Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு வக்ர பெயர்ச்சி 2024 : மேஷம் பலன்கள் மற்றும் பரிகாரம்

குரு வக்ர பெயர்ச்சி 2024 : மேஷம் பலன்கள் மற்றும் பரிகாரம்

குரு வக்ர பெயர்ச்சி 2024 – மேஷம்

உங்கள் பிறந்த ஜாதகத்தை பார்த்தால் சில கிரகங்களின் அருகில் (வ) என்று போட்டிருக்கும். இதற்கு அந்த குறிப்பிட்ட கிரகம் வக்கிரம் அடைந்துள்ளது என்று பொருள். எல்லா கிரகங்களும் வக்கிரம் அடையுமா?எனில் இல்லை. சூரியன், சந்திரன், ராகு -கேது ஆகிய கிரகங்கள் வக்கிரமடைய மாட்டார்கள். குரு, சனி, சுக்கிரன், புதன், செவ்வாய் மட்டுமே வக்கிர நிலை பெறுவார்.

உங்கள் பிறப்பு ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்திருந்து கோச்சாரத்தில் அதே கிரகம் வக்ரகதிக்கு வந்தால் உயர் பலனையே கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

தற்போதைய கோச்சாரத்தில் குரு வக்ரகதி அடையவிருக்கிறார்.வாக்கியபடி 2024 அக்டோபர் 15 முதல் 2025 பிப்ரவரி 10-ம் தேதி வரை வக்ரம்.

திருக்கணிதப்படி 2024 அக்டோபர் 8ம் தேதி முதல் 2025 பிப்ரவரி 4ம் தேதி வரை வக்ரம் பெறுகிறார்.

குரு வக்ர பெயர்ச்சி 2024

மேஷம்

உங்கள் பிறந்த ஜாதகத்தில் குரு வக்ரமாகி இருந்தால் இந்த காலகட்டத்தில் மனை மூலம் பணவரவு வரும். வாகன பயணத்தின் போது ஏற்படவிருந்த ஒரு விபத்து தவிர்க்கப்படும். உங்கள் சொற்கள் மேன்மை தரும். குடும்பத்தில் பேசி பேசிய சண்டை உருவாவது ஆரம்பத்திலேயே தடுக்கப்படும்.

வேலை, உயர்கல்வி சார்ந்த வெளிநாட்டுத்தடங்கள் நீங்கும். உங்கள் வாக்கு பொலிவு பெரும்.இதனால் பேச்சு மூலம் பணம் சம்பாதிப்போர், வாழ்க்கையின் உயர்ச்சியை அனுபவிப்பார். இவர்கள் தங்கள் கருத்துக்களை பிறர் புரியும்படி எளிமையாகவும், வலிமையாகவும் கூற முடிவதால், இவை சார்ந்த வியாபாரம் மற்றும் கல்வி நிகழ்வுகள் பிரமாதப்படும்.

பரிகாரம்

அண்ணாமலையார் கோவில் அல்லது சாது மடங்களுக்கு முழு மட்டை தேங்காய் தானம் தருவது நல்லது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!