கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் படுகொலை செய்யப்படுவார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் 6ல் இருந்தாலும், கடகம் அல்லது கன்னியில் இருந்தாலும் தோல் நோய் உண்டாகும்.

ஆட்சி மற்றும் வர்கோத்தம பலன்கள்

  • லக்னாதிபதி ஆட்சியானால் நல்ல வாழ்வும், வர்கோத்தமமானால் திட்டமிட்ட காரியம் வெற்றி பெறும் வாய்ப்பும் உண்டு.
  • இரண்டாம் அதிபதி குடும்பாதிபதி ஆட்சி வர்கோத்தமமானால் திட்டமிட்ட குடும்பக் குதாகலமுண்டு,
  • 3ஆம் அதிபதி, சகோதராதிபதி ஆட்சி உச்சம் வர்கோத்தமமானால் சகோதரர் உதவி உண்டு.
  • 4 ஆம் அதிபதி ஆட்சி, வர்கோத்தமமானல் தாயார் அன்பு கிடைக்காது.
  • 5 ஆம் அதிபதி ஆட்சி, வர்கோத்தமமானால் பூர்வீக சொத்து கிட்டாது. அபார்ஷன் ஆகும்.
  • 6 ஆம் அதிபதி ஆட்சி, வர்கோத்தமமானால் கடன் உண்டாகாது.
  • 7 ஆம் அதிபதி ஆட்சி, வர்கோத்தமமானல் மிக அழகான மனைவியாவாள்.
  • 8 ஆம் அதிபதி ஆட்சி, வர்கோத்தமமானால் நீண்ட ஆயுள் பலம் தரும்.
  • 7 ஆம் அதிபதி ஆட்சி, வர்கோத்தமமானல் மிக அழகான மனைவியாவாள்.
  • 8 ஆம் அதிபதி ஆட்சி, வர்கோத்தமமானால் நீண்ட ஆயுள் பலம் தகும்.
  • 9 ஆம் அதிபதி ஆட்சி, வர்கோத்தமமானால் தந்தைக்கு நீண்ட ஆயுள்.
  • 10,11 அதிபதிகள் ஆட்சி, வர்கோத்தமமானால் பொருளாதார மேன்மை.
  • 12 ஆம் அதிபதி ஆட்சி, வர்கோத்தமமானால் செலவு உண்டாகாது.

ஆட்சி என்பது அந்தக் கிரகம் சொந்த வீட்டில் இருப்பதையும், வர்கோத்தமம் என்பது அம்சத்திலும் அதே இடத்தில் இருப்பதையும் குறிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!