Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கும்பம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கும்பம்

குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) – கும்பம்

சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி கிரக நிலைகள் -2023

சனி பகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!!! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 2 மற்றும் 11-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானமான 4-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே திருமணம் ,நண்பர்கள் (7-மிடம் ) பாக்கியஸ்தானம் (9-மிடம்) லாபம் (11மிடம்) ஸ்தானங்களில் பதியும்.

இதுவரையில் இரண்டாம் இடத்தில் இருந்து யோக நிலைகளை வழங்கி வந்த குருபகவான் தற்சமயம் ராசிக்கு 3-ம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு மூன்றில் சஞ்சரிக்கும் காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்படுத்தும், இடையூறுகள் இருக்கும், வீடை மாற்ற வேண்டிய சூழ்நிலை, ஊர்விட்டு ஊர் போகும் நிலை, உத்தியோகத்தில் இடம் மாறுதல்கள், சகோதரர்களிடம் வீண் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

இளைய சகோதரர்களுடன் மனக்கசப்புகள் உண்டாகும். செக் மோசடிகள், பங்குச் சந்தைகளில் பண நஷ்டங்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் நஷ்டங்கள் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆன்லைன் மூலமாக ஏமாற்றங்கள் நிகழும். தகவல் நுட்பங்களில் கவனத்துடன் செயல்படுங்கள். அதிக கடன்கள் வாங்க வேண்டாம். நம்பிக்கை துரோகங்கள் நிகழும். கூட இருந்தே குழி பறிப்பார்கள் யாரை நம்புவது என குழப்பமாக இருக்கும்.

ஒருவரின் வீரம்-வீரியம்-தைரியம்-ஆண்மை-வேகம்-விவேகம் குறிக்கும் முக்கியமான இடம் மூன்றாம் பாவகம் ஆகும். உப ஜெயஸ்தானம் என்பவை 3,6,10,11-ம் இடங்கள் ஆகும். கோச்சாரரீதியாக இந்த குரு பெயர்ச்சி கும்ப ராசிக்கு மூன்றாம் இடம் என்பதால் மேற்சொன்ன பலன்கள் பொருந்தி வரும். சுய ஜாதகத்தில் மூன்றாம் இடம் வலுப்பெற்று இருந்தால் அந்த பாதிப்புகள் அதிகமாக இருக்காது. கோச்சார பலன்கள் 15 சதவீதம் மட்டுமே, மற்றபடி சுய ஜாதக பலனை 85 சதவீதம்.

கும்ப ராசிக்காரர்களுக்கு ஆடம்பர செலவு செய்வது என்பது சுத்தமாக பிடிக்காது. சுகத்தையும் சோகத்தையும் சமமாக பாவிப்பார்கள். இவர்கள் முன்கோபம் அதிகம் கொண்டவர்கள்.அதுவும் நியாயமான கோபமாக தான் இருக்கும்.

குருவின் பார்வை பலன்கள்

குரு பகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியின் ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன் மனைவி உறவு பலப்படும்உறவினர்கள் மூலமாக ஆதாயங்கள் உண்டாகும்.கூட்டத்தொழில் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். மனக்கசப்புகள் அகலும். திருமண சுப காரியங்கள் நிகழும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பகவான் ஏழாம் பார்வையாக உங்கள் ராசியில் ஒன்பதாம் இடத்தை பார்ப்பதால் தந்தை மகன் உறவு பலப்படும். தந்தையால் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். விற்காத சொத்துக்கள் விற்பனையாகும். கடன்கள் அடைபடும். ஆதாயங்கள் வந்து சேரும். வெளிநாடு பயணம் செல்லலாம். வெளிநாடு வேலை மூலமாக வருமானம் கிடைக்கும். சுப செலவுகள் உண்டாகும். விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் நடக்கவும் வாய்ப்பு உண்டு.

குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியின் 11ஆம் இடத்தை பார்ப்பதால் மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். லாபங்கள், வருவாய் சேமிப்பு உருவாகும். நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். உடலில் அபார நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

பலன் தரும் பரிகாரம்

அருகில் இருக்கும் சிவன் பார்வதியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.ஒரு முறை திருவண்ணாமலை சென்று தரிசனம் செய்யுங்கள்.முடிந்தால் கிரிவலம் செல்லுங்கள்.உங்கள் வழக்கை பிரகாசிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!