Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி-64-சுவாதி நட்சத்திரம்

அடிப்படை ஜோதிடம் -பகுதி-64-சுவாதி நட்சத்திரம்

சுவாதி நட்சத்திரம் 

  • சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செயல்களை மிகவும் தைரியமாக முடிப்பார்கள். 
  • தங்களுடைய காரியங்களில் அரசர்களாக இருப்பார்கள் 
  • சிலர் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலில் ஈடுபடுவார்கள் 
  • சிலர் வணிக  பொருள்களுக்கு ஏஜெண்டுகளாக இருப்பார்கள் 
  • பண விவகாரங்களில் மிகவும் கவனம் உள்ளவர்கள் 
  • வர்த்தகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் 
  • இனிமையாகப் பேசுவார்கள் 
  • இரக்க குணம் உள்ளவர்கள் 
  • நேர்மையானவர்கள் 
  • தன் தர்மத்தை பற்றி பெருமையாக நினைப்பார்கள் 
  • அலங்காரப் பிரியர்கள் 
  • பெயர் புகழுடன் இருப்பார்கள் 
  • சிலர் கதைகள் எழுதுவார் 
  • சமூக சேவகர்களாக இருப்பார்கள் 
  • எப்போதும் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் 
  • வீடு வாங்கினால் அது கலைநயத்துடன் இருக்க விரும்புவர்
  •  நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு R ,T  ஆகிய ஆங்கில எழுத்துக்களில் பெயர் ஆரம்பிக்க வேண்டும் 
யோனி-மகிஷம் 
கணம்-தேவ கணம் 
நாடி-அனந்த நாடி 
அதிபதி-வாயுதேவன் 
கிரகம்-ராகு 
சுவாதி நட்சத்திரம்
 
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால் அது குணமாவதற்கு 17 நாட்கள் ஆகும்.
 
 நோய் குணமாக வாயோர கணேதி  மந்திரத்தை கூற வேண்டும்.
 
 நெய்யை தானமளிக்க வேண்டும்.
 
 அர்ஜுன மரத்தை வழிபட வேண்டும். 
 
பிறக்கும்போது ராகு பகவான் 6-ல் இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். 
 
ராகு சந்திரனுடன் எட்டில் இருந்தால் சீதளம் பிடிக்கும் 
 
ராகு செவ்வாயுடன் 6,8,12ல் இருந்தால் அடிக்கடி ஜுரம் வரும். 
 
குழந்தை வளர்ந்த பிறகு பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். 
 
ராகு, லக்னத்தில் சூரியன் இருந்தால் சூரிய கிரகணத்தால் விஷப் பூச்சிக் கடியால்  ஜுரம் வரும். 
 
ராகு சனி செவ்வாயுடன் எட்டில் இருந்தால், இளம் வயதில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதாயிருக்கும், திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
 
 ராகு சந்திரன் செவ்வாய் 8 ,12ல் இருந்தால் சீதளம் உண்டாகும். கபம் கட்டும்.
 
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்:
 
கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்
 
அம்மன்: பூங்குழலி
தல வரலாறு: 
படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு “தாத்திரீஸ்வரர்’ என்று பெயர். “தாத்திரீ’ என்றால் “நெல்லி.
சிறப்பு:
சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும்.
இருப்பிடம்: 
சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ.,
திறக்கும்நேரம்: 
காலை8- 10, மாலை 5-7
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!