12 ராசிக்கும் சனி தரும் பலன்கள்- வராக மிகிரர்
மேஷத்தில் சனி
மேஷத்தில் சனி இருக்க பிறந்தவன் சுய புத்தி-அறிவு இல்லாதவனாகவும், பிறர் சொல்வதை கேட்காதவனாகவும், கள்ளம்- கபடு உள்ளவனாகவும், சினேகிதர்கள் இல்லாதவனாகவும், தேச சஞ்சாரியாகவும் இருப்பான்.
மிதுனம் மற்றும் கன்னியில்-சனி
மிதுனம்-கன்னியில் சனி இருக்கப் பிறந்தவன் தரித்திரமும்- துக்கம் உடையவனாகவும், வெட்கம்-மானம்-சுகம் இல்லாதவனாகவும்-தனம்-புத்திரன் இல்லாதவனாகவும், சித்திரம்-எழுத்து வேலை காவலாளி போன்ற வேலைகளை செய்பவனாகவும் இருப்பான்.
விருச்சிகத்தில் சனி
விருச்சிகத்தில் சனி இருக்க பிறந்தவன் இரக்கம்-தயவு இல்லாதவனாகவும், காரியத்தை அக்கறையுடன் செய்யாது வெற்றி அடையாதவனாகவும், நிலையான புத்தி-எண்ணம் இல்லாதவனாகவும், காராக் கிருகம் எனும் சிறைப்படுபவனாகவும், சண்டை-சச்சரவுகளில் ஈடுபடுபவனாகவும் இருப்பான்.
ரிஷபத்தில் சனி
ரிஷபத்தில் சனி இருக்கப் பிறந்தவர் அதிக தனம் இல்லாதவனாகவும், தாழ்ந்த குல பெண்களுடன் உடலுறவு சம்போகம் செய்பவனாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி உள்ளவனாகவும் இருப்பான்.
கடகத்தில் சனி
கடகத்தில் சனி இருக்க பிறந்தவன் தரித்திரம் உள்ளவனாகவும், தாயை விட்டுப் பிரிந்திருப்பவனாகவும், விகாரமான பற்களை உடையவனாகவும், மூடனாகவும்- புத்தி இல்லாதவனாகவும், புத்திரன் இல்லாதவனாகவும் இருப்பான்.
சிம்மத்தில்-சனி
சிம்மத்தில் சனி இருக்க பிறந்தவன் புத்திரன்-சுகம் இல்லாதவனாகவும், துக்கம் உடையவனாகவும், தனம் இல்லாதவனாகவும், மூட்டை தூக்குதல் போன்ற சாமானிய வேலைகளை செய்து ஜீவிப்பவனாகவும் இருப்பான்.
துலாம் ராசியில் சனி
துலாம் ராசியில் சனி இருக்க பிறந்தவன் தனவந்தனாகவும், கிராமம் அல்லது நகரத்துக்கு தலைவனாகவோ- முக்கியஸ்தனாகவோ உள்ளவனாகவும், சேனாதிபதியாகவும் ,புகழுடையவனாகவும் இருப்பான்.
தனுசு மற்றும் மீனத்தில் சனி
தனுசு மீனத்தில் சனி இருக்கப் பிறந்தவர் அதிக தனம் உடையவனாகவும், நற்குணம் உடையவனாகவும், நல்ல மனைவி-புத்திரர்கள் உள்ளவனாகவும், தீர்த்தயாத்திரை-ஆலயதரிசனம் செய்பவனாகவும், மற்றவர்களால் நல்ல மரணம் என்று சொல்லக்கூடிய மரணம் அடைபவனாகவும், அரசாங்க உயர் பதவியில் இருப்பவனாகவும், அரச விசுவாசம்-நம்பிக்கை உடையவனாகவும், கடைசி வயதில் கஷ்டப்படாமல் சுகமாக உள்ளவனாகவும் இருப்பான்.
மகரம் மற்றும் கும்பத்தில் சனி
தன் சொந்த வீடாகிய மகரம் கும்பத்தில் சனி இருக்கப் பிறந்தவர்கள் நிலையான தனம் உடையவனாகவும், பார்வை குறைபாடு உள்ளவனாகவும், நகரம் அல்லது கிராமம் அல்லது சேனைக்கு தலைவனாகவும், அரசரின் அபிமானம் பெற்றவனாகவும், பிறர் மனைவி-தனம் ஆகியவற்றின் மேல் ஆசை கொள்பவனாகவும், சேமிக்கும் எண்ணம் இல்லாதவனாகவும், அசுத்தமாகவும்,தான் சேர்க்கும் தனத்தை தானே அனுபவிப்பவனாகம் இருப்பான்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …