Homeஜோதிட குறிப்புகள்லக்கினத்திற்கு 2- ல் செவ்வாய்

லக்கினத்திற்கு 2- ல் செவ்வாய்

லக்கினத்திற்கு 2- ல் செவ்வாய்
  • முன் கோபம் உள்ளவர்.
  • நல்ல கல்வி ஏற்பட வாய்ப்பு இல்லை.
  • இராகு கேது சேர்ந்தால் நெறி தவறுபவர்.
  • கீழ்த்தரமாகப் பேசுவார்.
  • இவர் சொத்து இவருக்கே உபயோகப்படாது.
  • ஓரிரு வருடத்தில் ஒரு சகோதரன் பிறப்பான்.
  • இவர் மனைவிக்கு தீயால் ஆபத்து நிகழலாம்.
  • குடும்பத்தில் சண்டை அடிக்கடி ஏற்படும்.
  • முன் யோசனை இன்றி அதிக செலவு செய்து திண்டாடுவார்.
  • சுக்கிர சேர்க்கைப் பெற்றால் சூரிய – சந்திரன் தசையில் தரித்திரம் ஏற்பட்டு விடுகிறது. எதிரிகளை வெல்லுதல் , எடுத்த காரியங்களில் வெற்றி.
  • சூரியன் – குரு – சனி – ராகு – கேது சேர்க்கை – பார்வை இல்லாவிட்டால் செவ்வாய் தோஷம் உண்டு. நிறைய பணம் சம்பாதிக்கும் பாக்கியம் வரும்.
லக்கினத்திற்கு 2- ல் செவ்வாய்
  • தனித்த செவ்வாய்க்கு குரு பார்வை ஏற்பட்டால் தொழில் விருத்தி , தனபாக்கியம் ஏற்படும். கோபம் ஏற்பட்டாலும் உடனே அமைதியடைவார்.
  • சிம்மம் , விருச்சிகம் , மகரம் , கும்ப லக்கினத்திற்கு 2 ல் செவ்வாய் அமைந்து ராகு கேது சம்பந்தப்பட்டால் கீழ்த்தரமாகவும் சில சமயங்களில் அசிங்கமாகவும் பேசக் கூடும்.அதிக செலவாளி. கடன் ஏற்படும் எவரையும் மதிக்க மாட்டார். படிப்பில் ஆர்வம் குறையும். அந்திய காலங்களில் மனைவியை இழப்பார்கள். கெட்ட உணவு உண்பார். உலோக வகை சொத்து வரும் ; விரைவாக பேசும் தன்மை ஏற்படும். தலைவலி , ஜனப்பகை , சோராக்கினி , விஷ பீதி , கெட்ட உணவுகளால் உடலுக்கு தீங்கு , குடும்பத்தில் சண்டை , சச்சரவு ஏற்பட்டு அமைதியின்றி போகும். முன் கோபம் வாக்குவாதம் துன்புறுத்தும் தன்மை குழந்தைகளுக்கு தோஷம் , கருச் சிதைவு , பேச்சில் உறுதி , வைராக்கிய குணம் இவைகளுண்டு.
  • செவ்வாய் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்கினம் , சந்திரன் , தசாபுக்தி , அந்திர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுபபலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும். தீய பலன்கள் செயல் படாது.
  • செவ்வாய் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புக்தி அந்தர நாதன் இருப்பின் சுபபலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும். தீய பலன்கள் பலப்படும். சொல்லப்பட்ட பலன்கள் செவ்வாய் தசா – புத்தி – அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!