5-ல் சந்திரன்
ஐந்தாமிடம் சுபச் சந்திரன் சம்பந்தம் பெற்றிருந்தால் , ஜாதகர் கடந்த ஜென்மத்தில் தாயை தெய்வமாகப் போற்றி கவனித்திருப்பார். ஏராளமான அன்னதானம் வழங்கியிருப்பார். தன்னுடைய சிறந்த கற்பனை வளம் , ஓவியத் திறமை போன்றவற்றால் ஆன்மிகத் தொண்டு புரிந்திருப்பார். குழந்தைப்பேறு சமயத்தில் பிறருக்கு உதவிசெய்திருப்பார்.தான் பெறாத பிள்ளைகளுக்கும் தாயாக இருந்திருப்பார்.
சந்திரன் பாவத் தன்மை பெற்று 5 – ஆமிட சம்பந்தம் அமைந்தால் , பெற்ற தாய்க்கு உணவு கொடுக்காமல் விரட்டியிருப்பார். குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு துன்பம் இழைத்திருப்பார்.நீர்நிலைகளைப் பாழாக்கியிருப்பார்.பிறரை பைத்தியமாக்கி இருப்பார்.வயதான பெண்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியிருப்பார்.ஆன்மிக பயணங்களில் அனாச்சாரம் செய்திருப்பார்.
Also Read





