கும்ப லக்னம் பற்றிய விரிவான தகவல்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கும்ப லக்னம்

ராசி மண்டலத்தில் 11ஆவதான கும்ப லக்னம். கால புருஷனின் இரண்டு கணுக்கால்களையும்குறிக்கும். ஆண் அல்லது ஒற்றை ராசியாகும். ஸ்திர ராசி, சிரோதய ராசி, வாயு தத்துவத்தைக் கொண்டது. கும்ப லக்னத்தின் அதிபதி சனி. இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்களில் அவிட்டம் 3, 4ஆவது பாதங்கள், சதயம், பூரட்டாதி முதல் 2 பாதங்கள்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள்

இதில் பிறந்தவர்கள் நடுத்தரத்திற்கு மேல் உயரமுள்ளவர்கள். நல்ல உடலமைப்புடன் கவர்ச்சியாக இருப்பார்கள். அகண்ட முகமும் பருத்த கழுத்தும் உடையவர்கள். தெய்வ பக்தியும் இரக்க குணமும் உள்ளவர்கள். தனக்கென ஒரு தனிகொள்கையுள்ளவர்.உழைப்பாளிகள். நல்ல ஞாபக சக்தி உள்ளவர். எதையும் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். எளிதில் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதே சமயம் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள்.

கும்ப லக்னம்

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். கேளிக்கைகளில் விருப்பமுள்ளவர்கள். படித்தவர்களின் நட்பை நாடுவார்கள். தான் எந்த அளவு படிப்பிலும் அறிவிலும் உயர்ந்தவராக வேண்டும் என்று எண்ணுகிறாரோ அந்த அளவு தன் வாழ்க்கைத் துணையும் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.

கிரகங்களின் ஆதிபத்திய பலன்கள்

சூரியன்

7க்குடையவர் சனிக்குத் தந்தை என்றாலும் இருவரும் பகைவர்கள்; ஆனாலும் கேந்திராதிபதியான இவர் இந்த லக்னத்திற்குச் சுபர் என்பதே பெரும்பான்மையான கருத்து. இவர் 7-ல் ஆட்சியானால் பதிபக்தியும், திறமையும், பொறுப்புமுள்ள மனைவி வாய்ப்பாள். மனைவியால் சம்பத்து கூடும். வியாபாரத்தில் விருத்தியுண்டு. நல்ல வசதியும் செல்வாக்கும்உள்ளவர் கூட்டாளியாக வரக்கூடும்.

இவர் கெட்டால் மேலே கூறிய பலன்கள் மாறுபடும். அரசால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும். 9-ல் நீசம் பெற்றால் களத்திர தோஷம், தன நஷ்டம், கூட்டு வியாபாரநாசம் ஆகிய கெடுபலன்கள் ஏற்படும். ஆக சூரியன் வலுப்பது நல்லது.

சந்திரன்

ரண, ருண, ரோக, சத்துருஸ்தானமான 6ஆம் இடத்துக்குடைய சந்திரன் பாபியாகிறார். இவர் வலுத்தால் ஆஸ்துமா, மார்பில் சளி, வயிற்றுவலி அப்பண்டிசிடிஸ், சைனஸ் போன்ற வியாதிகள் தொந்திரவு கொடுக்கும்.

இவர் 10-ல் நீசம் பெறுவது ஒரு விதத்தில் நல்லதே. இவர் லக்னாதிபதி சனியுடன் பரிவர்த்தனையாவது நல்லது என்ற கருத்தும் உள்ளது.

செவ்வாய்

தைரியஸ்தானமான 3ஆம் இடத்திற்கும், ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் சுபராகவே சொல்லப்பட்டுள்ளது. தைரியம், வெற்றி, சகோதர அனுகூலம், பெரிய பதவி, ராணுவம், போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றில் உத்தி யோகம், லக்ஷ்மிகடாக்ஷம் ஆகிய சுப பலன்களைக் கொடுப்பார்.

