12 ராசிகளில் சனி பகவான் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

 12 ராசிகளில் சனி பகவான் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்

மேஷத்தில் சனி

  • இங்கே சனி நீசம்.
  • ஆசாமி முட்டாள்தனமானவன். பேச்சும் அப்படித்தான் இருக்கும்.
  • ஊர்சுற்றி
  • வாய்ப்புக்கிடைத்தால் நடத்தை தவறுபவன். நேர்மையற்றவன்.
  • புரிந்துகொள்ளமுடியாதவன்.
  • சிலர் கொடூரமானவர்களாக இருப்பார்கள்.
  • சிலர் சட்டத்திற்கும் இயற்கைக்கும் எதிரான வேலைகளைச் செய்யக்கூடியவர்கள்.

ரிஷபத்தில் சனி

  • இது சுக்கிரனின் வீடு. இங்கே சனி இருந்தால்உணர்வுகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடியவர்.
  • கறுப்பானதோற்றத்தை உடையவர்.
  • சூதுவாது நிறைந்தவர்.
  • சம்பிரதாயங்களுக்குஎதிரானவர்.
  • எடுத்த காரியத்தை நிறைவேற்றக்கூடியவர்கள்.
  • அதிகாரம் மிக்கவர்கள்
  • தந்திரமிக்கவர்கள்
  • சிலருக்கு இரு மனைவிகள் அமையும். சிலர் எப்போதும் கவலையோடு இருப்பார்கள்

சனி-செவ்வாய் சேர்க்கை

மிதுனத்தில் சனி

  • இது புதனின் வீடு. இங்கே சனியிருந்தால் ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான்.
  • ஒழுங்கில்லாதவன்.
  • துன்பங்கள் சூழ்ந்தவன்.
  • ஒல்லியான தேகமுடையவன்.
  • யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன் அல்லது முடியாதவள்.
  • சிலர் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள்.
  • குறுகியமனப்பான்மை மிக்கவர்கள்
  • இரசாயனம், இயந்திரங்கள் சம்பந்தட்ட துறையில் சிலர் ஆர்வம்
    கொண்டிருப்பார்கள்.
  • சூதாட்டங்களில் விருப்பமுள்ளவர்கள்

 12 ராசிகளில் சனி பகவான்

கடகத்தில் சனி

  • இது சந்திரனின் வீடு சிலரை ஏழ்மை வாட்டும்.
  • மன சந்தோஷத்திற்காக அலைபவர்கள்.
  • மெதுவாகச் செயல்படுபவர்கள். டல்லாக இருப்பார்கள்.
  • சிலர் சூதுவாது நிறைந்தவர்கள்.
  • சுயநலமிக்கவர்கள்.
  • பிடிவாதமுடையவர்கள்.
  • சந்திரன் அன்னைக்கு உரிய கிரகம். அந்த வீட்டில் சனியின் அமர்வு
    சிலருக்கு அனனையின் அரவனைப்பு கிடைக்காமல் போய்விடும்.
  • வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும்.

சிம்மத்தில் சனி

  • பிடிவாதமுடையவர்கள். எதற்கும் வளைந்து போகாதவர்கள் அதிர்ஷ்டமில்லாதவர்கள்.
  • முரண்பாடுகள் மிக்கவர்கள்.
  • மாறுபட்ட ஒவ்வாத சிந்தனையுடையவர்கள்.
  • சிலர் கடின உழைப்பாளிகள்.
  • சிலர் எழுத்தில் பரிணமளிப்பார்கள், அதாவது எழுத்தாளர்களாக இருந்து சிறப்படைவார்கள்

12வீடுகளில் மாந்தி இருக்கும் பலன்கள்

கன்னியில் சனி

  • கறுப்பான தோற்றமுடையவர்கள்.
  • வாக்குவாதங்கள் செய்பவர்கள்.
  • மாறுபட்ட சிந்தனை உடையவர்கள்.
  • நிலைப்பாடுகள் இல்லாதவர்கள்.
  • குறுகிய மனப்பான்மை மிக்கவர்கள்.
  • அதிரடியானவர்கள்.
  • பழமைவாதிகள்.
  • உடல் நலக் குறைபாடுகள் இருக்கக்கூடியவர்கள்

