Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-29-3-ம் வீட்டு கிரக பலன்கள் -மகரிஷி பராசரர்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-29-3-ம் வீட்டு கிரக பலன்கள் -மகரிஷி பராசரர்

3-ம் வீட்டு கிரக பலன்கள் -மகரிஷி பராசரர் 

3-ம் வீட்டு கிரக பலன்கள் : 3ம்-(3rd house in astrology) வீட்டில் சுபர் இருந்தால் அல்லது சுபர் பார்வை பெற்றால் ஜாதகர் கூடப்பிறந்தவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள்.

 
3-வது (3rd house in astrology) இடத்தில் சுபகிரகம் தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால் அந்த ஜாதகர் தனது சகோதரர்களுடன் நல்ல உறவும், தைரியசாலியாகவும் இருப்பார். 
 
3-வது வீட்டு அதிபதி செவ்வாயுடன் இருந்து 3-வது வீட்டைப் பார்த்தால் நல்ல பலன்களை அனுபவிப்பர். மேலும் இரண்டு கிரகங்களும் மூன்றாம் வீட்டில் சேர்ந்து இருந்தாலும் அந்த ஜாதகர் நல்ல பலன்களை அனுபவிப்பார்
 
3-வது வீட்டு அதிபதி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களுடன் அசுபர்கள் சேர்ந்து அசுப ராசியில் இருந்தால் சகோதரர்களுக்கு தோஷமாகும்.
 
 3-வது (3rd house in astrology) அதிபதி பெண் கிரகம்அல்லது 3-வது இடத்தில் பெண் கிரகம் இருப்பின் அவருக்கு பின் சகோதரிகள் பிறப்பார்கள்.ஆண் கிரகம் ஆண் ராசியில் இருப்பின் இளைய சகோதரர் பிறப்பார்.சுபர் அசுபர் சேர்ந்து இருப்பின் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும்.
 
3-ம் வீட்டு கிரக பலன்கள்
 
 இவைகளின் முடிவுகள் பற்றிய பலத்தையும் பலவீனங்களையும் பரிசீலித்து முடிவு செய்தல் வேண்டும்சனியும் புதனும் நடுநிலைமை வகிக்கும் கிரகங்கள். ராகு, கேது நிழல் கிரகங்கள் சகோதரரை தீர்மானிப்பதற்கு அல்லது பிரசவம் தீர்மானிப்பதற்கு சனியும் ராகுவும் ஆண் கிரகங்களாகவும், புதன் கேது பெண்கள் கிரகங்கள் என்றும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
 
 3-வது (3rd house in astrology) அதிபதியுடன் செவ்வாய் சேர்ந்து எட்டாம் வீட்டில் இருப்பின் உடன்பிறப்பை இழக்க வேண்டி வரும். 
 
செவ்வாய் அல்லது 3-வது வீட்டு அதிபதி கோணங்களிலும் அல்லது 120°பாகைகளிலும் அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் நட்பு பகுதிகளிலே இருந்தாலும் நன்மையான பலன்கள். 
 
சகோதரர்கள்,  சகோதரிகள் எண்ணிக்கை: புதன் 3-வதிலும், அதேசமயம் 3-வது அதிபதி சந்திரன் (செவ்வாய்) சனியுடன் சேர்ந்து இருந்தால் பலன்கள்(1) அங்கே மூத்த சகோதரி மற்றும் இளைய சகோதரர்கள் இருப்பார்கள். மேலும் 3-வது சகோதரர் அல்லது சகோதரி இறந்துவிடுவார் .
 
செவ்வாயும் ராகுவும் சேர்ந்து 3-வது அதிபதி தன்னுடைய ராசியில் நீசம் பெறுவதால் இளைய சகோதரர்/ சகோதரிகள், 3 மூத்த சகோதரர்கள் சகோதரிகளை ஜாதகர் அடைவார்கள் என்பதாகும். 3-வது அதிபதி கோணத்திலும், ராசி அதிபதி உச்சம் பெற்றும், 120° பாகையில், குருவின் சேர்க்கை இருப்பின் 12பேர் உடன் பிறப்பார்கள். அவர்களில் 2 மூத்தவர்கள்,3,7,9, 12-வது இளையவர்கள் குறைந்த ஆயுளை உடையவர்களாகவும், மற்றவர்கள் 6 பேர்களும் நீண்ட வாழ்நாள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 
 
நடைமுறையில் இருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். 
 
உடன்பிறந்தோர் பிறந்த பன்னிரெண்டாம் அதிபதி செவ்வாய் மற்றும் குரு உடன் 3-வது அதிபதியும் , சந்திரனுடன் சேர்ந்திருந்தால் 7 பேர் உடன் பிறப்பாகும், 3-ல் சந்திரன் தனியாக இருந்து ஆண் கிரகத்தின் பார்வை பெற்றால் அங்கே இளைய சகோதரர்கள் இருப்பார்கள். அதேசமயம் சுக்கிரன் பார்வை பெற்றால் இளைய சகோதரிகள் குறிப்பதாகும்.
 
பகை கிரகங்கள்: சூரியன் 3-வது இடத்தில் மூத்த குழந்தையை அழித்துவிடும், பிறகு பிறக்கவிருக்கும் குழந்தை 3-இல் சனியால் இறந்துவிடும். மேலே கூறிய நிலையில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் இருப்பின் முதலில் மற்றும் பின்பு பிறந்த இரண்டையும் அழித்துவிடும். 
 
கிரகங்களின் பலத்தையும் பலவீனத்தையும் யோகம் ஆகியவற்றை பரிசீலித்து சகோதரர்களை/சகோதரிகளை பற்றி தெரிவிக்க வேண்டும்…மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்…
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!