கும்ப லக்னம்

இவர் 3 -ல் ஆட்சியானாலூம் 10-ல் ஆட்சியானாலும் நல்ல உத்தியோகம் கிட்டும். 3ஆம் இடம் ஸ்திர லக்கினத்திற்கு மாரகஸ்தானமாவதால் இவர் வலுத்தால் ஆரோக்கியம் திருப்தியளிக்காது. மற்றபடி, சகோதரம், தைரியம், வெற்றி, தொழில் ஆகியவை நன் றாகவே இருக்கும்.

அரசு அலுவலகம் காவல், ராணுவம், மருத்துவம். தொழிற்சாலை, தீயணைப்பு படை,கட்டிடத்தொழில் பொறியியல்துறை. வங்கி,தபால், ஆகிய துறைகளில் உத்தியோகம் அமையலாம்

கட்டிடப்பொருள். நீப்பெட்டி, வீட்டுமனை,மண்ணெண்ணெய், மின் தளவாடங்கள், தங்கநகை.. பவழம் ஆகியவற்றின் வியாபாரம் விருத்தி பெறும்.

புதன்

5ஆம் இடமான சுபஸ்தானத்திற்கும் 8ஆம்இடமான அசுப ஸ்தானத்திற்கும் அதிபதி புதன், 8ஆம் இடம் புதனுக்கு ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண ஸ்தானமாக அமைவதால் அசுப ஆதிபத்தியமே வலுப் பெறுகிறது. ஆகையால் இவர் பாபி என்பதே பெரும் பான்மையான கருத்து. இவர் 5ல் ஆட்சியானால் 5ஆம் இடப்பலன்கள் வலுக்கும். இவருடன் சனியோ சுக்கிரனோ சேர்ந்தால் சுபபலன்களை அளிப்பார்.

இவர் 8-ல் ஆட்சியாகி இதர பாபிகளின் சம்பத்தம் பெறாவிட்டால் சரளயோகமாகும். நீண்ட ஆயுள், திடபுத்தி, தைரியம், வித்தை, தளம்,புத்திரம் ஆகியவை வலுத்துக் காணப்படும். இவர் 9ல் இருந்தால் அந்த பாவம் பலம் பெறுவதால் புத்திரபாவம் வலுத்தாலும், கடன், கவலை கஷ்டம் ஆகிய கெடுபலன்களை அளிப்பார். பொதுவில் இவர் சுபர்களுடைய சம்பந்தம் பெறுவது நல்லது.

குரு

தனம், லாபம் ஆகிய இரண்டு முக்கிய இடங்களுக்குக் குரு அதிபதியாகிறார். இவரே தனகாரகராவதால் இவரின் முக்கியத்துவம் கூடுகிறது. ஆனாலும் இவரைச் சுபர் என்றோ யோகாதிபதி என்றோசொல்ல முடியாது. இவர் தனித்து இருந்தால் நன்மைகளைச் செய்து விடமுடியாது. ஆனால் இவருடன் சேர்ந்தக் கிரகத்தின் காரக பலனையும், இவர் பார்க்கும் பாவத்தையும் விருத்தி செய்வார்.

உதாரணமாக இவர் செவ்வாயையும் 10ஆம் இடத்தையும் பார்த்தால் அரசாங்கத்தில் பெரிய உத்தியோகம் கிடைக்கும். இவர் 4-ஆம் இடத்தையும் சுக்ரனையும் பார்த்தால் (வாகன ஸ்தானம், வாகனகாரகன்) உயர்ந்த வாகனயோகம் கிட்டும்.ஆக குரு சுப பாவத்துடனும் அந்த பாவதிபதியுடனும் சேருவது உத்தமம்.

