பைரவரை வணங்குங்கள்
ஞாயிற்று கிழமை நாளில் ராகு காலத்தில் கால பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து, புனுகு சாற்றி, நாகலிங்க மாலை அல்லது எலுமிச்சை மாலை அணிவித்து, எள் கலந்த அன்னம் படையலிட்டு, இனிப்பு பாயசம் படைத்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்கான மந்திரங்களைச் கூறி அர்ச்சனை செய்து குறைந்தது பத்து பேருக்கு அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை காலபைரவர் நீக்குவார்.பிதுர் தோஷம் நீங்கினால் வாழ்வில் உயர்வடைய முடியும்..
சனிபகவான் துன்பத்திலிருந்து விடுபட
தனது ஆட்சி காலத்தில் எவரையும் நடுங்கச் செய்யும் சனி பகவான்.அர்த்தாஷ்டம் அஷ்டம், கண்ட ஏழரை ஆண்டுச் சனியின் காலங்களில் ஆட்டிபடைக்கும் தன்மையில் நடுங்காதவர் எவருமில்லை. பைரவ பக்தர்களை கொடுமைப் படுத்துவதில் விருப்பம் இல்லாதவர் சனிபகவான். விதிப்பயன் காரணமாக சனி கடுமையாகத் தாக்கும்போது பைரவர் அருள்புரிந்து காப்பாற்றிவிடுவார் .வேண்டுவோரின் துயரங்களை தீர்ப்பவர் பைரவர். கால பைரவருக்கு செய்ய வேண்டிய பூஜைகள் மூலம் உரிய பரிகாரங்கள் செய்தால் சனியின் கொடூர பிடியில் இருந்து தப்பிக்கலாம்.
சகோதர ஒற்றுமை ஏற்பட
செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளி மாலை அணிவித்து, புனுகு பூசி, துவரம் பருப்பு பொடி கலந்த அன்னம், செம்மாதுளம்,படையலிட்டு அர்ச்சனை செய்துவர சகோதர ஒற்றுமை ஏற்படும்.
வெற்றிகள் குவிய
செவ்வாய்க்கிழமை நாளில் காலபைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, புனுகு பூசி எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி வேகவைத்த செங்கிழங்கு கலந்த பாயசம், மாதுளம்பழம், ஜிலேபி படையலிட்டு அர்ச்சனை செய்துவர எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவியும்.
கல்வியில் சிறந்து விளங்க
புதன் கிழமை நாளில் கால பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, பருப்புப்பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்பு பாயசம், படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
புதிய தொழில் தொடங்க
புதன்கிழமை காலை பத்து 10:30 மணி முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து, மரிக்கொழுந்து மாலை சூட்டி, புனுகு பூசி, பாசிப்பயறு சுண்டல், பயறு பாயசம், கொய்யாப்பழம், பாசிப் பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் வியாபாரத்தில் வெற்றி சூடலாம் புதிய தொழில் தொடங்கலாம்.
கலைத்துறையில் சாதனை படைக்க
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் கால பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து, புனுகு பூசி, ரோஜா மாலை சூட்டி ,வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல், சேமியா பாயசம், பழம் வைத்து அர்ச்சனை செய்து 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலை துறையில் சாதனை படைக்கலாம்.