Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-30-4ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-30-4ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்

4ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்

 
வீடு அமையும் யோகம்:
4-ம் இடத்ததிபதி 4-ல்  நிற்க(4th house in astrology) அல்லது லக்னாதிபதி நான்கில் இருந்தாலும் சுபகிரகங்கள் பார்வை பெறின்,அந்த ஜாதகர் முழுமையாக வசிக்கும் வீட்டின் பலன்களை அனுபவிப்பார்கள்.
 
5-ம் வீட்டதிபதி 4-ல் நிற்க நவாம்சத்திலும் சொந்த வீட்டில் நிற்க, அல்லது உச்சமாக இருப்பின், அந்த ஜாதகருக்கு நிலம் ,வீடு வாகனம் ஆகியவைகள் அடைந்தவராகவும், வாத்தியக் கருவிகள் நிறைந்தவராகவும் இருப்பார். 
 
வசிக்கும் வீட்டின் உயந்த நிலை:
10-ம் இடத்து அதிபதி 4-ம் இடத்து அதிபதி உடன் கேந்திர, திரிகோணங்களில் நிற்பின் அந்த ஜாதகருக்கு அழகான வீடுகள் அமையும், அடுக்குமாடி கட்டிடத்தை பெறுவார். 
 
புதன் லக்னத்தில் நிற்க நான்காம் இடத்து அதிபதி சுபக் கிரகமாக அமைய, சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகர் சுற்றத்தாரால் பாராட்டு பெறுவார்கள்.
 
நான்காம் இடத்தில் சுபர் நிற்க 4-ஆம் இடத்து(4th house in astrology) அதிபதி உச்சம் பெற்று இருப்பின் அந்த ஜாதகரின் தாயார் நீண்ட நாள் உயிர் வாழ்வார் 
 
4ம் வீட்டு கிரக பலன்கள்
4-ம் இடத்து அதிபதி கேந்திரத்தில் இருக்க, சுக்கிரனும் கேந்திரத்தில் நிற்க, புதன் உச்சம் ஆக இருப்பின் அந்த ஜாதகரின் தாயார் சந்தோசமாக வாழ்வார்.
 
4-ல் சூரியன், சந்திரன், சனி 9-ல் செவ்வாய் 11-ல் இந்த அமைப்புள்ள ஜாதகர் நிறைந்த கால்நடைகள் உள்ளவராக இருப்பார். 
 
நான்காம் வீடு சர ராசியாக அமைந்து நான்காம் இடத்தில் செவ்வாயும்,4-ம் அதிபதி  6,8ல்  இருந்தால் அவரது காது கேட்கும் திறனை இழப்பார்.
 
லக்னாதிபதி சுபராகவும், 4-ஆம் இடத்து அதிபதி சுபராக 11-ல் நிற்க, 12 ல் சுக்கிரன் நின்றால், அந்த ஜாதகர் தனது பன்னிரண்டாவது வயதில் வாகன வசதி பெறுவார் 
 
சூரியன் 4-லும், 4-ம் இடத்து அதிபதி உச்சம் பெற்ற சுக்கிரன் உடன்  நிற்க, அந்த ஜாதகர் 32 வயதில் வாகன வசதிகளை பெறுவார்.
 
 4-ஆம் இடத்து(4th house in astrology) அதிபதியும் பத்தாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை ஆக, நவாம்சத்தில் 4-ஆம் இடத்து அதிபதி உச்சம் ஆயின் அந்த ஜாதகர் தனது 42 வயதில் வாகன வசதிகளை அடைவார்.
 
4 மற்றும் 11-ம் இடத்து அதிபதிகள் பரிவர்த்தனை ஆயின் அந்த ஜாதகர் 12 வயதில் வாகன வசதிகளை பெறுவார்.
 
நான்காமிடத்தில் சுபர் இருப்பின் சுபப் பலன்களும் நான்காம் இடத்தில் பாபர் சம்பந்தப்பட்டிருக்கும் அசுபப் பலன்களும் கிட்டும்.
 
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ..
RELATED ARTICLES

1 COMMENT

  1. லக்கினத்திற்கு 4மிடத்ததிபதி லக்கினத்தில் இருந்தால் என்ன பலன்..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!