சுக்கிரன்

கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திற்கும் திரினேஸ்தானமான 9 ஆம் இடத்திற்கும் அதிபதியாவதால் சுக்கிரன் சிறப்பு விதிப்படி சிறந்த’ ராஜயோககாரகராகிறார். கேந்திராதிபத்தியமும் பாதகாதிபத்தியமும் பெறும் சுக்கிரன் பாபியல்லவா என்ற சந்தேகம் வரும். கேந்திராதிபத்தியமும் கோனாதிபத்தியமும் ஒரே கிரகத்திற்கு ஏற்பட்டால் அந்த கிரகம் பிரபல ராஜயோகத்தைத் தரும் என்று பின்வரும் செய்யுலான தாண்டவமாலை வலியுறுத்துகிறது.

”கேந்திர கோணத்த திபரொரு வராகில் கிளர்சுப

யோக பலனைக் கொடுப்பா”

ஆகையால் சுக்கிரன் பூரண யோககாரகர்.

இவர் வலுத்தால் படிப்பு, தாய் சுகம், வீடு, வாகளம், தளம், பிதுரார்ஜித சித்தி, குரு, தெய்வ அனுக்ரகம் ஆகியவை சிறப்பாக அமையும். சுக்கிரன் கெட்டால் மேலே கூறிய பலன்கள் கெடும். இவர் வலூக்க வேண்டும்.

கும்ப லக்னம்

சனி

லக்னம்,விரயம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் சொந்தமான சனி சுபரே. காரணம் லக்னம் மூல திரிகோணஸ்தானமாக அமைவதே. இவர் வலுத்தால் தேகசுகம், கவுரவம், பெயர், புகழ், வருமானம் ஆகியவை ஏற்றம் பெறும், ஆயுள் விருத்தியடையும். இவர் கெடக்கூடாது.

சுபர் அசுபர் விளக்கம்

சுபர்

பெரும்பாலான நூலாசிரியர்கள் புதனும்,சுக்கிரனும் சுபரென்று கூறியுள்ளனர். கேந்திர கோணாதிபத்தியம் பெற்றதால் சுக்ரனும், பஞ்சமாதிபத்தியம் பெற்றதால் புதனும் சுபராக சொல்லபட்டுள்ளது

சந்திர காவிய நூலாசிரியர் சனியும் சுபன் என்கிறார்.

ஆக சனி, சுக்ரன்,புதன் மூவரும் சுபர்.

பாபி

குரு,சந்திரன்,செவ்வாய் மூவரையும் பாபி என்று எல்லர நூல்களும் ஒருமித்த கருத்தைக் கூறுகின்றன. செவ்வாய் தசம கேந்திராதிபத்தியம்’பெற்றும்’ கூடப் பாபி என்று செல்லுவதற்கு காரணம் ஸ்திர லக்னத்திற்கு மாரகஸ்தானமான 3ஆம் ஆதிபத்தியம் செவ்வாய்க்கு ஏற்பட்டதே.

யோகாதிபதி

தாண்டவமாலை சுக்கிரன் ஒருவரே யோகத்தை அளிப்பார் என்கிறது. அஷ்டமாதிபத்தியம் பெற்றதால் புதனை யோகாதிபதியாகச் சொல்லவில்லை.

ஜாதக அலங்கார நூலாசிரியர் புதனையும் யோகாதிபதி என்று கூறுகிறார். சந்திர காவிய நூலாசிரியர். சுக்ரன் செவ்வாய் கூடினால் ராஜயோகம் என்கிறார். சுக்ரன் ஒருவரே தனித்து நின்றாலும் யோகத்தைத் தருவார். புதனும் செவ்வாயும் சுக்கிரனுடன் கூடினால் யோகத்தை அளிப்பார்கள். இது தர்மகர்மாதிபதி யோகமாகும்.

மாரகாதிபதி

பொதுவாக குரு, சந்திரன், செவ்வாய், புதன் ஆகியோர் மாரகம் செய்யக் கூடியவர்கள். பெரும்பாலான நூல்களில் குரு கொல்லமாட்டார்;புதன் கொல்லக்கூடும்; சந்திரனும் செவ்வாயுமே கொல்வார்கள் என்று கூறியுள்ளனர்.

