லக்கினத்தில் சந்திரன்
வளர்பிறைப் பொதுப்பலன்:
- கல்வி அறிவு நிறைவு ஏற்படலாம்.நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பு – உணவு , உடைக்கு , கவலை இல்லாநிலை . உத்தியோகத்தில் நல்ல மதிப்பும் – மனைவிக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கித் தந்து மகிழ்வான்.அரசு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு .
- பொருளாதாரத்தில் 22 – லிருந்து25 வயதிற்குள் பிரபலமடைவான் .
- தனக்கு மேற்பட்டவர்களுடன்தான் நட்பு ஏற்படும்.வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு . அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பவர்.பிறரை வசீகரிக்கும் தோற்றம் உடையவர். நல்லவர் – கெட்டவர் இருவரையும் சமமாக நேசிப்பார்.
- படிப்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இல்லையேல் தடை ஏற்படும். இவர்களில் சிலர் தன் கடமையில் தவறுவர்.இதை பிறர் சுட்டிக் காட்டும்போது வெட்கமடைவர்.
- சில சமயங்களில் பிடிவாத குணம் – இவர்களுடைய போக்கு , நடத்தை மூதாதையர்களைத் தழுவியதாக இருக்கும்.பாபரால் பார்க்கப்பட்டால் நோய் உண்டு.
தேய்பிறையில் பலன் மாறும் :
- சந்திரன் நீச்சப்பட்டு 6 , 8 , 12 – க்குரியவர் பார்வை சேர்க்கை பெற்றும் , தேய்பிறை சந்திரனாகி பாவர் பார்வை – சேர்க்கைப் பெற்று இருந்தால் இருமல் வியாதி க்ஷயரோகம் அல்லது செவிடு ஊமை போன்றவைகளால் பாதிக்கப்பட்டு மரணமும் அடைவதுண்டு.
- வழக்குகளில் வெற்றி – தந்திரங்களைக் கையாள்வதில் தனித்திறமை வைத்தியத் துறையில் நன்மை ஆகியவனவும் தரும் .
- சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னாதிபன் , தசா புத்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுபபலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும். தீய பலன்கள் செயல்படாது .
- சந்திரன் நின்ற நடசத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்ன அதிபதி , தசா புத்தி , அந்தர நாதன் இருப்பின் சுபபலன் கள் பலப்பட்டு சிறப்பு தரும் தீய பலன்கள் பலப்படும்.
- சொல்லப்பட்ட பலன்கள் சந்திர தசா புத்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும்.