குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-தனுசு ராசி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-தனுசு ராசி

குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!!

இதுவரையில் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான மகரத்தில் இருந்து வந்த குருபகவான். தற்போது மூன்றாம் இடமான கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

இந்த சமயத்தில் அவருடைய விசேஷ பார்வைகளான 5, 7, 9-ஆம் பார்வை முறையே உங்கள் ராசிக்கு 7, 9, 11-ஆம் இடங்களில் பதியும். இந்த அமைப்பின்படி இந்த காலகட்டம் உங்களுக்கு சோம்பலும் சுணக்கமும் தவிர்த்தால் சுபிட்சத்தை தரக்கூடியதாக இருக்கும். உழைப்பு அதிகம் இருக்கும், ஊதியம் உயர்வடையும், அதனால் சலிக்காமல் செயல்படுவதுதான் சாமர்த்தியம்.

குரு பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசியினர் இன் பொதுவான குணநலன்கள்:

  • தனுசு ராசியினர் பொதுவாக ஆன்மீகவாதிகள் ‘தப்பு செய்தால் சாமி கண்ணை குத்திடும்’ எனும் கோட்பாடு உடையவர்கள்.
  • இவர்கள் குடும்பத்தினர் சற்று பழமைவாதிகளாக இருப்பர்.
  • இளைய சகோதரர் சற்று சோம்பேறித்தனமாகவும், எதையும் மூடிமறைத்து பேசுபவராகவும் இருப்பார்.
  • தாய்-தந்தை தெய்வ நம்பிக்கை உடையவர்களாக ஒரு கோவில், குளம் விடாமல் சுற்றுபவர்களாக இருப்பர்.
  • இவர்களுடைய குலதெய்வம் கோபம் நிறைந்த சாமியாக இருக்கும்.
  • இவர்களது வேலை கலை, பயணம்,கட்டிடம் சம்பந்தமானதாக இருக்கும்.
  • வாழ்க்கை துணை வம்பு பேசும் புத்திசாலியாக அமைவார்.
  • பயணங்களாலும், வயதானவர்களும் இவர்களுக்கு சிரமம் ஏற்படும்.
  • சிலரது தந்தை ஈகோ நிறைந்தவராக, அரசு சம்பந்தம் உடையவராக இருப்பார்.
  • கணக்கு, கல்வி, காவியம் சம்பந்தமான தொழில் இருக்கும்.
  • மூத்த சகோதரி லட்சணமாக கலை நுணுக்கம் தெரிந்தவராக அமைவார்.
  • பூர்வீகம் சம்பந்தமாக அலைச்சல் செலவுகள் உண்டு.
குரு பெயர்ச்சி பலன்கள்

கும்ப குருவின் பொதுப்பலன்கள்:

தனுசு ராசிக்கு இரண்டாம் இடமான மகரத்தில் இதுவரை அமர்ந்து இருந்த குரு இப்போது 3-ஆம் இடமான கும்பத்திற்கு இடம் மாறுகிறார்.

தனுசுராசிக்கு குருவானவர் ராசி அதிபதி மற்றும் நான்காம் வீட்டின் அதிபதி ஆவார்.

குரு உங்கள் ராசி அதிபதியாகி, மூன்றாம் இடம் எனும் வீர,தீர,வீரிய ஸ்தானத்தில் இருக்கிறார். இதுவரையில் சொந்த பந்தங்களை பார்த்துக் பம்மி கொண்டிருந்தவர்கள் எல்லாம் பயம் தெளிந்து சகஜமாகி விடுவார்கள். இடமாற்றம் வந்தால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள் அதனை தைரியமாக எதிர் கொள்வார்கள்.

கடன் தொல்லையை எப்படி தீர்ப்பது என்று கவலைப்பட்டு கொண்டிருந்தவர்கள் ஒன்று மனையை விற்று கடனை அடைப்பார்கள். அல்லது ‘கடனை திரும்பக் கேட்க வந்து பாரு அப்புறம் தெரியும் சேதி’ என மிரட்டி அனுப்பி விடுவார்கள். வாரிசுகளிடம் பணிந்து சென்ற நிலைமாறி தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

மேலும் இந்த குரு குருப்பெயர்ச்சி உங்களுக்கு வீடு மாற்றம், வாகன பரிமாற்றம், மனை விற்பனை, பள்ளி மாற்றம், பால்காரர் மாற்றம், தண்ணீர் கேன் போடுபவர் மாற்றம், வயல் மாற்றம், தோட்டம் மாற்றம், பண்ணை குத்தகை, கைபேசி மாறுதல் என நிறைய மாறுதல் தரும்.