கவனமுடன் இருக்க வேண்டிய கால கட்டம்

மாதுர் தோஷம்(தாய்க்கு கண்டம்)

  • சனி தசை-சுக்கிரன், ராகு புக்திகள்.
  • புத தசை -சுக்ரன், ராகு, சனி புக்திகள்.
  • சுக்ர தசை-சுக்ரன், சந்திரன், ராகு, சனி புக்திகள்.
  • சந்திர தசை-செவ்வாய், ராகு, சனி புக்திகள்.
  • ராகு தசை -ராகு, சுக்ரன், சந்திரபுத்திகள்.

மேற்படி தசாபுக்திக் காலங்களில் மாதாவுக்குக் கஷ்ட நஷ்டங்களோ, கண்டாதிபிணிகளோ, அல்லது மரணமோ அல்லது மாதாவால் கஷ்ட நஷ்டமோ அல்லது அவருடன் விரோதமோ, பிரிவினையோ ஏற்பட லாம்.

பிதுர் தோஷம்(தந்தைக்கு கண்டம்)

  • சூரியன் தசை-ராரு, சுக்கிர புக்திகள்.
  • சந்திர தசை-ராகு, சனி, சுக்கிர புக்திகள்.
  • ராகு தசை-ராகு, சனி, கேது புக்திகள்.
  • சனி தசை-ராகு, சனி, சூரிய புக்திகள்.
  • சுக்கிர தசை – சுக்கிரன், சந்திரன், ராகு, சனி புக்திகள்.

மேற்படி தாசபுக்திக் காலங்களில் தந்தையால் கஷ்ட நஷ்டங்களோ, அல்லது அவருடன் விரோதமோ, பிரிவினையோ அல்லது அவருக்குக் கஷ்ட நஷ்டங் களோ, கண்டாதி பிணிகளோ, மரணமோ நேரக் கூடும்.

திருமண யோகம்(திருமணம் நடை பெறும் காலம் )

  • சூரிய தசை சந்திரன் , குரு புக்திகள்.
  • ராகு தசை-ராகு, புதன், சுக்ர புக்திகள்.
  • சந்திர தசை-ராகு, புதன், சுக்ர புத்திகள்.
  • சனி தசை-புதன், சந்திரன், ராகு புக்திகள்.
  • புதன் தசை – சுக்ரன், சுந்திரன், ராகு, குரு, சனி புக்திகள்.
  • சுக்ர தசை-சுக்கிரன், சந்திரன், ராகு, புத புக்திகள்.

மேற்படி தசாபுக்திக் காலகளில் திருமணம் நடப்பதோ மனைவியால் ஆதாயங்கள், அனுகூலங்கள் ஏற்படுவதோ, மனைவிக்கு முன்னேற்றமும் சுப பலன்களும் நடப்பதோ நிகழும்.

களத்திர தோஷம்(மனைவிக்கு கண்டம்)

  • சூரிய தசை-ராகு, சுக்ரன்,சனி புக்திகள்
  • செவ்வாய் தசை-ராகு, சனி, குரிய யுக்திகள்.
  • ராகு தசை-புதன், சுக்ரன் சூரியன் புக்திகள்.
  • குரு தசை-குரு,சனி, சுக்ரன், ராகு புக்திகள்..
  • சனிதசை-சுக்ரன், சந்திரன், ராகு புக்திகள்.
  • சுக்கிரதசை-சுக்ரன், சந்திரன், ராகு புக்திகள்.

மேற்படி தசா புக்திகளில் மனைவியுடன் விரோதம் அல்லது பிரிவிளை அல்லது மனைவியால் கஷ்டநஷ்டங்கள் அல்லது அவருக்குக் கண்டாதி பிணிகளோ மரணமோ நிகழலாம்.

