அடிப்படை ஜோதிடம்-பகுதி-35-8-ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

8-ம் வீட்டு கிரக பலன்கள் (8th house in astrology)

8-ம் வீட்டு கிரக பலன்கள்:  இடத்தின் அதிபதி திரிகோணங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்

  • எட்டாம் இடத்து அதிபதி லக்னாதிபதியுடன் இருப்பினும் பாவ கிரகங்களுடன் இருப்பினும் எட்டாமிடத்தில் இருப்பினும் அந்த ஜாதகருக்கு ஆயுள் குறைவு. சனியின் நிலையையும் பத்தாம் இடத்து அதிபதியும் பரிசீலித்து பலன் கூறவேண்டும்
  • ஆறாம் இடத்து அதிபதி 12-ல் இருந்தாலும், ஆறாம் அதிபதி ஆறில் நிற்க, பன்னிரண்டாம் அதிபதி 12-ல் நிற்கவும் அல்லது 6 மற்றும் 12-ம் அதிபதி லக்னம் மற்றும் பனிரெண்டில் இருந்தாலும் நீண்ட ஆயுள்
  • நவாம்சத்தில் 5, 8 மற்றும் லக்னாதிபதி தனது சொந்த நவாம்சத்தில், சொந்த ராசியில் நட்பு கிரக வீட்டில் இருப்பினும் அந்த ஜாதகர் நீண்ட நாள் உயிர் வாழ்வார்
  • லக்னாதிபதி எட்டாம்(8th house in astrology) இடத்திலும், பத்தாம் இடத்தின் அதிபதி திரிகோணத்திலோ, கேந்திரத்திலோ, பதினோராம் இடத்தில் பலமாக இருப்பினும் நீண்ட ஆயுளை உடையவர்
  • இதுபோல் பல கணக்கீடுகள் உள்ளது ஒரு கிரகத்தின் பலம் மற்றும் அசுப பலம் ஆகியவற்றை மதிப்பீடு ஆயுள் கணிதம் கூற வேண்டும்
  • எட்டாம் அதிபதி(8th house in astrology) கேந்திரத்தில் நின்றிட,லக்னாதிபதி பலமற்று இருப்பின் அந்த ஜாதகருக்கு 20 முதல் 32 வயதாகும்
  • லக்னாதிபதி பலமற்று,8-ம் வீட்டில் பாவ கிரகங்கள் நிற்க எட்டாம் அதிபதி பலம் இல்லாமல் இருந்தால் அந்த ஜாதகருக்கு ஆயுள் குறைவாகும்
  • எட்டாம் இடத்திலும், எட்டாம் இடத்து அதிபதி, 12-ஆம் இடமும் பாவர்கள் ஆக இருப்பின் ஜாதகர் பிறந்த உடன் இறப்பார்.
  • எட்டாம் அதிபதி(8th house in astrology) பலம் இழந்து, பாபக்கிரகங்கள் கேந்திர, திரிகோணங்களில் இருப்பின் சுபகிரகங்கள் ஆறிலும் எட்டிலும் நிற்க அந்த ஜாதகர் பிறந்த உடன் உயிர் விடுவார்
  • 5-மிடம், 8-மிடம், எட்டாம் இடத்து அதிபதி இவைகள் அனைத்தும் பாவ கிரகங்கள் இருப்பின் அந்த ஜாதகர் வாழ்வில் குறைவாகவே இருக்கும்
  • எட்டாம் அதிபதி(8th house in astrology) எட்டில் இருக்க சந்திரன் பாவ கிரகங்களுடன் இருக்க சுபகிரகம் பார்வை இல்லை எனில் அந்த குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் உயிர் விடும்
  • லக்கினாதிபதி உச்சம் பெற்றிட, லக்னத்தில் இருந்து 11ல் சந்திரனும், 8-ல் குருவும் நிற்பின் அவர் நீண்ட நாள் உயிர் வாழ்வார்
  • லக்னாதிபதி மிக பலமாக இருந்து கேந்திரங்களில் உள்ள சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் ஜாதகர் நிறைந்த செல்வத்துடன் நீண்ட நாள் உயிர் வாழ்வார்

Leave a Comment

error: Content is protected !!