தலம்
திருப்பாம்புரம்
தெய்வம்:
ஸ்ரீ பிரமராம்பிகை உடனாய
ஸ்ரீ பாம்புரேஸ்வரர் திருக்கோயில்
வழிபட வேண்டிய முறை
இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமி , அம்பாள் மற்றும் ஏக சரீர இராகு , கேது பகவானுக்கு ராகு காலத்தில் அபிஷேகம் செய்விக்க வேண்டும். இராகு , கேதுவுக்கு நீலம் மற்றும் பல வண்ண ஆடையைச் சார்த்த வேண்டும். சங்கு புஷ்பம் , மல்லிகை , நீலமந்தாரை . இலுப்பைப்பூ , செவ்வரளி , நாகலிங்கப்பூ ஆகியவை இராகு கேது பகவானுக்கு பிடித்தவை.
அர்ச்சனை முடிந்தபின் உளுத்தம் பருப்பு பொடி மற்றும் கொள்ளுப் பொடி அன்னம் நிவேதனம் செய்து தானம் செய்ய வேண்டும்.
கருவறையில் நெய் தீபம் நிறைய ஏற்றச் செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு
தேவாரத் திருத்தலங்களுள் 176 – ஆவது தலம். சோழ நாட்டுக் காவிரி தென்கரைத் தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால் இங்கு வந்து வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
வழித்தடம்
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்கு முன்னதாகவே கற்கத்திஎன்னும் ஊரிலிருந்து 3 கி.மீ.ல் உள்ளது.
நடை திறக்கும் நேரம்
காலை : 07.00 -12.30 மாலை : 04.00 – 08.00
தொலைபேசி எண்கள் 0435-2469555 , 94430 - 47302
கோவில் அமைந்துள்ளது இடம்
ஸ்ரீ பாம்புரநாதர் கோயில்
திருப்பாம்புரம் , சுரைக்காயூர் அஞ்சல் – 612 203 பாலையூர் வழி , குடவாசல் வட்டம் , திருவாரூர் மாவட்டம்.