புத்திரயோகம்

  • சந்திர தசை – சந்திரன், குரு புக்திகள்.
  • செவ்வாய் தசை-ராகு, சனி, சுக்கிர புக்திகள்.
  • ராகு தசை-குரு,சுக்கிரன், சூரியன், சந்திர புக்திகள்.
  • குரு தசை-குரு, சனி, புத, சுக்கிர, சந்திர புக்திகள்
  • சனி தசை-புதன், குரு, சுக்கிர புக்திகள்.
  • சுக்கிரதசை – சூரியன், சந்திரன், குரு, புத

மேற்படி தசாபுக்திக் காலங்களில் புத்திரம் ஏற்படுவதோ, புத்திரர்களுக்குச் சுபபலன்களாக நடப்பதோ, புத்திரர்களால் ஆதாயங்கள். அனுகூலங்களைப் பெறுவதோ நடக்கும்.

புத்திர தோஷம்

சந்திர தசை – சந்திரன், சனி, சுக்ரன் சூரிய புக்திகள்.

செவ்வாய் தசை-சனி சுக்கிரன் சூரியன், சந்திர புக்திகள்.

ராகு தசை-சனி, சுந்திரன், சூரியன், சந்திர புக்திகள்.

குரு புக்திகள், தசை-சனி, சுக்கிரன். சூரியன், சந்திர புத்திகள்

சனி தசை – சனி, சுக்கிரன், சூரியன், சந்திர புக்திகள்.

சுக்கிர தசை-சனி,சுக்கிரன், சூரியன். சந்திர புக்திகள்.

மேற்படி தசா புக்திக் காலங்களில் புத்திரர்களுக்குக் கஷ்ட நஷ்டமோ, கண்டாதிபிணிகளோ, அல்லது மரணமோ அல்லது அவர்களுடன் விரோதமோ பிரிவினையோ ஏற்படக் கூடும்.

சகோதர தோஷம்

சூரிய தசை-ராகு, சுக்கிர புக்திகள்,

சந்திர தசை-செவ்வாய்,ராகு,சனி,சுக்கிர புத்திகள்

ராகு தசை-ராகு, சுக்ரன், சந்திர புக்திகள்.

புத தசை – சுக்ரன், ராகு, சனி புக்திகள்.

சுக்கிர தசை-சுக்ரன், சந்திரன், ராகு, சனி புக்திகள்

ஆகிய தசாபுக்திக்காலங்களில் சகோதரனுடன் விரோதம்,பிரிவினை, அவரால் கஷ்ட நஷ்டம் அல்லது அவருக்குக் கண்டாதி பிணிகள் அல்லது மரணம் ஏற்பட கூடும்.

மாரகம்(மரணம்)

சந்திரன் தசை-எந்த நேரமும்.

செவ்வாய் தசை-எந்த நேரமும்

குரு தசை- சனி, சுக்ரன், ராகு புக்திகள்

சூரிய தசை-சனி ,ராகு புத்திகள்

ராகு தசை – ராகு,செவ்வாய் புத்திகள்

மேற்சொன்ன காலங்களில் கஷ்ட நஷ்டமோ கண்டாதி பிணிகளோ அல்லது மரணமோ நேரலாம்.

யோக தரும் காலங்கள்

சுக்கிர தசை-சுய புக்திக்கு மேல்.

செவ்வாய் தசை -குரு, சனி சுக்கிர புக்திகள்

செவ்வாய் தசை -குரு, சனி, சுக்கிர புக்திகள்

சனி தசை -சுக்கிரன், செவ்வாய், குரு புக்திகள்

மேற்படி சுபர்களின் தசா புத்தி காலங்களில் சுப பலன்களை எதிர்பார்க்கலாம்;.

