புதன் கிரகம் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் ??

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

புதன் கிரகம் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் ??

லக்கினத்தில் புதன்

  • முதல் பாவத்தில் புதன்((Budhan)) வலிமை பெற்றவனாய் இருக்கப்பெற்றவர்
  • கல்வி ,கலை ,கணிதம் ஜோதிடம் மாந்திரீகம் ஆகியவற்றில் வல்லவராக புகழ் பெறுவார்,
  • முதல் பாவத்தில் புதன் வலிமை குறைந்தவர் இருக்கப்பெற்றவர்
  • அறிவில் குறைந்தவராய், அரைகிறுக்காய், தெருத்தெருவாக சோதிடம் பார்த்து திரிபவராய் இருக்க வாய்ப்பு உண்டு,
  • புதன்(Puthan) கிரக தோஷ பரிகாரம் செய்தால் நற்பலன்கள்கிட்டும்.

2ல்-புதன்

  • இரண்டாம் பாவத்தில் புதன்(Budhan) அமையப் பெற்றவர்,
  • கல்வியில் தேர்ச்சி பெற்றவராய், இனிமையான குடும்பம் வாய்க்கப் பெற்றவராக இருப்பார்
  • வசதிகளைத் தாமாகதேடி கொள்பவராகவும் ,இனிமை ,கவர்ச்சி நகைச்சுவை ஆகிய தோன்றப் பேசுபவராகவும் இருப்பார்
  • இரண்டாம் பாவத்தில் புதன்(Puthan) கெட்டவனாய் இருக்க பெற்றவருக்கு இவை அத்தனையும் மாறும்

3ல் -புதன்- 

  •  மூன்றாம் பாவத்தில் புதன்(Budhan)அமைந்தால்
  • சோதிடம் ,அஷ்டமாசித்தி ஆகியவற்றால் அறிவாற்றல் உண்டாகும் .
  • மிகுந்த புத்திசாலித்தனம் இருக்கும்,
  • போக இன்பத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டாகும்,
  • இனிப்பான உணவுகளில் விருப்பம் ஏற்படும் ,
  • வினோதமான பொருள்களில் ஆசை உண்டாகும்,
  • வசதியான வாழ்க்கை அமையும்,
  • எப்போதும் குரலை தாழ்த்தியே பேசுவார்,

4ல்-புதன்

  •  நான்காம் பாவத்தில்புதன்(Budhan)அமையப் பெற்றவருக்கு ,
  • தந்தைவழி உறவினர்களால் நன்மை ஏற்படும்,
  • இலக்கிய படிப்பினால் புகழ் கிட்டும்
  • வீடு, வாகனம், பெருந்தன்மை ,மிகுந்த புத்திசாலித்தனம் ஆகியன வாய்க்கும்,

5ல் -புதன்

  • 5ம் பாவத்தில் புதன்(Budhan) அமையப் பெற்றவருக்கு
  • நாகரிக போக்கு ஏற்படும்,
  • இவர் அழகிய ஆடைகள் உடுத்துவராய் இருப்பார்,
  • மற்றவரைப் பழித்துத்துப் பேசுவார்
  • விஷ்ணு பக்தராக இருப்பார் ,
  • சில மக்களே பிறப்பர் ,

6ல் -புதன்

  • ஆறாம் பாவத்தில் புதன்(Budhan) அமையப் பெற்றவர்,
  • ஏமாற்றுபவர்களால் தொல்லை  அடைவார்,
  • தொழிலில் கவனக் குறைவு ஏற்பட்டு பொருள் இழப்பு உண்டாகும்,
  • உடலில் வாயு தொல்லை வாயு தொல்லை ஏற்பட்டு தொல்லை வரும்

7ல் புதன்

  •  ஏழாம் பாவத்தில் புதன்((Budhan) அமையப் பெற்றவருக்கு
  • வியாபாரத்தில் தொல்லை ஏற்படும் ,
  • மனைவியினால் சொத்து கிட்டும்,
  • மக்கட் பேறு வாய்க்கும்,
  • வாழ்க்கை வசதிகள் அமையும்

8ல் புதன்

  •  எட்டாம் பாவத்தில் புதன்(Budhan) அமையப் பெற்றவருக்கு,
  • ரத்தசோகை ஏற்படலாம்,
  • மனபயம் உண்டாகலாம்,
  • நீராலும் பிறரின் கொடுமை அல்லது தாக்குதலும் உடலுக்கு ஆபத்து ஏற்படலாம்,
  • வாழ்க்கை, போராட்டம் மிகுந்ததாக இருக்கும்,
  • எதிரிகள் தொல்லை எப்போதுமிருக்கும்,

9ல் புதன்

  •  ஒன்பதாம் பாவத்தில் புதன்(Budhan) அமையப் பெற்றவர்
  • எப்போதும் பயணம் செய்துகொண்டே இருப்பார்,
  • எப்போதும் நகைச்சுவையோடு பேசுவார் ,
  • மதப்பற்று ,பக்தி ,ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவை உள்ளவர்

10ல் புதன்

  •  பத்தாம் பாவத்தில் புதன்(Budhan) இருக்கப் பெற்றவர்
  • விஷ்ணுவிடம் தீவிர பக்தி கொண்டிருப்பார்
  • இலக்கிய ஞானம் மிகுந்தவராக இருப்பார்
  • சிறந்த வியாபாரியாகவும் , நகைச்சுவை கலந்து பேசும் அறிவு ஆற்றல் பெற்றவராகவும் ,மற்றவர் மரியாதை கொடுக்கும் அளவிற்கு விஞ்ஞானம் கொண்டவராகவும் இருப்பார் ,

11ல் புதன் 

  • பதினோராம் பாவத்தில் புதன்(Budhan) அமையப் பெற்றவர்,
  • நகை வியாபாரம் செய்து நல்ல லாபம் ஈட்டுவர்,
  • அழகான மனைவியும் அறிவுள்ள குழந்தைகளும் அமையப்பெற்றவர்,
  • ஆலய வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்,
  • நல்ல கல்வியும் அறிவியல் துறையில் ஈடுபாடும் கொண்டவர்,
  • சிலர் விஞ்ஞானிகள் ஆகவும் மாற வாய்ப்புண்டு,
  • சிறந்த பக்திமான், புத்திமான், நீதிமான் என மற்றவர் புகழ வாய்ப்பு கிட்டலாம்,
  • வசதியான வீடு ,வாகனம், அன்பான உறவினர்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு

12ல் புதன்

  • பனிரெண்டாம் பாவத்தில் புதன்(Puthan) அமையப் பெற்றவர்
  • பிறர் ஆதரவில் வாழ்பவராக  இருப்பார்,
  • எப்போதும் சிந்தனை செய்து கொண்டும் கவலையோடு இருப்பார்
  • குரலில் தெளிவின்மை, புத்தி மந்தம் ஆகிய குறைகள் ஏற்படலாம்
  • பாவங்களின் நீச புதன்(Budhan)அமையப் பெற்றவர் புதன்(Budhan) கிரக பரிகார பூஜைகள் செய்து ஓரளவு நற்பலனை அடையலாம்

Leave a Comment

error: Content is protected !!