ராகு கேது தோஷம் எப்படி கண்டு பிடிப்பது? எப்போது பரிகாரம் செய்ய வேண்டும் ? பரிகாரம் என்ன ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ராகு கேது தோஷம்

ராகு கேது(Rahu kethu bagavan) என்பவை நிழல் கிரகங்கள் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகின்றன. நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் வலிமை வாய்ந்தவை ஆகும். பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது எந்த கிரகங்களுடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரகத்தின் அடிப்படை குணத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. ராகுவும் கேதுவும் நல்ல கிரகங்களுடன் சேர்ந்தால் நல்ல பலனும், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் தீய பலனும் அளிக்கும் குணம் உடையவை ஆகும்.

ஒருவரது ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவு தரும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் தள்ளி போகும்.

 ராகு கேது தோஷம் ஏற்படுவது ஏன் ??

நம் மூதாதையர்கள் பல்வேறான உதவிகள் செய்து புண்ணியங்களை நமக்கு தேடிக் கொடுத்து இருந்தாலும், அவர்கள் மற்றவர்களுக்கு செய்த சில பாவங்களை எடுத்துக்காட்டவே அடுத்த தலைமுறையினருக்கு ராகு கேது தோஷம் ஏற்பட ஒரு காரணமாக அமைகின்றது.

வயதான பெண்களை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தினால் அவர்களின் தலைமுறைக்கு ராகு கேது தோஷம் ஏற்படுகிறது. இது குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறாமல் தடுக்கவும், களத்திர ஸ்தானத்தில் ராகு, ஜென்மத்தில் கேதுவாக மாறி கெடுதலை செய்கிறது.

ராகு கேது தோஷம்

கோவில் இடங்களை ஆக்கிரமித்து ஆண்டவனின் கோபத்திற்கு ஆளானதான் இந்த தோஷம் ஏற்படலாம்.

தம்பதிகளை ஏதேனும் பகையால் பிரித்தால் மூன்றாம் தலைமுறையினருக்கு இந்த தோஷம் ஏற்படலாம்.

மூதாதையர்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்தினால் அல்லது துன்புறுத்தினால் அக்குழந்தைகள் விட்ட ஒவ்வொரு துளி கண்ணீரும் அவர்களின் தலைமுறைக்கு ராகு கேது தோஷமாக விஸ்வரூபம் எடுக்கும்.

குடும்பங்களைப் பிரித்து வயதானவர்களிடம் சாபம் வாங்கியதால் சாபம் நிறைவேற குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் கேதுவுமாக இருந்து மூன்றாவது தலைமுறையினரின் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் இந்த ராகு-கேது கெடுக்கும்.

சகோதரர்களை மதிக்காமலும், உண்மை பாசத்தை உதறித்தள்ளி கைவிட்டாலும் அல்லது அவர்களை ஏமாற்றியதால் அவர்கள் இட்ட சாபம் ஒருவருக்கு 3-வது வீட்டில் ராகுவும் தர்ம-கர்ம ஸ்தானம் 9-ம் வீட்டில் கேதுவும் இருக்கிறார்கள்.

நம்பிய நண்பருக்கு நம்பிக்கை துரோகம் செய்து அவர்களின் சொத்தை அபகரித்தல் முன் ஜென்மத்தில் செய்தமைக்காக தற்போது 6-ஆம் வீட்டில் ராகு அல்லது கேது அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது இருக்கலாம்.

வேலை செய்தபோது கூலி கொடுக்காமல் ஏமாற்றினாலோ அல்லது மற்றவர்கள் வேலையை பறித்து பாவமும் சேர்ந்து ராகு -கேதுவாக  மாறி ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்து தொழிலில் முன்னுக்கு வர முடியாமல் ராகு 4-ல் அல்லது  10-ல் கேது 4-ல் அல்லது 10-ல் அமர்ந்து தடுக்கின்றது.

சொத்துக்களை ஏமாற்றி பறித்து பெற்ற தாயின் சாபத்தையும், முன் ஜென்மத்தில் அந்த அன்னையின் கண்ணீர் ராகு -கேது தோஷத்தை ஏற்படுத்துகின்றது.

ராகு கேது தோஷம்

 ராகு- கேதுவுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும் ?

  • செவ்வாய் திசையில் ராகு புத்தி ,கேது அந்தரம், நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்
  • ராகு திசையில் ராகு புத்தி ,கேது புத்தி நடக்கும் போது பரிகாரம் செய்யலாம்.
  • சந்திர திசையில் ராகு புத்தி, அந்தரம் கேது புத்தி, கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்
  • குரு திசையில் கேது புக்தி, ராகு புக்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்.
  • சூரிய திசையில் எந்த புத்தி நடந்து கொண்டிருந்தாலும் அதில் ராகு அல்லது கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்,
  • சனி திசையில் ராகு -கேது புத்தி, சூரிய புத்தியில் ராகு -கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்,
  • கேது திசையில் சந்திர புத்தி, சூரிய புத்தி, புதன் புத்தியில், ராகு- கேது அந்தரம் நடக்கும்போது செய்யலாம்,
  • புதன் திசையில் சந்திர புத்தி, ராகு -கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்,
  • சுக்கிர திசையில் குரு புத்தி, கேது- ராகு அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்,

 ராகு- கேது பரிகாரங்கள்

கேதுவின் அருள் பெற விநாயகர் சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்,’காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது’. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.

புற்று இருக்கும் அனைத்து அம்மன் காளி கோயில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம்.நவகிரகத்தில் உள்ள ராகு- கேதுவிற்கும் விளக்கேற்றலாம்.சிவன் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடவேண்டும்.

பெருமாள் கோவிலில் உள்ள விஷ்ணுவை புதன்கிழமை ராகு காலத்திலும் வணங்குவது நல்லது.

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடவும்.

ராகு கேது தோஷம்
  • தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபாடு செய்யலாம்,
  • ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி ஞாயிற்று கிழமை ராகு காலத்தில்வழிபடவும்.விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்,
  • பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடவும்,
  • பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்,
  • ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒருபொழுது மட்டும் விரதம் இருக்கலாம்,
  • வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழ மாலை சாற்றி வழிபடவும்,
  • எலுமிச்சம்பழ மாலையில் 27 அல்லது 45 என்ற எண்ணிக்கையில் பழம் இருக்க வேண்டும்,
  • அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடவும்,
ராகு கேது தோஷம்

 ராகு- கேது பரிகார ஸ்தலங்கள்

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும்.
நவதிருப்பதிகளில் தொலைவில்லிமங்கலம் பரிகார ஸ்தலமாகும்.
சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன
கும்பகோணம் அருகே கீழப் பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும்

 

Leave a Comment

error: Content is protected !!