Homeபிலவ வருட புத்தாண்டு பலன்கள்பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-கும்பராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-கும்பராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-கும்பராசி

கொடுத்துச் சிவந்த கைகளை உடைய கும்பராசி அன்பர்களே!! எவரிடமும் உதவி கேட்டு கை நீட்ட  மாட்டீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். உங்களுக்கு இந்த புத்தாண்டு எத்தகைய பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்..

தமிழ் புத்தாண்டு உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானமான 3வது ராசியில் பிறப்பதால் 

  • இழுபறியான வேலைகள் முழுமை அடையும்
  •  உங்கள் வாழ்க்கை பிரகாசமடையும்
  • கணவன்-மனைவிக்குள் அன்பு செலுத்துவீர்கள்
  • பிரச்சனை ஏற்படுத்திய உறவினர்களை ஒதுக்குவீர்கள்
  • சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்
  • செலவுகளை சமாளிப்பீர்கள்
  • பணப்பை நிரம்பும்
  • பிள்ளைகளின் மனதை அறிந்து செயல்படுவீர்கள்புதிய ஆடை அணிகலன்கள் சேரும்
  • வைகாசி ஆனி மாதங்களில் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும்
  • எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்
  • உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்
  • கோபம் குறையும்
  • பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள்
  • பொருளாதாரம் உயரும்
  • அரசு விஷயங்களில் எச்சரிக்கை தேவை
  • வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்
  • அவணி மாதம் வீட்டில் சுப காரியம் நடக்கும்.
  • பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்
  • பிரபலங்களின் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்
  • புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதால் மனநிறைவு கிட்டும்
  • நல்ல வேலை இல்லையே என்று வருந்தி அன்பர்களுக்கு புரட்டாசி மாதம் புது வேலை தேடி வரும்
  • நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு
  • வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்
  • அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்
  • அரைகுறையான கட்டட வேலைகள் முழுமை அடையும்
  • ஐப்பசி கார்த்திகை மாதங்களில் புதிய வீடு மனை வாங்குவீர்கள்
  • உங்களின் பேச்சைக் கேட்டு அனைவரும் வியப்பர்
  • எதிர் வீட்டுக்காரர்கள் உடனிருந்த சண்டை சச்சரவு விலகும்
  • வெளியூர் பயணம் ஆதாயம் தரும்

செல்ல வேண்டிய ஆலயம்
கும்ப ராசி அன்பர்களுக்கு சனி பகவான் விரயச் சனியாக பலன் தர உள்ளார் அதேபோல் 20.3 2022 வரையிலும் ராகு கேது சஞ்சாரம் சில சஞ்சலங்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

இது போன்ற குறைகளும் பாதிப்புகளும் நீங்க கும்ப ராசிக்காரர்கள் அம்மனை சரணடைய வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள அம்மன் ஆலயங்களுக்கு சென்று தீபமிட்டு வழிபடல்வேண்டும்.பவுர்ணமி தினங்களில் வீட்டில் சித்தாரன்னங்கள் படைத்து வழிபடுங்கள்.

முடிந்தால் வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்டம் புட்லூர் எனும் தலத்தில் அருளும் அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு வாருங்கள் வினைகள் யாவும் நீங்கும்.

நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!