துலாம்  ராசியில் சனி

  • இது சனீஷ்வரனின் உச்ச வீடு. இங்கே சனி இருப்பது நன்மையைத் தரும்.
  • ஜாதகனை அவன் இருக்கும் துறையில் புகழ் பெற வைக்கும்.
  • ஜாதகன் அறநிலைகளை உருவாக்குபவனாக விளங்குவான் அல்லது தலைமை ஏற்பான்.
  • செல்வந்தனாக இருப்பான்.
  • உயரமாகவும் அழகுள்ளவனாகவும் விளங்குவான்
    (இது இயற்கையில் சுக்கிரனுடைய வீடு – அதனால் அந்த அம்சங்கள் ஜாதகனுக்கு
    ஏற்படும்) அப்படி இல்லாதவர்கள் ஏன் எனக்கு அப்படி இல்லை என்று கேட்க
    வேண்டாம். இருந்தால் மகிழ்வு கொள்ளுங்கள். இல்லை என்றால் ஜாதகத்தின்
    வேறு சில அம்சங்களை வைத்து அப்படி இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
  • ஜாதகன் தற்பெருமை உடையவனாக இருப்பான் (இருக்காதா பின்னே?)
  • அதிகாரம் உள்ளவன்.
  • மதிப்பும், மரியாதையையும் உடையவன்.
  • சாமர்த்தியசாலி எதையும் தீர்மானிக்ககூடியவன்.
  • சுதந்திரமனப்பான்மை மிக்கவன்
  • சிலர் பெண்களுக்கு சேவகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்

 12 ராசிகளில் சனி பகவான்

விருச்சிகத்தில் சனி

  • இது செவ்வாயின் வீடு. இது சனி அமர்வதற்கு உகந்த இடம் அல்ல!
  • ஜாதகன் அவசரக்காரன். படபடப்பானவன். கடினமானவன் (அதாவது கடினமான
    மனதையுடையவன்) மகிழ்ச்சியில்லாதவன்.
  • உடல்நலமில்லாதவன்.
  • சிலருக்கு நெருப்பு, விஷம், விபத்து போன்றவற்றால் தீமைகள் நிகழலாம்.
  • சிலர் கட்டுப்பெட்டித்தனமாக தான் என்று தனிமையாக வாழ்வார்கள்
  • சிலருக்கு வாழ்க்கை மொத்தமும் பயனில்லாமல் போய்விடும்

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்- பூசம்-அனுஷம்-உத்திரட்டாதி-திருவாதிரை-சுவாதி-சதயம்-அசுவினி-மகம்-மூலம்

தனுசு ராசியில் சனி

  • இது குருவின் வீடு. இங்கே சனி இருப்பது நல்லது. இயற்கையில் ஒரு
    சுபக்கிரகத்தின் வீடாகையால் இங்கே அமரும் சனி அடக்கி வாசிப்பார்.
  • ஜாதகன் பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
  • அவன் இருக்கும் துறையில் புகழ் பெறுவான்.
  • கடமை உணர்வுள்ள குழந்தைகள் அவனுக்கு இருக்கும்.
  • வயதான காலத்தில் அவைகள் அவனை அரவனைத்துக் காப்பாற்றவும் செய்யும்.
  • அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்

மகரத்தில் சனி

  • இது சனியின் சொந்த வீடு.
  • ஜாதகனின் குடும்ப வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும்.
  • ஜாதகன் புத்திசாலியாகவும், சாமர்த்தியம் மிக்கவனாகவும் திகழ்வான்
  • சிலர் சுயநலம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
  • சிலர் சந்தேக மனப்பான்மை கொண்டவர்களாகவும், பழிவாங்கும் எண்ணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
  • சிலர் அதிகம் கற்றவர்களாகவும் இருப்பார்கள்

 12 ராசிகளில் சனி பகவான்

கும்பத்தில் சனி

  • இதுவும் சனியின் சொந்தவீடு.
  • வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்தவர்களாக இருப்பார்கள்.
  • யதார்த்த அனுகுமுறைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள்
  • மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.வாழ்க்கை நிறைகுடமாக இருக்கும்.

மீனத்தில் சனி

  • இதுவும் குருவின் வீடு. இங்கே சனியின் அமர்வு நன்மைகளை உடையதாக
    இருக்கும்.
  • ஜாதகன் சாமர்த்தியசாலியாக இருப்பான்.
  • அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான்.
  • எல்லோரும் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வான்.
  • நல்ல விசுவாசமான மனைவி கிடைப்பாள்.
  • வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • மற்றவர்களுக்கும் ஜாதகன் உதவியாக இருப்பான்,

குறிப்பு :
இங்கே சொல்லப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பொதுப்பலன்கள்.தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களைவைத்து இப்பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

Leave a Comment

error: Content is protected !!