யோக தரும் கிரக அமைப்புகள்

  • செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்தால் தர்மகர்மாதிபதி யோகமாகும்

பாவார்த்த ரத்னாகரா இதற்கு மாறான கருத்தைத் தெரிவித்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

  • லக்னத்தில் ராகு சுக்கிரன் சேர்ந்து இருக்க, 10ல் சூரியன் இருந்தால் யோகம்.
  • குரு2ல் ஆட்சி பெற, சனி குருவைப்பார்த்தால் இருவர் தசையும் யோகம்.
  • லக்னத்தில் குருவும் 2ல் சனியுமாகப் பரிவர்த்தனையானால் குரு தசை சுபபலன்களை அளிக்கும்.
  • சூரியன்,குரு,புதன் மூவரும் 3ல் இருந்தால் சூரியன் அரசியல் யோகத்தைக் கொடுப்பான்.
  • சனியும் சுக்கிரனும் சேர்ந்து 11ல் இருந்தால் சுக்கிர தசை யோகபலனை அளிக்கும்.
  • புதன் சனியுடனோ, சுக்ரனுடனோ சேர்ந்தால் யோக பலன்களை அளிப்பார்.
  • சந்திரன் 10ல் இருந்தால் தொழிலில் ஓரளவு ஏற்றமளிப்பார்.
  • சனி லக்னத்தில் இருக்க, குரு 2ம் இடத்தைப் பார்த்தால் இருவர் தசையும் சுபபலனை அளிக்கும்.
  • சனி தனித்து 10ல் இருந்தால் தனயோகம்
  • சனி 9ல் உச்சமானால் அதிர்ஷ்டம், பொருளாதார முன்னேற்றம், புகழ் ஆகியவற்றை அளிப்பார்.
  • லக்னத்தில் புதனும், 2-ல் சுக்கிரனும், குருவோ சந்திரனோ 3ஆம் இடத்திலும் இருக்க ஜோதிடம் போன்ற கலைகளில் பாண்டித்யம் ஏற்படும்.
  • சனி ,புதன், சுக்கிரன் மூவரும் லக்னத்தில் இருக்க, குரு 5, 7 அல்லது 9-ல் இருந்து லக்னத்தைப் பார்த்தால் ராஜயோகம்.
  • 7ஆம் அதிபதி சூரியன் உச்சம் பெற, குரு 7-ல் அமர, சனி தனுசில் அமர்ந்து குருவின் பார்வை பெற மனைவியால் யோகம் ஏற்படும்.
  • 10-ல் செவ்வாய் ஆட்சி பெற, சூரியன் ஆட்சி அல்லது உச்சம் பெற, சனியும் உச்சமானால் ராணுவம் அல்லது காவல்துறை அதிகாரியாவார்.
  • விருச்சிகத்தில் சுக்கிரனும், ரிஷபத்தில் செவ்வாயும் பரிவர்த்தனை ஆனால் பெரிய பதவி, அந்தஸ்து புகழ் கிட்டும்.
  • லக்னம் 9, 10க்கு உடையவர்கள் ஆட்சியானால் பெரிய அரசு அதிகாரியாகும் யோகம். மூவரும்
  • 3ஆம் அதிபதி 7 ஆம் அதிபதி பரிவர்த்தனை ஆனால் அரசு அதிகாரியாவான்.
  • சூரியன் , புதன், சுக்ரன் மூவரும் மேஷத்தில் இருந்தால் அரசு அதிகாரி.

உதாரண ஜாதகம்

கும்ப லக்னம்

7ம் அதிபதி 10ம் அதிபதி பரிவர்த்தனை,3ல் ராகு சனியால் பார்க்கப்படுகிறார்,9ம் அதிபதி 4ம் அதிபதி சுக்கிரன் 11ல் 10ம் அதிபதி 7ல் இருந்து தன் வீட்டையே பார்க்கிறார்.6இல் சனி 3ல் ராகு லட்சுமி கடாச்சம் புகழ் கீர்த்தி.

1 thought on “கும்ப லக்னம் பற்றிய விரிவான தகவல்கள்”

Leave a Comment

error: Content is protected !!