குருவின் பார்வை பலன்கள்:

குருவின் 5-ம் பார்வை பலன்:

குரு தனது ஐந்தாம் பார்வையால் தனுசு ராசியின் 7-ஆம் இடத்தை ஏறிட்டுப் பார்க்கிறார்.

7-ஆம் இடம் என்பது களத்திர ஸ்தானம் ஆகும்.கும்பத்துக்கு குடிபெயர்ந்த உடன் தனுசு ராசியினருக்கு குடும்ப அமைப்பை ஏற்படுத்தி விடுவார். கல்யாணம் நிச்சயம். உங்களில் ஒரு சிலர் காதல் திருமணம் கூட செய்து கொள்வீர்கள்.

வியாபாரம் கடை ஆரம்பிக்க நினைப்பவர்கள் இந்த காலகட்டத்தில் கடை திறந்துவிடுவீர்கள். ஏற்கனவே கடை வைத்திருப்பவர்கள் கிளைகளைத் திறப்பீர்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள்

குருவின் ஏழாம் பார்வை பலன்:

குரு தனது ஏழாம் பார்வையால் தனுசு ராசியின் 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இதன் மூலம் தனுசு ராசியினர் பலர் பேரன்- பேத்தி கிடைக்கப்பெறும் தாத்தா- பாட்டி அவர்கள்.

இந்த காலகட்டத்தில் தனுசு ராசியில் இருக்கும் அரசியல்வாதிகள் எந்த முயற்சியும் செய்யாமலேயே பெரிய பெரிய பதவிகள் தேடி வரும். இதைத்தான் அதிர்ஷ்டம் என்பர். அரசுடன் கொண்டிருந்த பகை தீர்ந்து சுமூக அனுசரணை உண்டாகும்.

அரசு வேலைக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம். வேலை அரசுப்பணி, அரசியல் என தொழில் சார்ந்தவர்களுக்கு ஒரு விதம் அறிவு தன்மை நீங்கி வாழ்வில் ஒரு புத்தொளி பிறக்கும். இதனை குருவின் பார்வை நன்கு ஈடேற்றும்.

உயர்கல்வி மேன்மை அடையும். தனுசு ராசி மாணவர்கள் மருத்துவம், கட்டிடக்கலை, மனிதவளம் போன்ற துறைகளில் பரிமளிப்பர். எப்போதும் இராத புதுவித சுறுசுறுப்பை உணர்வீர்கள். எனவே உங்களின் அன்றாட செயல்கள் வேகம் பெறும். இதனால் வாழ்வு வளமாகும்.

குருவின் 9ம் பார்வை பலன்:

குரு தனது 9ம் பார்வையால் தனுசு ராசியின் 11-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 11-ஆம் இடம் என்பது நினைத்ததெல்லாம் நிறைவேற்றித் தரும் காமதேனுவை போன்ற ஸ்தானம். இந்த இடத்தை குரு பகவான் தனது பார்வையால் நிரப்பும்போது என்னதான் கிடைக்காது தனுசு ராசிக்காரர்களுக்கு? அனைத்தும் கிடைக்கும். அளவில்லாமல் கிடைக்கும்!

முதலில் வேலை கிடைக்கும். தொழில் லாபம் பெருகும். புத்திரபாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் விலகும். கலைத்தொழில், திரைப்படம், தொலைக்காட்சி துறையினர் காட்டில் செல்வ மழை தான்.

தனுசு ராசியினர் வாழ்வியல் எவ்விதம் இருப்பினும் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு படி முன்னேற்றம் உண்டு. வட்டி, வங்கி தொழில் செய்வோர் பலன் காண்பர். வழக்குகள் வெற்றியடையும் காலம் இது.

பரிகாரம்:

  • இந்த காலகட்டத்தில் ஒரு முறை குருவாயூர் சென்று குழந்தை கிருஷ்ணனை தரிசித்து வாருங்கள்.
  • முடிந்தால் துலாபாரம் செலுத்துங்கள். மாதம் ஒரு வியாழக்கிழமை பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி சார்த்தி வழிபடுங்கள்.
  • ஏழை நோயாளிகளுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை வசந்தமாகும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …

Astrosiva telegram


Leave a Comment

error: Content is protected !!